India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
காஷ்மீர் தேர்தல் பிரச்சாரத்தில் ராஜ்நாத் சிங் பேசுகையில், “காஷ்மீர் தேர்தலை சீர்குலைக்கும் முயற்சியில் பாகிஸ்தான் ஈடுபட்டுள்ளது. இது புதிய இந்தியா. தாக்குதலுக்கு பதிலடி, வெறும் எல்லையுடன் மட்டும் நிற்காது என்பது பாகிஸ்தானுக்கு தெரியும். அவர்கள் மட்டும் நம்முடன் நட்புறவாக இருந்திருந்தால், சர்வதேச நிதியத்திடம் அந்நாடு கேட்கும் பணத்தை விட அதிக நிதியை இந்தியா கொடுத்திருக்கும்” எனக் கூறினார்.
தங்கம் வாங்க உகந்த நாள் எது என்று ஆன்மிகத்தில் கூறப்பட்டுள்ளது. அதன்படி, திங்கள்கிழமை சந்திரனுக்குரிய நாள் என்றும், இந்த நாளில் தங்கம், வெள்ளி சார்ந்த பொருள்களை வாங்குவது நல்லது, அப்படி வாங்கினால் தங்கம், வெள்ளி அதிகம் சேரும் எனவும் ஆன்மிகம் கூறுகிறது. புதிய செயலைத் தொடங்குவதற்கும் இன்றைய நாளான திங்கள்கிழமை மிகவும் உகந்தது என்று ஆன்மிகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. SHARE IT
தமிழகத்தில் கடந்த ஜூலை மாதம் வரையிலான காலத்தில் சாலை விபத்துகளில் 10,536 பேர் பலியாகியிருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக டிஜிபி அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், 2023இல் சாலை விபத்துகளில் 11,106 பேர் பலியானதாகவும், ஆனால் இந்தாண்டு அந்த எண்ணிக்கை 570 குறைந்திருப்பதாகவும், சாலை விபத்துகள் எண்ணிக்கையும் 5% குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரபல மலையாள நடிகை மினு முனீர் அளித்துள்ள புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில், 2007-இல் தன்னை ஒரு ஓட்டல் அறைக்கு வரவழைத்த இயக்குநர் பாலச்சந்திர மேனன், 3 பெண்களுடன் உடலுறவில் ஈடுபட்டார். அங்கிருந்து வெளியேற முயற்சித்த என்னை தடுத்து, அதை பார்க்குமாறு கட்டாயப்படுத்தினார்” எனக் கூறியுள்ளார். இதன்பேரில் பாலச்சந்திர மேனன் மீது FIR போடப்பட்டுள்ளது.
வாணலியில் நெய் ஊற்றி முந்திரி, கிஸ்மிஸ், பாதம், பிஸ்தா, ஏலக்காய் சேர்த்து பொன்னிறமாக மாறும்வரை வறுத்து தனியே எடுத்து கொள்ளவும். மற்றொரு வாணலியில் ராகி சேமியாவை போட்டு வறுக்கவும். பிறகு அதனை மூழ்குமளவுக்கு பால்விட்டு வேகவிடவும். அதனுடன் சர்க்கரை, பால் கோவா, மில்க் மெய்ட் சேர்த்து கிளறவும். இத்துடன் வறுத்து வைத்த கலவையை சேர்த்து, சிறிது நேரத்துக்கு பின் இறக்கினால் சுவையான ராகி சேமியா கீர் ரெடி.
IPL விரிவாக்கத்தை தாமதம் செய்யும் பிசிசிஐ முடிவால், ₹4,720 கோடி வரை இழப்பு ஏற்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. IPLஇல் கூடுதல் அணியை சேர்ப்பது, போட்டிகள் எண்ணிக்கையை 2023-27 காலகட்டத்தில் 94இல் இருந்து 74ஆக குறைப்பதென பிசிசிஐ முடிவு செய்துள்ளது. இதனால் பார்வையாளர்கள் எண்ணிக்கை குறைவதோடு, செலவு அதிகரித்து, வருமானம் குறையும் என IPL அணிகளின் உரிமையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
ஜம்மு-காஷ்மீரில் நாளை இறுதிக்கட்ட தேர்தல் நடப்பதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவைக்கு 3 கட்டங்களாகத் தேர்தல்கள் நடத்தப்படுகிறது. இதில் 50 தொகுதிகளுக்கு முதல் 2 கட்டத் தேர்தல்கள் நடந்து முடிந்து விட்டன. இந்நிலையில், 40 தொகுதிகளுக்கு நாளை தேர்தல் நடக்கவுள்ளது. 3 கட்டத் தேர்தல்களிலும் பதிவாகும் வாக்குகள் 8ம் தேதி எண்ணப்பட்டு முடிவு வெளியிடப்படும்.
பி.எட். மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியிடப்படவுள்ளது. தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் கல்வியியல் கல்லூரிகளில் பி.எட். படிப்பில் 2,040 இடங்கள் உள்ளன. இந்தக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை விண்ணப்ப பதிவு கடந்த 26-ம் தேதி முடிவடைந்த நிலையில், இன்று தரவரிசைப் பட்டியல் வெளியாகிறது. கலந்தாய்வு அக். 14 முதல் 19 வரை நடைபெறுகிறது. அக். 23-இல் முதலாமாண்டு வகுப்பு தொடங்குகிறது.
குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP) என்னவென்றே ராகுலுக்கு தெரியாது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சாடியுள்ளார். ஹரியானாவில் நடைபெற்ற பாஜக பொதுக் கூட்டத்தில் பேசிய அவர், MSP குறித்து ராகுல் அடிக்கடி பேசுகிறார் என்றும், ஆனால் அதுகுறித்தோ, ராபி, காரீப் சாகுபடி குறித்தோ எதுவுமே அவருக்கு தெரியாது என்றும் கூறினார். ராகுல் மீதான அமித்ஷாவின் விமர்சனம் குறித்து உங்கள் கருத்தை கீழே பதிவிடுங்கள்.
➤பெரு ஜூனியர் உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்பில் 10 மீ ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய ஆடவர் அணி (1,725) தங்கப்பதக்கத்தை வென்றது. ➤சீன ஓபன் டென்னிஸ் தொடரின் காலிறுதிக்கு ஸ்பெயின் வீரர் அல்காரஸ் தகுதி பெற்றார். ➤பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தேசிய தேர்வாளர் பொறுப்பை முகமது யூசுப் ராஜினாமா செய்தார். ➤பெர்கெலே ஐ.டி.எப்., டென்னிஸ் தொடரின் பைனலுக்கு இந்தியாவின் ருடுஜா போசாலே ஜோடி முன்னேறியது.
Sorry, no posts matched your criteria.