News September 16, 2024

Chess Olympiad: தொடர் வெற்றியில் இந்திய அணி

image

செஸ் ஒலிம்பியாட் தொடரின் ஓபன் பிரிவு 5ஆவது சுற்றில் இந்திய ஆடவர் அணி வெற்றி பெற்று அசத்தியுள்ளது. அஜர்பைஜான் அணியை எதிர்கொண்ட இந்திய அணி 3 – 1 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 10 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது. மொத்தம் 11 சுற்றுகள் நடைபெறும் நிலையில், ஒவ்வொரு சுற்றிலும் வெற்றி பெறும் அணிக்கு 2 புள்ளிகளும், டிராவுக்கு தலா ஒரு புள்ளிகளும் வழங்கப்படும்.

News September 16, 2024

இன்றைய (செப்.16) நல்ல நேரம்

image

▶ செப்.16 (ஆவணி 31) ▶ திங்கள் ▶ நல்ல நேரம்: 6.15 – 7.15AM & 4.45 – 5.45PM ▶ கெளரி நேரம்: 9.15 – 10.15AM & 7.30 – 8.30PM ▶ இராகு காலம்: 7.30 – 9.00AM ▶ எமகண்டம்: 10.30AM – 12.00PM ▶ குளிகை: 1.30 – 3.00PM ▶ திதி: சதுர்தசி ▶ பிறை: வளர்பிறை ▶நட்சத்திரம்: அவிட்டம் மாலை 3.52 வரை ▶சுப முகூர்த்தம்: ஆம் ▶ சூலம்: கிழக்கு ▶ பரிகாரம்: தயிர் ▶ யோகம்: சித்தயோகம் ▶ சந்திராஷ்டமம்: திருவாதிரை, பு.பூசம்

News September 16, 2024

சூறாவளிக்கு பயந்து 600 விமானங்கள் ரத்து

image

சூறாவளி காரணமாக ஷாங்காய் நகரில் நூற்றுக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கிழக்கு சீனாவின் கடற்கரை பகுதியில் இருந்து சில நூறு km தொலைவில் பெபின்கா சூறாவளி மையம் கொண்டுள்ளது. இது சுமார் 151 km வேகத்தில் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சூறாவளி கரையை கடக்கும் வரை சுமார் 600 விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

News September 16, 2024

HAPPY BIRTHDAY❤️: பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (செப். 16) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

News September 16, 2024

HAPPY BIRTHDAY❤️: பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (செப். 16) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

News September 16, 2024

அது பிரதமரின் வார்த்தைகள்: காங்கிரஸ்

image

ராகுல் காந்தியை நம்பர் 1 தீவிரவாதி என மத்திய அமைச்சர் ரவ்நீத் சிங் விமர்சித்து இருந்தார். பிரதமரின் வார்த்தைகள்தான் அமைச்சரின் கருத்தாக வெளிவருவதாக காங்கிரஸ் பதிலடி கொடுத்துள்ளது. ராகுல் காந்தியை தனிப்பட்ட ரீதியில் விமர்சிப்பதுதான், மோடி அரசாங்கத்தில் அமைச்சருக்குரிய குறைந்தபட்ச தகுதி எனவும், இதயம் முழுக்க வெறுப்பு நிறைந்தவர்களின் பேச்சு இது என்றும் காட்டமாக கூறியுள்ளது.

News September 16, 2024

அமைதியின் மூலம் வதந்தியை கொல்: மோகன்

image

நடிகர் மோகனைப் பற்றி, 1990-களில் AIDS-க்கு சிகிச்சை பெற்று வருகிறார், உடல்நிலை சரியில்லை என்றெல்லாம் பேசப்பட்டது. இது குறித்து அப்போதே அவர் தரப்பு விளக்கத்தையும் அளித்து இருந்தார். இந்நிலையில், அமைதியின் மூலம் வதந்தியை கொல்லலாம் என முடிவெடுத்துள்ளதாக அவர் தற்போது தெரிவித்துள்ளார். மேலும், அவசியமற்றதற்கு பதிலளிப்பதை விட, நம்பிக்கையானவர்களுக்கு உண்மையாக இருக்கலாம் என்றும் கூறியுள்ளார்.

News September 16, 2024

ராசி பலன்கள் (16.09.2024)

image

*மேஷம் – நன்மை உண்டாகும் *ரிஷபம் – திறமை வெளிப்படும் *மிதுனம் – சோர்வு ஏற்படும் *கடகம் – கவனம் தேவை *சிம்மம் – சாந்தமாக இருப்பீர் *கன்னி – அமைதி காக்கவும் *துலாம் – சுகம் பெறுவீர் *விருச்சிகம் – நலம் உண்டாகும் *தனுசு – புகழ் கிடைக்கும் *மகரம் – பயம் ஏற்படும் *கும்பம் – பக்தி கைகொடுக்கும் *மீனம் – பொறுமை தேவை.

News September 16, 2024

டெய்லர் ஸ்விஃப்டை வெறுத்த டிரம்ப்

image

பிரபல பாப் பாடகி டெய்லர் ஸ்விஃப்டை வெறுப்பதாக தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் பதிவிட்டுள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸுக்கு ஆதரவு அளிப்பதாக டெய்லர் ஸ்விஃப்ட் தெரிவித்திருந்தார். இந்நிலையில், ‘I hate Taylor Swift’ என குடியரசுக் கட்சி வேட்பாளர் டிரம்ப் தெரிவித்துள்ளார். அதிபர் தேர்தல் நெருங்கும் சூழலில், கமலா ஹாரிஸுக்கு ஆதரவு அதிகரித்து வருகிறது.

News September 15, 2024

கடற்படை தளபதிகளின் ஆலோசனைக் கூட்டம்

image

டெல்லியில் வருகிற 17ஆம் தேதி கடற்படை தளபதிகளின் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. பங்களாதேஷ் அரசு மாற்றம், அதிகரித்து வரும் சீன நடவடிக்கைகள் மற்றும் பாகிஸ்தானுக்கான ராணுவ உதவி உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து 4 நாள்கள் ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ராணுவம் எப்போதும் எதற்கும் தயாராக இருக்க வேண்டும் என ராஜ்நாத் சிங் கூறிய சில தினங்களில் இந்த கூட்டம் நடைபெற உள்ளது.

error: Content is protected !!