News October 7, 2024

‘மகாராஜா’ இயக்குநருக்கு கார் பரிசு!

image

‘மகாராஜா’ பட இயக்குநர் நித்திலன் சாமிநாதனுக்கு படக்குழுவினர் சொகுசு காரை பரிசளித்தனர். விஜய் சேதுபதியின் 50ஆவது திரைப்படமாக வெளியான இப்படம், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. குறைந்த பட்ஜெட்டில் உருவான இப்படம், வித்தியாசமான திரைக்கதை காரணமாக ₹100 கோடி வசூல் ஈட்டி அசத்தியது. அதேபோல, நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி பல சாதனைகளை படைத்தது.

News October 7, 2024

ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்தது

image

கடந்த சில நாட்களாக உயர்ந்து வந்த ஆபரணத் தங்கத்தின் விலை 5 நாட்களுக்கு பின் குறைந்துள்ளது. இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹160 குறைந்து ₹56,800க்கும், கிராமுக்கு ₹20 குறைந்து ₹7,100க்கும் விற்பனையாகிறது. அதேபோல், 24 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹60,440க்கும், கிராமுக்கு ₹7,555க்கும், ஒரு கிராம் வெள்ளி ₹103க்கும், கிலோ வெள்ளி ₹103,000க்கும் விற்பனையாகிறது.

News October 7, 2024

Space Science: வீரர்களுக்கு உணவாகும் சிறுகோள்கள்

image

விண்வெளியில் நீண்ட காலம் பயணிக்கும் (அ) தங்கி இருக்கும் விண்வெளி வீரர்களுக்கு தேவையான ஊட்டச்சத்துகளை உறுதிசெய்ய ஆஸ்ட்ரோபயோலஜி நிபுணர்கள் புதிய ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். பூமியில் இறங்கிய விண்கலில் நுண் உயிரிகளின் தாக்கம் இருப்பதை அவற்றின் மாதிரியில் இருந்து கண்டறிந்துள்ளனர். இதனையடுத்து அவற்றில் இருந்து கார்பனை பிரித்தெடுத்து, அதை ஊட்டச்சத்துக்களாக மாற்றும் பணியில் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

News October 7, 2024

5G அல்ல… 4G மேம்படுத்துவதில் கவனம் செலுத்தும் JIO

image

ரிலையன்ஸ் JIO அதன் 5G நெட்வொர்க் விரிவாக்கப் பணிகளை தாமதப்படுத்தியுள்ளன. குறைந்த திறன் பயன்பாடு & நிலுவையில் உள்ள பிரீமியம் பணமாக்கல் உள்ளிட்ட காரணங்களால் நிறுவனம் இம்முடிவை எடுத்துள்ளதாக அறியமுடிகிறது. அத்துடன், ஏற்கெனவே இருக்கும் 4G பயனர்களுக்கு பிரத்யேக மேம்பட்ட 5G சேவையை வழங்க 90%க்கும் அதிகமான இந்தியாவின் இணைய பயனர்களை உள்ளடக்கிய JIO நெட்வொர்க் கவனம் செலுத்தி வருகிறது.

News October 7, 2024

5 பேர் உயிரிழந்தது வேதனை: கனிமொழி

image

சமாளிக்க முடியாத கூட்டங்களை இனி தவிர்க்க வேண்டுமென கனிமொழி வேண்டுகோள் விடுத்துள்ளார். தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், மெரினா கடற்கரையில் விமான சாகச நிகழ்ச்சியை காணவந்த மக்கள் கூட்ட நெரிசலால் அவதியுற்றதும், வெப்ப நிலையும் அதிகமாக இருந்த நிலையில் 5 பேர் உயிரிழந்த செய்தி வேதனை அளிப்பதாக தெரிவித்துள்ளார். முறையான ஏற்பாடுகள் இல்லையென எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

News October 7, 2024

சற்றுமுன்: பள்ளிகள் திறந்த உடனே பறந்த உத்தரவு

image

காலாண்டு விடுமுறைக்கு பின், இன்று பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் 1-5ம் வகுப்பு மாணவர்களின் தொகுத்தறி மதிப்பெண்களை TNSED செயலில் பதிவேற்றுமாறு மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு தொடக்கக்கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது. விடைத்தாள்களை திருத்திய பின்னர் தொகுத்தறி மதிப்பெண்களை அக்.9க்குள் உள்ளீடு செய்வது அவசியம். இது தொடர்பாக அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் உரிய அறிவுரைகளை வழங்கவும் அறிவுறுத்தியுள்ளது.

News October 7, 2024

சின்ன கல்லு… பெத்த லாபம்…

image

உலகின் மிகச் சிறிய Rubik’s Cube அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வெறும் 0.33 கிராம் எடை கொண்ட இந்த Rubik’s Cube, ஏற்கெனவே கின்னஸ் சாதனை படைத்திருந்தது. இந்நிலையில், தற்போது MegaHouse என்ற வெப்சைட்டில் விற்பனைக்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை ₹4.39 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் ஒவ்வொரு பக்கமும் 1.19 இன்ச் நீளம் கொண்டது. தற்போது ஆர்டர் செய்தால் அடுத்த ஆண்டு ஏப்ரலில் டெலிவரி ஆகும்.

News October 7, 2024

தாக்குதலை இஸ்ரேல் நிறுத்த வேண்டும் : ப.சி

image

பாலஸ்தீனம் மற்றும் லெபனானில் தாக்குதல் நடத்துவதை இஸ்ரேல் உடனடியாக நிறுத்த வேண்டும் என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். போர் நிறுத்தம் மட்டுமே பேச்சுவார்த்தைக்கான சூழ்நிலையை உருவாக்கும் எனக் கூறிய அவர், காஸாவை தொடர்ந்து லெபனானிலும் இஸ்ரேலின் இடைவிடாத தாக்குதலால் பல ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர். இது போருக்கான காலம் அல்ல என்று மோடி சொல்வதை போல், இஸ்ரேல் தனது தாக்குதலை நிறுத்த வேண்டும் என்றார்.

News October 7, 2024

Motor News: மாருதியின் எகானமி மாடல் WagonR Waltz

image

வேகன்ஆர் வரிசையில் Waltz என்ற ஸ்பெஷல் எகானமி எடிஷனை மாருதி சுசூகி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. புது ஸ்டைலில் வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த மாடலில், குரோல் கிரில், 6.2 இன்ச் திரை கொண்ட மியூசிக் சிஸ்டம், செக்யூரிட்டி சிஸ்டம், ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா ஆகியவை இடம்பெற்றிருக்கின்றன. இரு ஏர் பேக், ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ், ஏ.பி.எஸ். பாதுகாப்பு வசதி வசதியுடன் கிடைக்கும் இதன் விலை ₹5.65 லட்சமாகும்.

News October 7, 2024

மன அழுத்தம் போக்கும் மோரிங்கா டீ

image

மன அழுத்தம், மனச்சோர்வு, பதற்றம் போன்ற பிரச்னைகள் உள்ளவர்கள் மோரிங்கா டீ பருகலாம் என டயட்டீஷியன்ஸ் பரிந்துரைக்கின்றனர். முருங்கை இலை (கைப்பிடி), எலுமிச்சை இலை (2), தேநீர் தூள், சுக்கு, சோம்பு, பட்டை, துளசி, ஏலக்காய் பொடி சேர்த்து நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி, பனை வெல்லம் சேர்த்தால் மணமிக்க சுவையான மோரிங்கா டீ ரெடி. இந்த டீயை இரவு தவிர்த்து எப்போது வேண்டுமென்றாலும் குடிக்கலாம்.

error: Content is protected !!