India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தொழிலதிபர் ரத்தன் டாடா உடல்நலக்குறைவால் மும்பை ப்ரீச் கேண்டி ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. நள்ளிரவில் உடல்நலக் குறைவு ஏற்பட்டதாகவும், மும்பை பிரீச் கேண்டி ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டதாகவும் ஊடகங்களில் செய்தி வெளியானது. ஆனால், இது வழக்கமான செக்-அப் தான் என்றும், தான் நலமுடன் இருப்பதாகவும் டாடா தெரிவித்துள்ளார்.
சாம்சங் நிறுவன ஊழியர்களுடன் 6ஆம் கட்டமாக நடந்த முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இருங்காட்டுக்கோட்டையில் உள்ள தொழிலாளர் துணை ஆணையர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஊதிய உயர்வு, போனஸ், தொழிற்சங்க அங்கீகாரம் உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு மாதமாக அந்நிறுவன ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தக்காளி விலை 2 மடங்கு உயர்ந்துள்ளதால், குடும்ப தலைவிகள், ஹோட்டல் உரிமையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். கடந்த மாதம் சில்லரை விற்பனையில் தக்காளி Kg ₹40க்கு விற்கப்பட்டது. ஆனால், தற்போது வரத்து குறைந்ததால் சென்னையில் 2 நாட்களுக்கு முன்பு மொத்த விற்பனையில் ₹55க்கு விற்கப்பட்ட தாக்காளி இன்று ₹110 வரை விற்பனையாகிறது. அதேபோல், ஒட்டன்சத்திரம், திருச்சி, மதுரை மார்க்கெட்டிலும் தக்காளி விலை உயர்ந்துள்ளது.
BAN அணிக்கு எதிரான முதலாவது T20 போட்டியில், அபாரமாக விளையாடி ஹாட்ரிக் சிக்ஸர் அடித்த சூர்யகுமார் யாதவ் புதிய சாதனை படைத்துள்ளார். அதாவது, 3 சிக்ஸர்களை அடித்ததன் மூலம் சர்வதேச T20 கிரிக்கெட்டில் 139 சிக்ஸரை அவர் உறுதி செய்தார். இதன் மூலம் சர்வதேச T20இல் அதிக சிக்ஸர்ஸ் அடித்த வீரர்கள் பட்டியலில் ENG வீரர் ஜாஸ் பட்லரின் (137*) சாதனையை SKY முறியடித்து டாப்-5 பட்டியலில் 4ஆவது இடத்தைப் பிடித்தார்.
மெரினாவில் 5 பேர் உயிரிழந்த விவகாரத்தில் சினிமாவிலிருந்து முதல் ஆளாக இயக்குநர் ரத்னகுமார் குரல் கொடுத்துள்ளார். Airshow-ஐ பார்க்க வரும் கூட்டத்தின் அளவை சரியாக கணித்து இருக்க வேண்டும். இன்னமும் பறக்கும் விமானத்தை அண்ணாந்து பார்க்கும் 5 அப்பாவி உயிர்கள் பறி போயிருக்கிறது. கேளிக்கைக்கு கூட்டம் கூடவே பயம் ஏற்பட்டால், நாளை நியாயத்துக்கு எவ்வாறு கூடுவார்கள்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
உலகத்திலேயே அரசு நிகழ்ச்சியில் கட்சி சின்னத்துடன் டி-ஷர்ட் அணிந்து செல்லும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்தான் என ஜெயக்குமார் குற்றஞ்சாட்டியுள்ளார். இது குறித்து பேசிய அவர், அரசு பதவியில் இருப்போர் பின்பற்ற வேண்டிய மரபுகளை உதயநிதி மீறுவதாகக் கூறினார். மேலும், இனி அரசு நிகழ்ச்சிகளில் டி-ஷர்ட் அணிந்தால் தாங்கள் கோர்ட்டுக்கு செல்வோம் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வங்கதேச அணிக்கு எதிரான முதலாவது T20 போட்டியில், அபாரமாக விளையாடி வென்ற இந்திய அணி பல சாதனைகளை படைத்துள்ளது. எதிரணியை அதிக முறை ஆல்அவுட் செய்த பாகிஸ்தானின் (42) உலக சாதனையை சமன் செய்தது. அதன்பின் 120+ ரன்கள் என்ற இலக்கை இந்தியா வேகமாக (11.5 ஓவர்கள்) துரத்தியது. 49 பந்துகள் எஞ்சிய நிலையில் இந்திய அணி வேகமாக எடுத்து தனது (2016இல் BAN அணிக்கு எதிரான) முந்தைய சாதனையை முறியடித்தது.
18ஆவது ஐ.பி.எல் T20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்குகிறது. இதற்கான வீரர்களைத் தேர்ந்தெடுக்கும் IPL மெகா ஏலம் நவம்பர் இறுதியில் நடக்கவுள்ளது. இந்த ஏலத்தை சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத் அல்லது அங்குள்ள துறைமுக நகரான ஜேட்டாவில் நடத்துவது குறித்து பரிசீலனையில் இருப்பதாக IPL வட்டார தகவல் தெரிவிக்கின்றன. துபாயும் ஐ.பி.எல். நிர்வாகத்தின் யோசனையில் உள்ளதாக அறியமுடிகிறது.
1) பண்டைய கிரேக்கர்கள் காதலின் கடவுளாகக் கருதி வழிபட்ட கிரகம் எது? 2) நீரை அருந்தாத வாழும் விலங்கு எது? 3) AAI என்பதன் விரிவாக்கம் என்ன? 4) தமிழின் முதல் அகராதி நூலின் பெயர் என்ன? 5) இருட்டைப் பார்த்து ஏற்படும் அதீத பயத்தைக் குறிக்கும் அறிவியல் சொல் என்ன? 6) பிளாஸ்டிக் பொருட்கள் மண்ணோடு மண்ணாகச் சிதைவடைய எத்தனை ஆண்டுகளாகும்? விடைகளை கமெண்ட்டில் சொல்லுங்க. சரியான விடையை 2 மணிக்கு பாருங்க.
அக்.21ஆம் தேதி 2 அரசுப் பணிகளுக்கு எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு நடக்கவுள்ளது. இரு தேர்வுகளும் பொறியியல் கல்வித் தகுதியை கொண்டிருப்பதால், தேர்வர்களால் பங்கேற்க முடியாத சூழல் உருவாகியுள்ளது. எனவே, தேர்வர்களின் நலன் கருதி நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறைக்கான தேர்வை ஒத்திவைக்க வேண்டும். வரும் காலங்களில் குழப்பங்கள் ஏற்படுவதை தடுக்க TNPSC மூலம் ஆள்தேர்வு நடத்த கோரிக்கை எழுந்துள்ளது.
Sorry, no posts matched your criteria.