News October 7, 2024

நிர்வாக ரீதியில் முழு ஒத்துழைப்பு – அமைச்சர் மா.சு

image

விமான சாகச நிகழ்ச்சிக்கு நிர்வாக ரீதியில் முழு ஒத்துழைப்பு வழங்கப்பட்டதாக அமைச்சர் மா.சு தெரிவித்துள்ளார். நிகழ்ச்சியை முறையாக திட்டமிட்டு நடத்த விமானப்படை அதிகாரிகளுடன் ஆலோசிக்கப்பட்டது என்றும், மெரினா கடற்கரையில் தற்காலிக கழிவறை, குடிநீர் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது என்றும் தெரிவித்தார். மெரினாவில் கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

News October 7, 2024

HAPPY BIRTHDAY❤️: பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (அக்.07) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

News October 7, 2024

HAPPY BIRTHDAY❤️: பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (அக்.07) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

News October 7, 2024

இந்தியா வந்தார் மாலத்தீவு அதிபர்

image

மாலத்தீவு அதிபர் முகமது முய்சு 5 நாள் பயணமாக இந்தியா வந்தடைந்தார். பிரதமர் மோடியை நாளை சந்தித்து இருநாட்டு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இருநாட்டு உறவுகள் குறித்து ஆலோசிக்க அவர் இந்தியா வருவது இதுவே முதல்முறை. சீனாவுடனான நெருக்கம், பிரதமர் மோடியை மாலத்தீவு அமைச்சர் விமர்சித்தது என பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் அதிபர் முய்சு இந்தியா வந்துள்ளார்.

News October 7, 2024

ராசி பலன்கள் (07-10-2024)

image

◙மேஷம் – நன்மை உண்டாகும்
◙ரிஷபம் – பக்தி அதிகரிக்கும்
◙மிதுனம் – வெற்றி தேடி வரும்
◙கடகம் – சுகமான நாள்
◙சிம்மம் – பயத்தை தவிர்க்கவும்
◙கன்னி – நஷ்டம் ஏற்படும்
◙துலாம் – பாராட்டு குவியும்
◙விருச்சிகம் – குழப்பம் ஏற்படும்
◙துனுசு – உடல்நலம் மேம்படும்
◙மகரம் – ஆர்வம் அதிகரிக்கும் ◙கும்பம் – விவேகமான நாள் ◙மீனம் – மேன்மை உண்டாகும்

News October 6, 2024

டாட்டூவுடன் அஜித்தின் மாஸ் லுக்

image

நடிகர் அஜித் டாட்டூவுடன், புதிய லுக்கில் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதில் சால்ட் அண்ட் பேப்பர் லுக்கில் புதிய ஹேர் ஸ்டைலுடன் காணப்படுகிறார். இது ‘குட் பேட் அக்லி’ படத்திற்காக எடுக்கப்பட்ட போட்டோ என கூறப்படுகிறது. இந்த கெட்டப்பில் அஜித் சற்று இளமையாக தோற்றமளிப்பதாக நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். அஜித்தின் இந்த லுக் எப்படி இருக்கிறது என கமெண்ட் பண்ணுங்க.

News October 6, 2024

வேஷ்டி, சட்டை அணிவதுதான் மரபு: JK

image

அரசு நிகழ்ச்சிகளில் துணை முதல்வர் உதயநிதி டி சர்ட் அணிந்து வருவதற்கு ADMK முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அரசு பணியில் ஈடுபடும் நபர்கள் வேஷ்டி, சட்டை, பேண்ட் அணிவதுதான், அரசு நிகழ்ச்சிகளில் கட்சி கொடியுடன் டி சர்ட் அணிவது ஏற்புடையதல்ல என விமர்சித்துள்ளார். மேலும், உதயநிதி இதை தொடரும்பட்சத்தில் அவர் மீது அதிமுக சார்பில் வழக்கு தொடரப்படும் என்றும் கூறியுள்ளார்.

News October 6, 2024

இந்திய அணி அபார வெற்றி

image

வங்கதேசத்திற்கு எதிரான முதல் T20 போட்டியில், 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த BAN, 127 ரன்களுக்கு ஆல்அவுட்டானது. இந்திய வீரர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாத BAN வீரர்கள் 6 பேர் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்தனர். பின்னர் 128 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய IND அணி, 11.5 ஓவர்களில் 132/3 ரன்கள் எடுத்து அபாரமாக வென்றது. பாண்டியா 39 (16) ரன்கள் குவித்தார்.

News October 6, 2024

குடிநீர் கூட இல்லை: EPS ஆவேசம்

image

சென்னை மெரினா பீச்சில் விமானப்படையின் வான் சாகசத்தை காணச் சென்ற மக்களுக்கு குடிநீர் கூட கிடைக்காத நிலை ஏற்பட்டதாக EPS கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுபோன்ற முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வைக் கூட அரசு முறையாக ஒருங்கிணைக்கத் தவறியதாக அவர் விமர்சித்துள்ளார். மேலும், இந்தியாவின் பல நகரங்களில் இத்தகைய நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்று வந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

News October 6, 2024

கிளாமர் எனக்கூறி உடலை விற்க மாட்டேன்: பிரியா பவானி சங்கர்

image

கிளாமர் என்ற பெயரில் உடலை விற்க மாட்டேன் என நடிகை பிரியா பவானி சங்கர் கூறியுள்ளார். கிளாமர் சரியா? தவறா? என்பதை விவாதிக்க விருப்பமில்லை எனக் கூறிய அவர், சினிமாவில் கடந்து வந்த பாதையை பார்க்கும்போது, தவறான செயலை செய்துவிட்டேனோ? என எண்ணிவிடக்கூடாது என்பதில் தெளிவாக உள்ளேன் என்றார். மேலும், சில முடிவுகளை எடுக்கும்போது அதனை கவனமாக கையாள்வேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!