India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாகப்பட்டினம் திருப்பூண்டியில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் சென்ற கார் விபத்தில் சிக்கியது. அவர் வேதாரண்யத்தில் இருந்து கீழ்வேளூர் செயல்வீரர்கள் கூட்டத்திற்கு சென்ற போது, பெரியாச்சி கோயில் சுற்றுச் சுவர் மீது கார் மோதி விபத்தில் சிக்கியது. இதில், ஓட்டுநர் காயமடைந்த நிலையில், ஓ.எஸ்.மணியன் நல்வாய்ப்பாக காயங்களின்றி உயிர் தப்பினார்.
உலக அளவில் சிறிய நிறுவனங்கள் முதல் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் வரை ஊழியர்களை பணிநீக்கம் செய்வது அதிகரித்து வருகின்றன. இதுவரை பல நிறுவனங்கள் ஊழியர்களை மட்டுமே ஃபயர் செய்த நிலையில், அமேசான் அதன் மேனேஜர்களையே தூக்க முடிவு செய்துள்ளது. இதனால் அமேசனானில் பணியாற்றும் சுமார் 14,000 மேனேஜர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக மோர்கன் ஸ்டான்லி ஆய்வில் தெரியவந்துள்ளது.
டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் ஒன்றில் நிர்மலா சீதாராமன் பங்கேற்று பேசினார். அப்போது அவர், “ஒருகாலத்தில், இந்தியாவில் சராசரி தனிநபர் வருமானம் 2,730 டாலர்களை (₹2.30 லட்சம்) எட்டவே 75 ஆண்டுகளானது. ஆனால், இப்போதோ அந்த வருமானம் கூடுதலாக 2,000 டாலர்களை எட்டுவதற்கு வெறும் 5 ஆண்டுகள் மட்டுமே ஆகும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இனி இந்தியாவில் சாமானியர்களின் வாழ்க்கை தரம் பல மடங்கு உயரப் போகிறது” என கூறினார்.
கரூர் குளித்தலையில் அரசுப் பள்ளி ஆசிரியைக்கு கொலை மிரட்டல் விடுத்த புகாரில் தவெக நிர்வாகி ராஜா கைது செய்யப்பட்டுள்ளார். ஆசிரியை சங்கீதாவின் ஆவணங்களை பயன்படுத்தி லோனில் கார் வாங்கியதுடன், தவணைத் தொகையை செலுத்தாமல் இருந்து வந்துள்ளார். இதுகுறித்து கேட்டபோது, தன்னை தகாத வார்த்தைகளில் திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக சங்கீதா புகாரளித்துள்ளார். இதன்பேரில், ராஜாவை போலீசார் கைது செய்தனர்.
தமிழக துணை முதல்வர் உதயநிதியை அதானி Ports & SEZ நிறுவன இயக்குநருமான கரண் அதானி சந்தித்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது மரியாதை நிமித்தமானது என அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கம், பரந்தூர் விமான நிலையம், நீரேற்று மின் திட்டம், Smart Meter திட்டம் போன்றவற்றை செயல்படுத்த அதானி குழுமம் ஆர்வம் காட்டிவரும் நிலையில் இந்த சந்திப்பு பேசு பொருளாகியுள்ளது.
PAK-ஐ சேர்ந்த சைபர் கிரைம் குற்றவாளிகள் வாட்ஸ்அப் கால் செய்து மோசடி செய்து வருவதாக போலீசார் எச்சரித்துள்ளனர். +92 என்று தொடங்கும் எண்களில் இருந்து வரும் அழைப்புகளை ஏற்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டனர். போலீஸ் சீருடையில் உள்ள Photoவை DP வைத்து ஏமாற்றுவார்கள் என்றும், நம்பினால் ஏமாந்து விடுவீர் எனவும் எச்சரித்தனர். ஆக்ராவைச் சேர்ந்த பெண் ஒருவர் இவ்வாறு ஏமாற்றப்பட்டு மாரடைப்பால் இறந்தார். SHARE IT
1) நான்கு மூக்குகளை உடைய ஊரும் உயிரினம் எது? 2) RTI சட்டம் என்பதன் விரிவாக்கம் என்ன? 3) ஜைனத்தின் புனித நூல் எது? 4) ஐந்திணை 70 என்ற சங்க நூலின் ஆசிரியர் யார்? 5) சராசரியாக மனிதர்கள் தங்களது வாழ்நாளில் எத்தனை முறை கண்களை இமைக்கின்றனர்? 6) உலகின் ஆட்டோமொபைல் சிட்டி என அழைக்கப்படும் நகரம் எது? 7) உலகில் மிக விஷத்தன்மையுடைய மீன் எது? விடைகளை கமெண்ட்டில் சொல்லுங்க. சரியான விடையை 2 மணிக்கு பாருங்க.
அடுப்பில் சட்டி வைத்து நெய் ஊற்றி, ரவையை (250g) லேசாக வறுத்து எடுக்கவும். அதில் நீரூற்றி நன்கு வேக வைக்கவும். அத்துடன் குக்கரில் மலர வேக வைத்த பாசி பருப்பை (250g) சேர்த்து கிளறவும். மற்றொரு சட்டியில் 3 ஸ்பூன் நெய் ஊற்றி, பாதியாக இடித்த மிளகு, சீரகம், முந்திரி சேர்ந்து பொன்னிறமாக வறுத்து, கருவேப்பிலை போட்டு தாளிக்கவும். இந்த தாளிப்பை கலவையுடன் சேர்த்து கிளறி எடுத்தால் சுவையான ரவா பொங்கல் ரெடி.
நீண்டதூர பஸ் பயணங்களின் போது கண்டக்டரிடம் டிக்கெட்டுக்கான மீதி சில்லறையை பலரும் வாங்க மறந்து விடுவார்கள். இந்த பணத்தை திரும்ப பெற ஈஸி வழி இதோ: TNSTC-இன் இலவச டோல் ஃப்ரீ நம்பரான 1800 599 1500-க்கு கால் செய்து, உங்கள் டிக்கெட்டில் உள்ள பஸ் பதிவு எண் உள்ளிட்ட விவரங்களை கூறுங்கள். இதன் அடிப்படையில், சம்பந்தப்பட்ட கண்டெக்டரிடம் அதிகாரிகள் விசாரித்து, உங்கள் மீதிப் பணத்தை அனுப்புவார்கள். Share It.
2026இல் தமிழகத்தில் பாஜக தலைமையிலான ஆட்சி அமையும்போது, திமுக ஊழல்கள் வெளியே கொண்டு வரப்படும் என பாஜக ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச்.ராஜா தெரிவித்தார். நெல்லையில் பேசிய அவர், “திமுக தலைவர்கள் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் விற்றதாக கைது செய்யப்படுகின்றனர். தமிழ் சமூகத்தை அழித்துக் காட்டுவோம் என டாஸ்மாக் மூலம் மது விற்பனையை திட்டமிட்டு செயல்படுத்தும் தீய சக்தியாக திமுக செயல்படுகிறது” என்றார்.
Sorry, no posts matched your criteria.