News October 6, 2024

HAPPY BIRTHDAY❤️: பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (அக்.06) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

News October 6, 2024

HAPPY BIRTHDAY❤️: பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (அக்.06) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

News October 6, 2024

ICC WC t20: இங்கிலாந்து அபார வெற்றி

image

ஐசிசி மகளிர் டி20 போட்டியில் இங்கி., அணிக்கு எதிரான போட்டியில் வங். அணி தோல்வியை தழுவியது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 118/7 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய வங். அணி, இங்கி. பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் 97/7 மட்டுமே எடுத்தது. இதன்மூலம் இங். அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் வெற்றியை பதிவு செய்தது. 2 போட்டிகளில் விளையாடியுள்ள வங். அணி 1 வெற்றி, 1 தோல்வி அடைந்துள்ளது.

News October 6, 2024

WhatsApp-ல் புதிய அப்டேட்..!

image

Contact Syncing என்ற புதிய அம்சத்தை வாட்ஸ்அப் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, பயனாளர்கள் வாட்ஸ்அப் கணக்குடன் இணைக்கப்பட்ட (Linked Devices) எந்த சாதனத்தில் இருந்தும் தொடர்புகளை சேர்க்கவும், நீக்கவும் முடியும். இதற்கு மொபைல் போன் தேவையில்லை. கணினி, லேப்டாப்களில் Turn on Contacts, Delete Contacts என்ற டேப்ஸ் மூலம் பயனர்கள் போன் இல்லாமல் தொடர்புகளை நிர்வகிக்கலாம்.

News October 6, 2024

ராசி பலன்கள் (6.10.2024)

image

*மேஷம் – வீண் செலவு ஏற்படும் *ரிஷபம் – குழப்பம் உண்டாகும் *மிதுனம் – ஆரோக்கியம் மேம்படும் *கடகம் – வெற்றி நிச்சயம் *சிம்மம் – சுகம் உண்டாகும் *கன்னி – புதிய நட்பு கிடைக்கும் *துலாம் – அமைதியாக இருப்பது நல்லது *விருச்சிகம் – கவனம் தேவை *தனுசு – முயற்சி செய்தால் வெற்றி உண்டு *மகரம் – ஆர்வமுடன் செயல்படுவீர் *கும்பம் – பயம் உண்டாகும் *மீனம் -சாதகமான சூழல் உருவாகும்.

News October 6, 2024

182 ஆண்டுகால பந்தயம் நிறைவுக்கு வந்தது

image

சிங்கப்பூரில் 182 ஆண்டுகளாக நடைபெற்று வந்த குதிரை பந்தயம் இன்றுடன் நிறைவுக்கு வந்துள்ளது. பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் மலேசியாவுடன் சிங்கப்பூர் இணைந்திருந்த காலத்தில் இருந்தே அங்கு 124 ஹெக்டேர் பரப்பில் மைதானம் அமைத்து குதிரைப் பந்தயம் நடைபெற்று வருகிறது. தற்போது தனிப்பெரும் நாடாக வளர்ந்துள்ள சிங்கப்பூரில், வீடு கட்டுவதற்கு நிலம் தேவைப்படுவதால் குதிரை பந்தய மைதானத்தை பயன்படுத்த முடிவு செய்துள்ளனர்.

News October 5, 2024

இந்திய அணி தொடக்க ஆட்டக்காரர்கள் இவர்களா?

image

இந்தியா-வங்கதேசம் இடையிலான முதல் T20 போட்டி, கான்பூரில் நாளை 7 PMக்கு தொடங்குகிறது. சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இளம்படை BAN அணியை எதிர்கொள்கிறது. இந்நிலையில், IND அணி தொடக்க வீரர்களாக அபிஷேக் ஷர்மாவுடன் சஞ்சு சாம்சன் களமிறங்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பான தகவலை SKY உறுதிப்படுத்தியுள்ளதாக PTI செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

News October 5, 2024

உக்ரைனை கைவிடுகிறதா நேட்டோ?

image

ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்கு பெருமளவில் ஆயுத, நிதி உதவிகள் கொடுத்தும் எந்த முன்னேற்றமும் இல்லை, ரஷ்யாவின் கையே ஓங்கியுள்ளது. இந்நிலையில், நேட்டோ படைகளின் முன்னாள் தலைவர் ஸ்டோல்டென்பர்க், ரஷ்யாவுடன் சமாதானமாக போக, உக்ரைன் தன் நிலப்பரப்பை கொஞ்சம் விட்டுத்தரலாம் என்று ஆலோசனை கூறியுள்ளார். போரில் உக்ரைனின் தொடர் தோல்விகளால், நேட்டோ சலிப்படைந்து, அந்நாட்டை கைவிட முடிவு செய்துவிட்டதா?

News October 5, 2024

IND vs BAN: துபே OUT.. வர்மா IN..!

image

வங்கதேசத்திற்கு எதிரான 3 போட்டிகளைக் கொண்ட டி20 தொடர் நாளை தொடங்க உள்ளது. இந்நிலையில், இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரர் சிவம் துபே காயம் காரணமாக இந்த தொடரில் விளையாட மாட்டார் என BCCI அறிவித்துள்ளது. அவருக்கு பதிலாக திலக் வர்மா தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த தொடரில் சூர்யகுமார் யாதவ் இந்திய அணியை வழிநடத்த உள்ளார். சஞ்சு சாம்சன் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

News October 5, 2024

12ம் வகுப்பு முடித்தவர்களுக்கு 3,445 அரசு பணிகள்

image

ரயில்வேயில் டைப்பிஸ்ட், கிளார்க் உள்ளிட்ட 3,445 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் சென்னை மண்டலத்தை பொறுத்தவரை 194 பணியிடங்கள் உள்ளன. இதற்கு 18 – 33 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் <>https://www.rrbchennai.gov.in/<<>> என்ற இணையதளத்தில் அக்டோபர் 20 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!