India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வங்கதேச அணியை ஆல்அவுட் செய்ததன் மூலம் இந்தியா சாதனை ஒன்றை படைத்துள்ளது. அதாவது எதிரணியை அதிக முறை ஆல்அவுட் ஆக்கிய அணி என்ற பாக். அணியின் சாதனையை இந்தியா சமன் செய்துள்ளது. இந்தியா மற்றும் பாக். அணிகள் டி20 கிரிக்கெட்டில் 42 முறை எதிரணியை ஆல் அவுட்டாக்கி உள்ளது. இந்தப் பட்டியலில் நியூசிலாந்து 40 முறை 3வது இடத்திலும், உகாண்டா 35 முறை 4வது இடத்திலும், மே.இ.தீவுகள் 32 முறை 5வது இடத்திலும் உள்ளன.
பதப்படுத்தப்பட்ட, அதிக சர்க்கரைக் கொண்ட உணவுகளை வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது என ஊட்டச்சத்து நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். அதேபோல் வாழைப்பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிட்டால், ரத்த ஓட்டத்தில் தேவைக்கு அதிகமான மெக்னீசியம், பொட்டாசியத்தின் அளவு அதிகரித்து இதய ஆரோக்யத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும். அதிக நார்ச்சத்து கொண்ட காய்கறிகளை பச்சையாக காலையில் சாப்பிடுவது வயிறு சார்ந்த பிரச்னைகளை ஏற்படுத்தும்.
1950 – சீனா திபெத் மீதான தாக்குதலை ஆரம்பித்தது.
1959 – சோவியத் விண்கலம் ‘லூனா 3’ சந்திரனின் அதி தூரத்தியப் புகைப்படங்களை பூமிக்கு அனுப்பியது.
1985 – புவேர்ட்டோ ரிக்கோவில் வெள்ளம், நிலச்சரிவு காரணமாக 200 பேர் உயிரிழந்தனர்.
2016 – மேத்யூ சூறாவளியின் தாக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 800 ஆக அதிகரித்தது.
2023- இஸ்ரேல் மீது பாலஸ்தீனத்தை சேர்ந்த ஹமாஸ் அமைப்பு முதல்முறையாக தாக்குதல் நடத்தியது.
ஆரஞ்சு ஜூஸில் வைட்டமின் சி இருப்பதால் தினமும் காலையில் அதை குடிப்பது உடலுக்கு நல்லது என வல்லுநர்கள் கூறுகின்றனர். இருப்பினும், ஆரஞ்சு ஜூஸில் சர்க்கரை சேர்க்காமல், தேன் அல்லது பனை வெல்லம் சேர்த்து சாப்பிடுவது உடலுக்கு மேலும் ஆரோக்கியத்தை தரும் என்கிறார்கள். தினமும் ஆரஞ்சு ஜூஸ் குடிப்பதன் மூலம் சருமத்தை ஆரோக்கியமாக பராமரித்து இளமையாக இருக்கலாம் என கூறப்படுகிறது.
*உண்மையான நண்பர்கள் நட்சத்திரங்களைப் போன்றவர்கள், உங்களைச் சுற்றி இருட்டாக இருக்கும்போது மட்டுமே அவர்களை அடையாளம் காண முடியும். * நீங்கள் வாழும் வாழ்க்கையை நேசியுங்கள், நீங்கள் நேசிக்கும் வாழ்க்கையை வாழுங்கள். *உங்கள் வாழ்க்கை முழுவதும் கைதியாக இருப்பதை விட, சுதந்திரத்திற்காகப் போராடிச் சாவது மேலானது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் வரலாற்றில் முதல் முறையாக, போட்டி ஆரம்பித்த 24 மணி நேரத்தில் ஒரு போட்டியாளர், நிகழ்ச்சியில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்படுவார் என விஜய்சேதுபதி அறிவித்துள்ளார். போட்டியாளர்கள், ரசிகர்கள் என யாருமே எதிர்பாராத இந்த அறிவிப்பு, நிகழ்ச்சியின் சுவாரஸ்யத்தை, முதல் எபிஸோடிலேயே உச்சத்திற்குக் கூட்டிச் சென்றுள்ளது. முதல் நபராக வெளியேறப்போவது யார்?
13 ஆண்டுகளுக்கு முன்பு தடை விதிக்கப்பட்ட மருந்து தற்போதும் குழந்தைகளுக்கு, மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்டு வருவதாக ஐ.பி.சி சமீபத்தில் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. நிம்சுலைடு மருந்து கல்லீரல் பாதிப்பை ஏற்படுத்தும் வேதிப்பொருளை, உருவாக்குவது தெரியவந்ததையடுத்து அதற்கு மத்திய அரசு தடைவிதித்திருந்தது. இந்நிலையில் மருத்துவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியில் ஐ.பி.சி ஈடுபட்டுள்ளது.
வெப் தொடர் ஒன்றை இயக்கவுள்ளதாக நடிகை ரேவதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார். இந்த வெப் தொடர் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகவுள்ளதாகவும், இணை இயக்குனராக சித்தார்த் ராமசாமி பணியாற்றவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அவர் இதற்குமுன் 2002ம் ஆண்டு வெளியான மிடிர், மை ஃப்ரெண்ட் என ஆங்கில படத்தையும், 2022 ஆம் ஆண்டு கஜோல்-விஷால் ஜெத்வா நடிப்பில் வெளியான சலாம் வெங்கி படத்தையும் இயக்கியுள்ளார்.
▶குறள் பால்: அறத்துப்பால் ▶அதிகாரம்: அன்புடைமை. ▶குறள் எண்: 75
▶ குறள்: அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து இன்புற்றார் எய்தும் சிறப்பு.
▶பொருள்: உலகில் இன்புற்று வாழ்கின்றவர்க்கு வாய்க்கும் சிறப்பு, அவர் அன்புள்ளம் கொண்டவராக விளங்குவதன் பயனே என்று கூறலாம்.
▶அக்.7 (புரட்டாசி 21) ▶திங்கள் ▶நல்ல நேரம்: 6:15 – 7:15 AM & 4:45 – 5:45 PM ▶கெளரி நேரம்: 9:15 AM -10:15 AM & 7:30 PM – 8:30 PM ▶ ராகு காலம்: 7:30 AM – 9:00 AM ▶ எமகண்டம்: 10:30 AM – 12:00 PM ▶ குளிகை: 1:30 PM – 3:00 PM ▶ திதி: பஞ்சமி ▶ பிறை: வளர்பிறை ▶ சுப முகூர்த்தம்: இல்லை ▶ சூலம்: கிழக்கு ▶ பரிகாரம்: தயிர் ▶ சந்திராஷ்டமம்: அசுவினி ▶ நட்சத்திரம்: அனுஷம் முழுவதும் 0.00 ▶யோகம்: சித்த யோகம்.
Sorry, no posts matched your criteria.