India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
த்ரிஷாவின் நியூ லுக் புகைப்படம் இணையத்தில் வைரலாகிறது. மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகிவரும் ‘விடாமுயற்சி’ படத்தில் த்ரிஷா நடித்துள்ளார். இதனிடையே, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் ‘குட் பேட் அக்லி’ படத்திலும் அவர் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், நியூ ஹேர் ஸ்டைலில் இருக்கும் த்ரிஷாவின் புகைப்படம் வெளியாகியுள்ளது. முன்னதாக, அஜித்தின் நியூ லுக் போட்டோ கவனம் ஈர்த்தது.
2024-25ஆம் கல்வியாண்டிற்கான திருத்திய நாட்காட்டியில், அரையாண்டு தேர்வு டிச. 16 – 23 வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து டிச. 24 – ஜன. 1 வரை 9 நாட்கள் விடுமுறை அளிக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. ஆங்கிலப் புத்தாண்டு முடிந்து ஜன. 2ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுகின்றன. அதே மாதம் 6ஆம் தேதி 10, 12 ஆகிய வகுப்புகளுக்கு முதல் திருப்புதல் தேர்வு தொடங்குகிறது.
மழைக்காலத்தில் ஏற்படும் இருமல், சளி, காய்ச்சல், கோழை, மூச்சிரைப்பு போன்ற பிரச்னைகள் உள்ளவர்கள் தூதுவளை தேநீரைப் பருகலாம் என ஆயுர்வேத மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். கைப்பிடி தூதுவளை இலை, சுக்கு, திப்பிலி, மிளகு, மஞ்சள், கிராம்பு, ஏலக்காய் பொடி சேர்த்து நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி, பனங்கற்கண்டு சேர்த்தால் மணமிக்க சுவையான தூதுவளை தேநீர் ரெடி. இந்த டீயை எப்போது வேண்டுமென்றாலும் பருகலாம்.
அரசியல் சுயநலத்திற்காக நிதி கூட்டாட்சியை பாஜக அரசு சிதைப்பதாக விசிக எம்பி ரவிக்குமார் குற்றம் சாட்டியுள்ளார். மாநிலங்களுக்கு வழங்கிய அக்டோபர் மாதத்துக்கான நிதி பங்கீட்டில் மத்திய அரசு பாரபட்சம் காட்டியுள்ளது. தமிழ்நாடு ( ₹7,268 கோடி), கேரளா உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களுக்கு ₹28,152 கோடி ஒதுக்கீடு செய்த மத்திய அரசு, உ.பி.,க்கு மட்டும் ₹31,962 கோடி நிதியை வாரி வழங்கியுள்ளது என சாடினார்.
மிக கனமழை எச்சரிக்கை எதிரொலியாக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. எவ்வித பாதிப்புகள் ஏற்படாதவாறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென வருவாய் பேரிடர் நிர்வாக ஆணையர் அறிவுறுத்தியுள்ளார். மேலும், பேரிடர்களை கையாள்வதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்கும்படியும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
ரத்தன் டாடா மறைவுக்கு இரங்கல் தெரிவித்து பேடிஎம் CEO விஜய் சேகர் சர்மா வெளியிட்ட இரங்கல் பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து ட்வீட் செய்த அவர், அடுத்த தலைமுறை தொழில் முனைவோர் இந்தியாவின் எளிமையான தொழிலதிபருடன் தொடர்பு கொள்ளும் வாய்ப்பை தவறவிடுவார்கள் எனப் பதிவிட்டிருந்தார். மேலும், ஓகே Tata bye bye எனக் குறிப்பிட்டதற்கு கண்டனங்கள் வலுத்தது. இதைத் தொடர்ந்து அவர் அந்த பதிவை நீக்கினார்.
ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, விஜயதசமி திருநாளையொட்டி விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். நீங்கள் மேற்கொள்ளும் அனைத்துப் புதிய முயற்சிகளும் வெற்றிபெற வாழ்த்துகள். தொழில் கருவிகளையும், பயன்படுத்தும் வாகனங்களையும், அறிவை போதிக்கும் புத்தகங்களை வணங்கி வழிபடுவோம் எனக் கூறியுள்ளார். விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவிக்காதது சர்ச்சையான நிலையில், ஆயுத பூஜைக்கு அவர் வாழ்த்து கூறியுள்ளார்.
➤செங்கடல் பகுதியில் சென்ற லைபீரிய சரக்கு கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளனர். ➤தைவானுக்கு ராணுவ உதவிகளை வழங்கிய 3 அமெரிக்க நிறுவனங்களுக்கு சீனா பொருளாதார தடை விதித்துள்ளது. ➤லெபனானிலுள்ள ஐ.நா. அமைதிப் படை நிலை வீரர்கள் மீது இஸ்ரேல் படையினர் நடத்திய தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளனர். ➤ஐ.நாவின் HRC குழுவில் இணைவதற்கான வாக்கெடுப்பில் சவுதி அரேபியா தோல்வியுற்றது.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் தமிழில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘பரியேறும் பெருமாள்’. இந்தப் படத்தை கன்னடத்தில் ‘கர்கி’ என்ற பெயரில் ரீமேக் செய்து இயக்குநர் பவித்ரன் வெளியிட்டுள்ளார். கதாநாயகனாக நடிகர் ஜே.பி, நாயகியாக மீனாட்சி, முதன்மை வேடத்தில் சாது கோகிலா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சாதி ஒழிப்பு, சமூக நீதி, சமத்துவத்தை பேசும் இப்படத்துக்கு கன்னட ரசிகர்கள் அமோக வரவேற்பு அளித்துள்ளனர்.
டயட்டில் இருந்து டீயை முற்றிலுமாக தவிர்ப்பது சிலருக்கு மன ரீதியான பிரச்னையை தரலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். அதற்கு பதிலாக, மூலிகை தேநீர், பழச்சாறு, வெந்நீர் போன்றவற்றை முயற்சிக்கலாம் என்கிறார்கள். குறிப்பாக, ஆப்பிள், கிரான்பெர்ரி போன்ற பழச்சாறுகளில் காஃபைன் இல்லாததால் உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கும். வெந்நீருடன் எலுமிச்சை சாறு அல்லது தேன் கலந்து குடிக்கலாம் என்றும் கூறுகின்றனர்.
Sorry, no posts matched your criteria.