News October 8, 2024

பிரதமரை சந்திக்கும் உதயநிதி

image

மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணிகளுக்கு நிதி வழங்கியதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பிரதமர் மோடியை, துணை முதல்வர் உதயநிதி விரைவில் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நிதி பற்றாக்குறை காரணமாக மெட்ரோ 2ஆம் கட்ட பணிகள் தாமதமானதால் பிரதமரை, முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில் சந்தித்து பேசினார். இதையடுத்து, ரூ.7,425 கோடியை மத்திய அரசின் பங்களிப்பாக வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்ட நிலையில் சந்திக்க உள்ளார்.

News October 8, 2024

Health Tips: இரண்டுக்கும் என்ன வித்தியாசம்?

image

கார்டியாக் அரெஸ்ட், மாரடைப்பு இரண்டும் வெவ்வேறானதென பலருக்கு தெரியாது. ரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு, இதயத்துக்கு ரத்தம் செல்வது தடைப்படுவதை, மாரடைப்பு என்கின்றனர். கார்டியாக் அரெஸ்ட் என்பது இதயத்துடிப்பு முடக்கத்தைக் குறிக்கும். மாரடைப்பு அறிகுறிகளில் தோள்பட்டை, மார்பு வலி, மூச்சுத் திணறல், பதட்டம், குமட்டல் ஆகியவை அடங்கும். கா.அரெஸ்ட் எவ்வித அறிகுறி இல்லாமல் தூக்கத்திலும் கூட வரலாம்.

News October 8, 2024

அக்.8: வரலாற்றில் இன்று

image

1932 – இந்திய விமானப்படை தொடங்கப்பட்டது.
1991 – குரோஷியா, சுலோவீனியா மக்கள் யுகோஸ்லாவியாவில் இருந்து பிரிவதற்கு ஆதரவாக வாக்களித்தனர்.
2001 – இத்தாலியின் மிலன் நகரில் இரண்டு விமானங்கள் வானில் மோதியதில் 118 பேர் இறந்தனர்.
2005 – காஷ்மிரில் ஏற்பட்ட 7.6 அளவு நிலநடுக்கத்தில் பாகிஸ்தான், இந்தியா, ஆப்கானிஸ்தான் நாடுகளை சேர்ந்த 86,000–87,351 பேர் வரையில் உயிரிழந்தனர்.

News October 8, 2024

மூலிகை: கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கும் அதிமதுரம்

image

‘அதிமதுரம் அவுரி ஆலம்விழுது அறுகு அடர்ந்த முடி ஆக்கும்’ எனும் மூலிகைக் குறள் அதிமதுரத்தின் ஆற்றலைப் போற்றுகிறது. கிளைசிர்ரைசின், கிளைசிரெடிக் அமிலம், ஐசோலிகுரிடின், ஐசோஃப்ளேவோன்ஸ் போன்ற வேதிப்பொருட்கள் நிறைந்த இதன் வேறில் இருந்து தயாரிக்கப்படும் தைலத்தை தலையில் தடவி வந்தால் கூந்தல் வளர்ச்சி அதிகரிப்பதோடு, இளநரையையும் கட்டுப்படும் என சித்த மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

News October 8, 2024

ஜம்மு-காஷ்மீரை வெல்லப்போவது யார்?

image

ஜம்மு-காஷ்மீரில் 3 கட்டங்களாக நடைபெற்ற 90 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது. சிறப்பு அந்தஸ்து சட்டம் 370-வது பிரிவை, மத்திய அரசு ரத்து செய்த பின் நடைபெறும் முதல் தேர்தல் என்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. வாக்கு எண்ணும் மையங்களில் போலீசாருடன், ராணுவமும் இணைந்து பல அடுக்கு பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். வெல்லப்போவது யார் பாஜகவா, காங்கிரஸா?

News October 8, 2024

அன்னை தெரேசாவின் பொன்மொழிகள்

image

*உங்களுக்காக எதுவும் செய்ய முடியாதவர்களை நீங்கள் எவ்வாறு நடத்துகிறீர்கள் என்பதன் மூலம் உங்களின் உண்மையான குணம் மிகவும் துல்லியமாக அளவிடப்படுகிறது.
*நீங்கள் இந்த உலகை மாற்ற விரும்பினால், வீட்டிற்குச் சென்று உங்கள் குடும்பத்தை நேசியுங்கள்.
*அன்பு என்பது எல்லாப் பருவத்திலும் கிடைக்கும் ஒரு பழம், மேலும் எல்லோர் கைகளுக்கும் எட்டும் தூரத்தில் தான் உள்ளது.

News October 8, 2024

கச்சா எண்ணெய் பற்றாக்குறை? அமைச்சர் விளக்கம்

image

உலகளவில் போர் நடைபெற்று வருவதால் கச்சா எண்ணெய் விலை சற்று அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதுகுறித்து விளக்கமளித்துள்ள பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி, இதற்கு முன்பு 27 நிறுவனங்கள் மூலம் பெறப்பட்ட நிலையில், தற்போது 39 நிறுவனங்கள் மூலம் பெறப்படுவதால் கச்சா எண்ணெய் தேவையை விட அதிகமாகவே கிடைக்கிறது. உலக சந்தையில் புதிய நிறுவனங்களின் வருகையால், சர்வதேச அளவில் பற்றாக்குறை இல்லை என்றார்.

News October 8, 2024

அடுத்த ஒரு மணி நேரத்திற்கு மழை

image

தமிழகத்தில் 20 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு, வேலூர், நாமக்கல், சேலம், பெரம்பலூர், கரூர், புதுக்கோட்டை, திருச்சி, மயிலாடுதுறை, நாகை, தஞ்சாவூர், விழுப்புரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, திருவள்ளூர், தேனி, திண்டுக்கல், தென்காசி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என கணித்துள்ளது.

News October 8, 2024

ஹரியானாவில் ஆட்சிக் கட்டிலில் அமரப்போவது யார்?

image

அக் 5ஆம் தேதி ஹரியானாவில் ஒரே கட்டமாக நடைபெற்ற 90 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு எண்ணப்படுகிறது. வேலை வாய்ப்பின்மை, விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை எனப் பல பிரச்னைகளால் 10 ஆண்டுக்கால ஆட்சி அதிகாரத்தில் இருந்த பா.ஜ.க மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர். தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளும் காங்.க்கு சாதகமாக இருப்பதால் பாஜகவுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

News October 8, 2024

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: அறத்துப்பால் ▶அதிகாரம்: அன்புடைமை. ▶குறள் எண்: 76
▶ குறள்: அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார் மறத்திற்கும் அஃதே துணை.
▶பொருள்: அறியாதவர், அறத்திற்கு மட்டுமே அன்பு துணையாகும் என்று கூறுவர்: ஆராய்ந்து பார்த்தால் வீரத்திற்கும் அதுவே துணையாக நிற்கின்றது.

error: Content is protected !!