India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சாம்சங் ஊழியர்கள் போராட்டம் தொடர்பாக விரைந்து தீர்வு காண CM ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். CITU சார்பில் சங்கம் அமைக்க தொழிலாளர்களின் முடிவுக்கு, Samsung நிர்வாகம் அனுமதி அளிக்கவில்லை. இதனால், கடந்த ஒரு மாதமாக போராட்டம் நடைபெறுகிறது. இந்நிலையில், இவ்விவகாரத்தில் நேரடியாக தலையிட்ட ஸ்டாலின், பிரச்னையை சுமூகமாக முடிக்க T.R.B.ராஜா, தா.மோ.அன்பரசன், கணேசன் ஆகியோருக்கு உத்தரவிட்டுள்ளார்.
டாய்லெட்டில் அதிக நேரம் போன் பயன்படுத்துவதால் பல நோய்கள் வரலாம் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். நீண்ட நேரம் ஒரே நிலையில் அமர்ந்திருப்பதால், Posture பிரச்னைகள் வரக்கூடும். குடல், இரைப்பை சார்ந்த நோய்கள், வயிற்றுப்போக்கு, மூல பாதிப்பு ஏற்படும் அபாயங்களும் உள்ளன. மேலும், கழிப்பறையில் உள்ள பாக்டீரியாக்கள் போனில் ஒட்டிக் கொள்வதால், அது மற்ற குடும்ப உறுப்பினர்களுக்கும் நோய்களை ஏற்படுத்தும்.
மேற்கு வங்கத்தில் 4ஆம் வகுப்பு மாணவி வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருபாகாலியைச் சேர்ந்த சிறுமி டியூசனுக்கு சென்றுவிட்டு திரும்பியபோது இவ்வாறு நிகழ்ந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் ஒருவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். சில நாள்களுக்குமுன் பயிற்சி பெண் டாக்டர் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட அதிர்ச்சி மறைவதற்குள், மீண்டும் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது.
27 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மழை பெய்யக்கூடும் என IMD தெரிவித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சி, ராணிப்பேட்டை, மயிலாடுதுறை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழையும், மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, கோவை, ஈரோடு, திருச்சி, திண்டுக்கல், தருமபுரி, வேலூர், திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழையும் பெய்யக்கூடும் என கணித்துள்ளது.
1. ஜாகிங், ஜிம் போன்ற எந்த உடற்பயிற்சியுடன் ஒப்பிட்டாலும் வாக்கிங் மிக எளிது. 2. உடல் வலி, காயங்கள் ஏற்படாததால் நீண்டகாலத்திற்கு ஒருவரால் வாக்கிங் செல்ல முடியும். 3. கடினமான உடற்பயிற்சிகள் உருவாக்கும் Mental Strees இதில் கிடையாது. எனவே, மகிழ்ச்சி தரும் ஹார்மோன் அதிகம் சுரக்கிறது. 4. நீண்டநேரம் வாக்கிங் செல்ல முடியும் என்பதால், நிணநீர் அதிகம் சுரந்து BP, Sugar ஆகியவற்றை கட்டுக்குள் வைக்கிறது.
27 ஆண்டுகளுக்குப் பின் இரானி கோப்பையை வென்றுள்ளது மும்பை அணி. Rest Of India அணிக்கு எதிரான போட்டி டிராவில் முடிந்தபோதிலும், முதல் இன்னிங்சில் முன்னிலை பெற்றதன் அடிப்படையில் மும்பை அணி வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ROI முதல் இன்னிங்சில் 416 ரன்களும், MUM அணி இரு இன்னிங்சிலும் முறையே 537 & 329/8 ரன்களும் எடுத்து. இது மும்பை அணி வெல்லும் 15வது இரானி கோப்பையாகும்.
ஹரியானா சட்டப்பேரவை தேர்தலில், 3 PM நிலவரப்படி 49.13% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், சற்று மந்த நிலையிலேயே வாக்கு பதிவாகின்றன. அதிகபட்சமாக யமுனாநகர் தொகுதியில் 56.79% வாக்குகள் பதிவாகியுள்ளன. OCT 8ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட உள்ளன.
போருக்கு மத்தியில், சுமார் 15,000 இந்திய தொழிலாளர்களை இஸ்ரேலுக்கு அனுப்ப அரசு முயன்று வருவதாக கார்கே குற்றஞ்சாட்டியுள்ளார். இதற்கான ஆட்சேர்ப்பு பணிகளை அரசு மேற்கொண்டு வருவதாகவும், இது மோடி அரசின் கொள்கையால் ஏற்பட்டுள்ள வேலையின்மையை காட்டுவதாகவும் அவர் விமர்சித்துள்ளார். மேலும், இதற்கு முன் பல இந்தியர்கள் வேலைக்காக ரஷ்யா அழைத்து செல்லப்பட்டு, போரில் ஈடுபடுத்தப்பட்டதையும் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக அடுத்த மாதம் ஆஸ்திரேலியா செல்கிறது. கடந்த 2 முறை இத்தொடரை வென்ற இந்திய அணியை வீழ்த்தி இந்த முறை கோப்பையை வெல்வோம் என ஆஸி., வீரர் ஸ்மித் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்தியாவும், ஆஸி.,யும் டெஸ்ட்டில் டாப் 2 அணிகளாக உள்ளன என்ற அவர், இந்தியாவின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைப்போம் என கூறியுள்ளார்.
2026 சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யை சமாளிக்க நடிகர் பிரகாஷ் ராஜை களமிறக்க, ஆளும் திமுக மாஸ்டர் பிளான் போட்டுள்ளதாம். திமுக கொள்கையுடன் பிரகாஷ் ராஜ் ஒத்துப்போவதால், சட்டசபை தேர்தலுக்கு, அவரை திமுகவின் பிரசாரப் பீரங்கியாக பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அவர் திமுகவில் சேருவாரா அல்லது வடிவேலுவை போல, விஜய்க்கு எதிராக பிரசாரத்திற்கு மட்டும் பயன்படுத்தப்படுவாரா என்பது தெளிவான எந்த தகவலும் இல்லை.
Sorry, no posts matched your criteria.