News September 30, 2024

லட்டு விவகாரம்: சந்திரபாபு நாயுடுவுக்கு SC கண்டனம்

image

திருப்பதி லட்டு விவகாரம் தொடர்பாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது. திருப்பதி லட்டுவில் மாட்டுக் கொழுப்பு கலக்கப்பட்டது தொடர்பான வழக்கை சுப்ரீம் கோர்ட் இன்று விசாரித்தது. அப்போது, இந்த விவகாரத்தில் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை முடிவடையாத போது, எதற்காக பொதுவெளியில் இந்த விஷயத்தை கூறினீர்கள்? மத உணர்வுகளை மதிக்க வேண்டும் என தெரிவித்தது.

News September 30, 2024

வங்கதேசம் முதல் இன்னிங்ஷில் 233க்கு ஆல் அவுட்

image

2ஆவது டெஸ்டில் முதல் இன்னிங்ஷில் 233 ரன்களில் வங்கதேசம் ஆல் அவுட் ஆனது. கான்பூரில் நடைபெறும் இப்போட்டி, மழை காரணமாக தொடர்ந்து பாதிக்கப்பட்டது. எனினும் இன்று காலை போட்டி தொடர்ந்து நடந்தது. மொமினுல் ஹக் 107 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய அணி தரப்பில் பும்ரா அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை சாய்த்தார். முகம்மது சிராஜ், அஸ்வின், ஆகாஷ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

News September 30, 2024

மூலிகை: சிறுநீரக தொற்றைப் போக்கும் பாதாளமூலி

image

பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப்படுதலைக் குணப்படுத்தும் வன்மை பாதாளமூலி எனும் நன்னாரிக்கு இருப்பதாக சித்த மருத்துவம் கூறுகிறது. லூபியோல், சிட்டோஸ்டெரால், ஆல்பா அமிரின், ஹெக்ஸாட்ரியாகோண்டேன் போன்ற வேதிப்பொருட்கள் நிறைந்த இதன் வேரை இடித்து நன்னீரில் ஊறவிட்டு, எலுமிச்சைச் சாறு, கருப்பட்டி சேர்த்துப் பருகினால் சிறுநீரகப் பாதை தொற்று பாதிப்புகள் தீருமென சித்த மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

News September 30, 2024

BREAKING: 5 நாள்களுக்கு கனமழை எச்சரிக்கை

image

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு இன்று முதல் 5 நாள்களுக்கு சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று கோவை மாவட்ட மலைப்பகுதிகள், திருப்பூர், நீலகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, நெல்லை, குமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய 12 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். நாளை 7 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

News September 30, 2024

TN ALERT… மழை நிலவரத்தை அறிய புதிய செயலி

image

பருவமழை, வெயில் உள்ளிட்டவற்றை தற்போது மக்கள், தொலைக்காட்சி, செயலிகள், பத்திரிகை செய்திகள் மூலமே தெரிந்து வருகின்றனர். இந்நிலையில், மக்களுக்கு உடனுக்குடன் வானிலை நிலவரத்தை தெரிவிக்க தமிழக அரசு, TN ALERT என்ற பெயரில் புதிய செயலியை உருவாக்கியுள்ளது. சென்னையில் நடைபெற்ற பருவமழை தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் CM ஸ்டாலின் பேசியபோது இந்தத் தகவலை வெளியிட்டார்.

News September 30, 2024

கமல் – சல்மான் கூட்டணியில் உருவாகவுள்ள அட்லி படம்

image

பாலிவுட்டில் கமல்ஹாசன், சல்மான் கான் கூட்டணியில் இயக்குநர் அட்லி புதிய திரைப்படமொன்றை இயக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான கதை விவாதத்தில் அவர் ஈடுபட்டு வருவதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார். மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாக்க திட்டமிட்டுள்ள இப்படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News September 30, 2024

லட்டு விவகாரம்: மதியம் 1 மணிக்கு SC விசாரணை

image

திருப்பதி லட்டு தயாரிப்புக்கு பயன்படுத்தப்பட்ட நெய்யில் மாட்டு கொழுப்பு கலப்படம் செய்யப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில் இன்று மதியம் 1 மணிக்கு சுப்ரீம் கோர்ட் (SC) விசாரணை நடத்தவுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் விசாரணை நடத்தக் கோரி ஏராளமான மனுக்கள், SCஇல் தொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை இன்று மதியம் 1 மணிக்கு SC விசாரிக்கவுள்ளது.

News September 30, 2024

மேற்கு வங்கத்திற்கு உதவாத மத்திய அரசு: மம்தா

image

மே. வங்கத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளுக்கு மத்திய அரசிடம் இருந்து இதுவரை எந்தவொரு உதவியும் கிடைக்கவில்லை என்று அம்மாநில முதல்வர் மம்தா கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமருக்குக் கடிதம் எழுதினால், அவருடைய அமைச்சர்கள் எவரேனும் பதிலளிப்பதாகக் கூறிய அவர், கடும் பாதிப்பைச் சந்தித்துள்ள மே. வங்கத்திற்கு மட்டுமே பேரிடர் காலத்திற்கான வெள்ள மானியங்கள் வழங்கப்படவில்லை என்று சாடியுள்ளார்.

News September 30, 2024

GOOD NEWS: ஜியோ மீண்டும் அசத்தல்

image

3 மலிவு விலை திட்டங்களை ஜியோ நிறுவனம் வெளியிட்டுள்ளது. ₹51, ₹101, ₹151 விலையில் 3 திட்டங்களை ஜியோ களமிறக்கியுள்ளது. இதற்கு ஏற்கெனவே ஆக்டிவ்வில் உள்ள பிளானுடன் சேர்த்து இந்த கட்டணத்தை ரீசார்ஜ் செய்ய வேண்டும். ₹51க்கு ஒரு மாத வேலிடிட்டியுடன் 4G, 5G டேட்டா 3 GB கிடைக்கும். ₹101 ரீசார்ஜ் செய்தால் 6 GB 5G டேட்டாவும், ₹151 ரீசார்ஜ் செய்தால் 9 GB 4G, 5G டேட்டாவும் கிடைக்கும்.

News September 30, 2024

IND Vs BAN: லஞ்ச் பிரேக் வரை 205/6

image

இந்தியாவுடனான 2ஆவது டெஸ்ட் போட்டியில், வங்கதேச அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து வருகிறது. உ.பி., கான்பூரில் நடைபெறும் முதல் இன்னிங்சின் 4வது நாள் ஆட்டத்தில் BAN 205/6 ரன்கள் குவித்துள்ளது. அதிகபட்சமாக மொமினுல் 102*, நஜ்முல் 31 ரன்கள் எடுத்துள்ளனர். IND தரப்பில், அஸ்வின், ஆகாஷ் தீப் தலா 2, பும்ரா, சிராஜ் தலா 1 விக்கெட் வீழ்த்தியுள்ளனர். மழை காரணமாக 2, 3ஆம் நாள் ஆட்டம் தடைபட்டது.

error: Content is protected !!