India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
‘கங்குவா’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 20ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்படம் நவ.14ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. 3டி முறையில் சரித்திர கதையாக உருவாகியுள்ள இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
அத்தியாவசிய உணவு பொருள்களை தீபாவளி தொகுப்பாக ரேஷனில் வழங்க வேண்டுமென CPM மாநிலக் குழுத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. சென்னையில் நடந்த அக்கட்சியின் மாநில மாநாட்டில், விலைவாசி உயர்வு காரணமாகத் திண்டாடும் தீபாவளியாக மாறும் சூழல் உள்ளது. இதனால், மக்கள் நலன் கருதி ரேஷன் கடைகளில் சர்க்கரை, கடலை மாவு, பாமாயில், பருப்பு, மைதா போன்ற பொருள்களை தீபாவளி தொகுப்பாக வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முட்டை சாப்பிடுவது புத்தி கூர்மையை அதிகரிக்கும் என ஆய்வில் தெரியவந்துள்ளது. வயதாகும்போது நினைவாற்றல் பலவீனமடைகிறது. இந்நிலையில், ஜர்னல் ஆஃப் நியூட்ரியண்ட்ஸ் இதழ் வெளியிட்ட ஆய்வு முடிவின்படி, முட்டை சாப்பிடுபவர்களுக்கு வயதாகும்போது நினைவாற்றல் பிரச்னை குறைவதாகக் கூறப்பட்டுள்ளது. 55 வயதுக்கு மேற்பட்ட 890 பேரிடம் நடத்திய ஆய்வில் பெண்களை விட ஆண்கள் அதிக முட்டை உட்கொள்வதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
துரை செந்தில்குமார் இயக்கத்தில் சூரி கதையின் நாயகனாக நடித்த திரைப்படம் ‘கருடன்’. மக்களிடம் அமோக வரவேற்பைப் பெற்றதுடன், வசூலையும் வாரிக் குவித்த இந்தப் படம் தெலுங்கில் ரீமேக்காக உள்ளது. கருடன் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் பெல்லம்கொண்டா ஸ்ரீனிவாஸ் நாயகனாகவும், நரா ரோஹித், மனோஜ் மஞ்சு உள்ளிட்ட மேலும் பலர் நடிப்பதாகவும் கூறப்படுகிறது. இப்படத்தை விஜய் கனகமெடலா இயக்க உள்ளார்.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்காக நவம்பர் மாதத்தில் 4 நாள்கள் சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அனைத்து மாவட்டத் தேர்தல் அலுவலர்களுக்கும் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு எழுதிய கடிதத்தில், NOV. 9, 10, 23, 24 ஆகிய தேதிகளில் முகாம்கள் நடக்க உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், முகாமுக்கு தேவையான படிவங்களை தயாராக வைக்குமாறும் அறிவுறுத்தியுள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் வீட்டு காஃபி குறித்து கவிஞர் வைரமுத்து சமூக வலைதளத்தில் இட்ட பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், “முதல்வரது அண்மைக்காலத் தொடர் வெற்றிகளுக்கு நேரில் சந்தித்து வாழ்த்துச் சொன்னேன். உற்சாகம் குறையாமல் உலா வாருங்கள் என்று வாழ்த்தி விடைகொண்டேன். முதல்வர் வீட்டுக் காஃபியில் நுரைகளுக்கு மேல் தெளித்திருந்த ‘டிகாஷன்’ இன்னும் நறுஞ்சுவையோடு நாக்கில் இருக்கிறது” எனக் கூறப்பட்டுள்ளது.
மாநில அளவிலான முதல்வர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டி இன்று தொடங்குகிறது. சென்னை உட்பட 4 நகரங்களில் வரும் 24ஆம் தேதி வரை நடைபெறும் இந்த விளையாட்டுப் போட்டிகளை துணை முதல்வர் உதயநிதி தொடங்கி வைக்கிறார். முன்னதாக, மாவட்ட, மண்டல அளவிலான போட்டிகளில் சுமார் 11.50 லட்சம் பேர் பங்கேற்றனர். இது கடந்த ஆண்டை விட சுமார் 3 மடங்கு அதிகமாகும். மாநில அளவிலான போட்டிகளில் 33,000 பேர் பங்கேற்கின்றனர்.
மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 1.25 கோடி கிராமப்புற வீடுகளுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கப்படுகிறது. இதன் மூலம் ஒரு நபருக்கு சராசரியாக, தினமும் 55L பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைப்பது உறுதி செய்யப்படுகிறது. இந்நிலையில், குடிநீர் வினியோகம், பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்காக குடிநீர் இணைப்பு பெற்ற வீடுகளில் மாதம் ₹30 கட்டணம் வசூலிக்க, தமிழக ஊரக வளர்ச்சி துறை உத்தரவிட்டுள்ளது.
➤மெக்சிகோ வழியாக அமெரிக்காவுக்குள் சட்ட விரோதமாக நுழைய முயன்ற 6 அகதிகள் போலீசாரால் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். ➤ஊழல் குற்றச்சாட்டில் கைதான சிங்கப்பூர் Ex அமைச்சர் ஈஸ்வரனுக்கு 12 மாதம் சிறை தண்டனை விதித்தது கோர்ட்டு. ➤இஸ்ரேல் படைகள் மீது முதல் முறையாக லெபனான் ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தி பதிலடி கொடுத்தது. ➤இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலுக்கு G7 நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
‘புறநானூறு’ படத்தில் சிவகார்த்திகேயனுக்கு தம்பியாக அதர்வா நடிப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் சூர்யா நடிப்பதாக அறிவிப்பு வெளியானது. ஆனால், கால்ஷீட் பிரச்னையால் அவர் இப்படத்தில் இருந்து விலகினார். இதைத் தொடர்ந்து, சூர்யாவுக்கு பதிலாக சிவகார்த்திகேயன் இணைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதில் கதாநாயகியாக ஸ்ரீலீலா, வில்லனாக ரோஷன் மேத்யூ நடிக்கிறார்களாம்.
Sorry, no posts matched your criteria.