India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
முத்துராமலிங்க தேவர் குருபூஜை அக்.30-இல் நடைபெறவுள்ளது. அன்றைய தினம், ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னுக்கு வாடகை வாகனங்கள், டூவீலர்கள், டிராக்டர் உள்ளிட்ட திறந்தவெளி வாகனங்களுக்கு அனுமதி கிடையாது என அரசு தெரிவித்துள்ளது. மேலும், சொந்த நாற்சக்கர வாகனங்கள் வைத்திருப்போர் சம்பந்தப்பட்ட டிஎஸ்பி அலுவலகங்களில் வாகன அனுமதிச் சீட்டு பெறவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதானி குழுமம் தொடர்பான முறைகேடு விவகாரத்தில் OCT.24ல் செபி தலைவர் மதாபி ஆஜராக நாடாளுமன்ற பொது கணக்குக் குழு சம்மன் அனுப்பியுள்ளது. அதானி குழுமம் தொடர்பான முறைகேடு விசாரணையில் அவர், ஒரு தலைபட்சமாக செயல்பட்டதாக குற்றச்சாட்டு உள்ளது. அத்துடன், வெளிநாடுகளில் உருவாக்கிய போலி நிறுவனங்களில் அவர் பங்குகளை வைத்திருந்ததாகவும் புகார் உள்ளது. இதுதொடர்பாக ஹிண்டன்பர்க் வெளியிட்ட அறிக்கை பரபரப்பை ஏற்படுத்தியது.
தென்னிந்திய சினிமாவில் நடிகர்களுக்கு இணையாக நடிகைகளை மதிப்பது இல்லை என்று நடிகை மாளவிகா மோகனன் வேதனையுடன் கூறியுள்ளார். அண்மையில் அவர் அளித்த பேட்டியில், “படம் தோல்வி அடைந்தால் நடிகைகளை குறை சொல்கிறார்கள். அதிர்ஷ்டம் இல்லாத நடிகை என்றும் முத்திரை குத்தி விடுகிறார்கள். தென்னிந்திய சினிமா என்று மட்டும் இல்லாமல், பொதுவாகவே எல்லா சினிமா துறையிலும் இது இருக்கிறது” என்றார்.
➤வடகொரியாவை தாக்கினால் தென்கொரியா நிரந்தரமாக அழிக்கப்படும் என கிம் ஜாங் உன் எச்சரிக்கை விடுத்தார். ➤சீன கடற்படை நடத்திய தாக்குதலில் வியட்நாம் மீனவர்கள் 10 பேர் படுகாயம் அடைந்தனர். ➤பிலிப்பைன்சில் இணைய மோசடியில் ஈடுபட்ட 190 சீனர்களை அந்நாட்டு போலீசார் கைது செய்தனர். ➤பாகிஸ்தானில் இம்ரான்கானுக்கு ஆதரவான போராட்டங்களை ஒடுக்க அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டன.
ஒருகாலத்தில் 50 வயதுக்கு மேற்பட்டவர்களிடம் பரவலாகக் காணப்பட்ட சர்க்கரை நோய், தற்போது 23 முதல் 30 வயது வரையிலான இளம் வயதினரை தாக்க தொடங்கியுள்ளது. இதற்கு உடற்பயிற்சியின்மை, தூக்கமின்மை, ஜங்க் புட்ஸ் போன்றவை காரணிகளாக உள்ளன. அடிக்கடி சிறுநீர் கழித்தல், அதிக பசி, கழுத்து பகுதியில் கறுப்பு வளையம், பாதங்களில் மதமதப்பு அல்லது எரிச்சல் போன்ற அறிகுறிகள் இருந்தால் சுகர் டெஸ்ட் செய்து கொள்வது நல்லது.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பண்டிகை முன்பணமாக ₹10,000 பண்டிகைக்கு ஒரு மாதம் முன் வழங்கப்படும். இந்த ஆண்டு தீபாவளிக்கு முன்பணம் பெற விரும்புவோர், களஞ்சியம் செயலி மூலம் மட்டுமே விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டது. தீபாவளிக்கு இன்னும் 27 நாள்களே உள்ள நிலையில், அச்செயலி கடந்த 4 நாள்களாக செயல்படவில்லை. இதனால், சிக்கல்களை களைந்து விரைவாக முன்பணம் வழங்குமாறு அரசு ஊழியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
தமிழ்நாடு & புதுச்சேரி வருமான வரித் துறையில் நிரப்பப்படவுள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு இன்றுயுடன் நிறைவடைகிறது. IT Inspector, Assistants, Multi-Tasking Staff பணிகளில் சேர ஆர்வம் உள்ளவர்கள் இன்றே ஆன்லைன் மூலம் விண்ணப்பியுங்கள். கல்வித் தகுதி: 10ஆம் வகுப்பு, Any UG Degree. வயது வரம்பு: 18-30. சம்பளம்: ₹5,200-₹34,800. கூடுதல் விவரங்களுக்கு <
➤China Open Tennis: பெலாரஸின் சபலென்காவை வீழ்த்தி செக்குடியரசின் முச்சோவா அரையிறுதிக்கு முன்னேறினார். ➤மகளிர் T20 உலகக் கோப்பை: IND அணியை 58 ரன் வித்தியாசத்தில் NZ அணி வென்றது. ➤U21 உலக துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப்பில் 25 மீ. ரேபிட் பயர் பிஸ்டல் பிரிவில் இந்திய ஆடவர் அணி தங்கப் பதக்கத்தை கைப்பற்றியது. ➤காமன்வெல்த் வலு தூக்கும் போட்டியில் புதுச்சேரி காவலர் அனிதா ராய் தங்கப் பதக்கம் வென்றார்.
ஹரியானாவில் சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது. 90 தொகுதிகளை கொண்ட அம்மாநிலத்தில் ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடைபெறுகிறது. சுமார் 2 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க மாநிலம் முழுவதும் 20,629 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. முதல்வர் நயாப் சிங் சைனி, துஷ்யந்த் சவுதாலா, மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் உள்ளிட்டோர் களத்தில் உள்ளனர். இதில், காங்கிரஸ், பாஜக இடையே பலத்த போட்டி நிலவுகிறது.
தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் இன்று (சனிக்கிழமை) பல இடங்களில் கனமழை வெளுத்து வாங்கும் என வானிலை மையம் கணித்துள்ளது. அதன்படி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, நீலகிரி, ஈரோடு, சேலம், கடலூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் எனக் கூறியுள்ளது.
Sorry, no posts matched your criteria.