News October 10, 2024

மழைக்காலத்திற்கு ஏற்ற இதமான முசுமுசுக்கை டீ

image

மழைக்காலத்தில் ஏற்படும் இருமல், சளி, மூச்சிரைப்பு போன்ற பிரச்னைகள் உள்ளவர்கள் முசுமுசுக்கை டீ பருகலாம் என டயட்டீஷியன்ஸ் பரிந்துரைக்கின்றனர். முசுமுசுக்கை இலை (கைப்பிடி), தேநீர் தூள், சுக்கு, பட்டை, துளசி, மிளகு, மஞ்சள், கிராம்பு, ஏலக்காய் பொடி சேர்த்து நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி, பனை வெல்லம் சேர்த்தால் மணமிக்க சுவையான முசுமுசுக்கை டீ ரெடி. இந்த டீயை எப்போது வேண்டுமென்றாலும் பருகலாம்.

News October 10, 2024

ரத்தன் டாடாவின் காதல் கதை..❤️❤️

image

தொழிலதிபர் ரத்தன் டாடா சிறு வயதில் அமெரிக்காவில் இருந்த போது, அந்நாட்டைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் காதல் வயப்பட்டார். இருவரும் திருமணம் செய்யும் தருவாயில், இந்தியாவுக்கு வர வேண்டிய கட்டாயம் டாடாவுக்கு ஏற்பட்டது. அப்போது சரியாக இந்தியா – சீனா போர் மூண்டதால், அதன் பிறகு இருவருமே சந்திக்க முடியாமல் போனது. முதல் காதலை மறக்க முடியாத டாடா, அதன் பிறகு திருமணம் செய்து கொள்ளவே இல்லை. குட் பை ஜென்டில்மேன்.

News October 10, 2024

30 நொடிகளில் உலகைச் சுற்றி…

image

➤தென்கொரியாவுடனான எல்லையை நிரந்தரமாக மூடுவதாக வடகொரியா அறிவித்துள்ளதால் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது. ➤ஜப்பான் நாடாளுமன்றத்தை பிரதமர் ஷிகெரு இஷிபா கலைத்து, தேர்தலை வரும் 27ஆம் தேதி நடத்த உத்தரவிட்டுள்ளார். ➤’டிஸ்கார்டு’ சமூக வலைத்தளத்திற்கு ரஷ்ய உச்ச நீதிமன்றம் நிரந்தர தடை விதித்துள்ளது. ➤’மில்டன்’ சூறாவளி புயல் காரணமாக அமெரிக்காவில் 1,300 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

News October 10, 2024

தமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்!

image

தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸை அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின். அதன்படி, பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் சி மற்றும் டி பிரிவு தொழிலாளர்களுக்கு 20% போனஸ் வழங்கப்படவுள்ளது. அதாவது, 20% வரை மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும். நிரந்தரத் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.8,400 முதல் அதிகபட்சமாக ரூ.16,800 வரை போனஸாக கிடைக்கும். இதனால் 2.75 லட்சம் ஊழியர்கள் பயன்பெறுவர்.

News October 10, 2024

ரத்தன் டாடாவின் பொன்மொழிகள்!

image

ரத்தன் டாடாவின் அசுர வளர்ச்சிக்கு அசாத்திய துணிச்சலும், அபார தன்னம்பிக்கையுமே காரணம். அவரது சில பொன்மொழிகள்: 1)ரிஸ்க் எடுக்காததுதான் பலர் வாழ்க்கையில் எடுக்கும் மிகப்பெரிய ரிஸ்க். 2) வேகமாக செல்ல விரும்பினால், தனியே செல்லுங்கள்; நீண்டதூரம் செல்ல விரும்பினால் சேர்ந்து செல்லுங்கள். 3) வாழ்வின் ஏற்ற இறக்கமே நம்மை முன்னுக்கு கொண்டு செல்லும். ECG-இல் கோடு நேராக இருந்தால் நாம் இறந்ததாக அர்த்தம்.

News October 10, 2024

துர்காஷ்டமி: எப்படி வழிபட வேண்டும்?

image

அம்பிகைக்குரிய நவராத்திரியின் 8ஆவது நாளான அஷ்டமி தினத்தை ‘துர்காஷ்டமி’ என புராணம் கூறுகிறது. சண்டன்-முண்டன் அசுரர்களை அழித்த சிறப்பு வாய்ந்த இந்த நன்னாளில் காலையிலேயே குளித்து, விரதமிருந்து, ராகு காலத்தில் பட்டீஸ்வரம் கோயிலுக்குச் சென்று துர்க்கைக்கு வெண் தாமரை மலர் மாலை சாற்றி, தேவி அஷ்டக துதியைப் பாடி, எலுமிச்சை விளக்கேற்றி வழிபட்டால் தீய சக்திகளால் உண்டான தொல்லைகள் நீங்கும் என்பது ஐதீகம்.

News October 10, 2024

டாடா பற்றிய 3 சுவாரஸ்யமான தகவல்கள்!

image

1) 1937-இல் பிறந்த ரத்தன் டாடாவின் பெற்றோர் கருத்து வேறுபாடு காரணமாக 1948-இல் பிரிந்துவிட்டனர். பிறகு தனது பாட்டி நவஜ்பாய் டாடா பராமரிப்பில்தான் அவர் வளர்ந்தார். 2) ரத்தன் டாடாவுக்கு 4 முறை திருமணம் நடைபெறுவதற்கான சூழல் நெருங்கிய போதிலும், கடைசி நேரங்களில் அவை கை நழுவின. 3) அமெரிக்க பெண்ணை காதலித்து வந்த டாடா, அவரை திருமணம் செய்யும் தருணத்தில் இந்தியா – சீனா போர் மூண்டதால் அதுவும் நடக்கவில்லை.

News October 10, 2024

ரத்தன் டாடாவுக்கு அரசு மரியாதை

image

ரத்தன் டாடாவின் உடலுக்கு அரசு மரியாதை, அளிக்கப்படும் என மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அறிவித்துள்ளார். ரத்தன் டாடாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின் பேசிய அவர், மும்பையில் உள்ள கலை நிகழ்ச்சிகளுக்கான தேசிய மையத்தில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்படும் என்ற அவர், பல்வேறு தொழில்களுக்கு வழிகாட்டியாக திகழ்ந்த அவர், எப்போதும் நம் நினைவிலும் இருப்பார் என்றார்.

News October 10, 2024

விடுபட்டவர்களுக்கும் ₹1,000 வழங்க நடவடிக்கை: உதயநிதி

image

விடுபட்ட மகளிருக்கும் ₹1,000 உரிமைத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என Deputy CM உதயநிதி கூறியுள்ளார். ஆவடியில் பேசிய அவர், விடியல் பேருந்து பயணம், மகளிர் உரிமைத் தொகை, காலை சிற்றுண்டி போன்ற திட்டங்களால் பெண்கள் பயனடைந்துள்ளதாக பெருமிதம் தெரிவித்தார். மேலும் CM ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டுசென்று, விடுபட்ட பெண்களுக்கும் உரிமைத் தொகை ₹1,000 வழங்கப்படும் எனவும் அவர் உறுதி அளித்தார்.

News October 10, 2024

எனது ஹீரோ ரத்தன் டாடா: கமல்ஹாசன் நெகிழ்ச்சி

image

மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடாவை சந்தித்த நெகிழ்ச்சியான தருணத்தை பகிர்ந்துள்ளார் கமல்ஹாசன். அவர் வெளியிட்டுள்ள பதிவில், “ரத்தன் டாடா என்னுடைய ஹீரோ. அவரை பின்பற்ற என் வாழ்நாள் முழுவதும் முயற்சித்திருக்கிறேன். 2008 மும்பை தாக்குதலுக்கு பிறகு நான் தாஜ் ஓட்டலில் தங்கியிருந்த போது, அவரை சந்தித்தேன். அந்த நெருக்கடியான தருணத்திலும், அவர் பலமான ஆளுமையாக நிமிர்ந்து நின்றது ஆச்சரியம் தந்தது” என்றார்.

error: Content is protected !!