India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
*ஒரு சமூகத்தின் பெரும் பகுதியினர் ஏழைகளாகவும் துன்பத்திலும் இருக்கும் போது. எந்தவொரு சமூகமும் நிச்சயமாக செழிப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க முடியாது. *மனிதர்கள் பணத்தை விரும்புவது பணத்துக்காக அல்ல, அவர்கள் அதைக் கொண்டு வாங்கக் கூடிய வற்றிற்காக.
*நாம் நம்மை மதிப்பது போல் நம்மை மதிக்கும் ஒரு நபரைக் கண்டறிவதில் நாம் மகிழ்ச்சியடைகிறோம்.
பாக். அக்.15,16-ல் நடைபெறும் SCO மாநாட்டில் இந்தியா சார்பில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்க உள்ளார். இந்நிலையில் பாக். பயணம் குறித்த விளக்கம் அளித்துள்ள அவர், மாநாட்டின் நிகழ்ச்சிகளுக்காகவே பாக். செல்வதாகவும், இருதரப்பு உறவு குறித்து பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பு இல்லை எனவும் கூறினார். கடந்த 9 ஆண்டுகளில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஒருவர் பாக். செல்வது இதுவே முதல்முறை ஆகும்.
தென் ஆப்ரிக்க அணி எதிரான WC டி20 இறுதிப்போட்டியில் பந்த் சாதுர்யமாக செயல்பட்டதாக ரோஹித் ஷர்மா தெரிவித்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில், 24 பந்துகளில் 26 ரன்கள் தேவைப்பட்டபோது, பந்த் ஆட்டத்தின் வேகத்தை குறைக்க முழங்காலில் ஏற்பட்ட காயத்திற்கு டேப் ஓட்ட physio-வை அழைத்தார். அதனால் bowlerகளிடம், பீல்டிங் குறித்து ஆலோசிக்க முடிந்ததாக கூறிய அவர், அதுவும் எங்கள் வெற்றிக்கு ஒரு காரணமாக அமைந்தது என்றார்.
Exit Poll முடிவுகள் எதிர்மறையாக இருந்தாலும் ஹரியானாவில் மீண்டும் ஆட்சிக்கு வருவேன் என அம்மாநில முதல்வர் நயாப் சிங் சைனி நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும் பாஜக முழு பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்ற அவர், ஹரியானாவில் அனைத்து துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டுள்ளதால் மக்கள் தங்களுக்கு ஆதரவு அளிப்பார்கள் என்றும் கூறினார். 90 இடங்களில் பதிவான வாக்குகள் இம்மாதம் 8ஆம் தேதி எண்ணப்படுகின்றன.
தமிழகத்தில் 18 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதன்படி தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், ஈரோடு, சேலம், பெரம்பலூர், நாமக்கல், கரூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்யக் கூடும் என்று கூறியுள்ளது.
▶குறள் பால்: அறத்துப்பால் ▶அதிகாரம்: அன்புடைமை. ▶குறள் எண்: 74 ▶ குறள்: அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும் நண்பு என்னும் நாடாச் சிறப்பு. ▶பொருள்: அன்பு பிறரிடம் விருப்பம் உடையவராக வாழும் தன்மையைத் தரும். அஃது எல்லாரிடத்தும் நட்பு என்று சொல்லப்படும் அளவற்ற சிறப்பைத் தரும்.
உ.பி., மாநிலம் அமேதியில் பள்ளி ஆசிரியை, அவரது கணவர், 5 மற்றும் 1.5 வயது மகள்கள் என 4 பேரை படுகொலை செய்த சந்தன் வர்மாவை இன்று காலை உ.பி., போலீஸ் என்கவுண்டர் செய்தனர். எனினும், காயங்களுடன் அவன் பிழைத்துவிட்டான். ஆசிரியை உடன் ரகசிய உறவில் இருந்த நிலையில், அவர்களுக்கு இடையே சண்டை ஏற்பட்டு பேசாத நிலையில், ஆத்திரத்தில் இந்த கொலைகளை அவன் செய்திருக்கிறான். திருமணத்தை மீறிய உறவு என்றுமே பிரச்சனை தானே?
பாஜகவினர் வதந்திகளை பரப்புவதோடு, அதை உண்மையாக்கும் வகையில் வரலாற்றை மாற்றுவதாக முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். திருச்சி சிவா எம்பி எழுதிய புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய அவர், எதிரிகளின் வலிமை வேண்டுமானால் மாறி இருக்கலாம் எனவும், ஆனால் 75 ஆண்டுகளாக தங்களது போராட்ட களம் மாறவில்லை என்றும் தெரிவித்துள்ளார். மேலும், யாருடைய மிரட்டல்களுக்கும் பயம் கொள்ளாமல் இருப்பதாகவும் கூறியுள்ளார்.
▶அக்.6 (புரட்டாசி 20) ▶ஞாயிறு ▶நல்ல நேரம்: 7:45 – 8:45 AM & 3:15 – 4:15 PM ▶ கெளரி நேரம்: 10:45 AM – 11:45 AM & 1:30 PM – 2:30 PM ▶ ராகு காலம்: 4:30 PM – 6:00 PM ▶ எமகண்டம்: 12:00 PM – 1:30 PM ▶ குளிகை: 3:00 PM – 4:30 PM ▶ திதி: சதுர்த்தி▶ பிறை: வளர்பிறை ▶ சுப முகூர்த்தம்: இல்லை ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம் ▶ சந்திராஷ்டமம்: ரேவதி ▶ நட்சத்திரம் : விசாகம் இ 11.03 ▶ யோகம் : மரண யோகம்.
சிஎஸ்கே பிரதிநிதிகளை mid-October-ல் தோனி, மும்பையில் சந்திக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 2025 ஐபிஎல்லில் விளையாடுவது குறித்து அவர்களுடன் ஆலோசிப்பார் என தெரிகிறது. மறுபுறம், அவரை Uncapped player பட்டியலில் தக்கவைக்க சிஎஸ்கே விரும்புவதாக கூறப்படுகிறது. தோனி தொடர்ந்து விளையாட முடிவு செய்தால் CSK அணி ரூ.4 கோடிக்கு அவரை தக்கவைத்துக் கொள்ள முடியும். தோனி விளையாடுவாரா? definitely not/yes
Sorry, no posts matched your criteria.