News October 11, 2024

Cooking Tips: என் சமையல் அறையில்…

image

*சப்பாத்தி மாவு மீது வெண்ணெய் தடவி பிரிட்ஜில் வைத்தால் மாவு நிறம் கெடாமல் இருக்கும். *காய்ந்த மிளகாயை வறுக்கும்போது, சிறிது உப்பு போட்டு வறுத்தால் நெடி வராது. *ஊறுகாய் கெட்டுப்போகாமல் இருக்க சிறிதளவு வினிகர் சேர்க்கலாம். *தோல் சீவிய இஞ்சை இடித்து, தயிரில் போட்டு வைத்தால் அது நீண்ட நேரம் புளிக்காமல் இருக்கும். *பருப்பு வேக வைக்கும்போது நெய் சேர்த்து சமைத்தால் சாம்பார் ருசியாக இருக்கும்.

News October 11, 2024

வரும் ஜனவரி முதல் ‘SSMB29’ படப்பிடிப்பு

image

ராஜ மெளலி இயக்கத்தில், மகேஷ் பாபு நடிப்பில் உருவாகும் ‘SSMB29’ படத்தின் படப்பிடிப்பு அடுத்தாண்டு ஜனவரியில் தொடங்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இருவரும் இணைந்து பணியாற்ற இருப்பதாகக் கடந்த ஆண்டு அறிவிப்பு வெளியானது. அதைத் தொடர்ந்து, ப்ரீபுரொடெக்‌ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. ஆக்‌ஷன் அட்வென்ச்சர் கதை அம்சத்தோடு தயாராகும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

News October 11, 2024

சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜைக்கு உகந்த நேரம்

image

நவராத்திரியின் கடைசி நாள் என்பது இன்று கொண்டாடப்படும் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜையுடன் முடிவடையும். சரஸ்வதி, ஆயுத பூஜை செய்ய உகந்த நேரம் மதியம் 12 மணி முதல் 1.30 மணி வரை. மாலை நேரத்தில் பூஜை செய்வோர், 6 மணிக்கு மேல் செய்துக் கொள்ளலாம். வீட்டில் ஆயுதங்கள், புத்தகங்களை வைத்து, விளக்கேற்றி, சாம்பிராணி புகை போட்டு, சுண்டல், பொரி கடலை, வாழைப்பழம் உள்ளிட்ட பழ வகைகள் வைத்து படைக்க வேண்டும்.

News October 11, 2024

JOB: ITI முடித்தவர்களுக்கு மத்திய அரசில் வேலை

image

ONGC நிறுவனத்தில் காலியாக உள்ள 2,236 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. Apprentice (Data Entry Operator, Plumber, Welder, Fitter) பணிகளில் சேர தகுதி உள்ளவர்கள் இன்றே ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். கல்வித் தகுதி: 10ஆம் வகுப்பு, ITI, Diploma. வயது வரம்பு: 18-24. உதவித்தொகை: ₹9,000. விண்ணப்பிக்க கடைசி நாள்: அக்.25. கூடுதல் விவரங்களுக்கு<> ONGC<<>> இந்த முகவரியை கிளிக் செய்யவும்.

News October 11, 2024

மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் ஹிந்தி திணிப்பு: காங்.

image

ஹிந்தி திணிப்பை தமிழகம் என்றும் ஏற்றுக் கொள்ளாது என காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், ஒவ்வொரு மாநிலமும் தனித்துவமானது என்பதை மத்திய அரசு புரிந்துக் கொள்ள வேண்டுமெனக் கூறியுள்ளார். இதை செய்தால்தான், அதை செய்வேன் என மத்திய அரசு கூறுவது சரியில்லை என்ற அவர், மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் ஹிந்தியை திணிப்பதாகக் குற்றஞ்சாட்டினார்.

News October 11, 2024

ஒரே நாளில் தங்கம் விலை ₹560 உயர்வு

image

ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் ₹560 உயர்ந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹560 உயர்ந்து ₹56,760க்கும், கிராமுக்கு ₹70 உயர்ந்து ₹7,095க்கும் விற்பனையாகிறது. அதேபோல், வெள்ளியின் விலை கிராமுக்கு ₹2 உயர்ந்து ₹102க்கும், கிலோவிற்கு ₹2,000 உயர்ந்து ₹1,02,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை மீண்டும் உயரத் தொடங்கியதால், நகை பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

News October 11, 2024

பொது அறிவு வினா – விடை

image

1) பொற்கதவு நகரம் என அழைக்கப்படும் நகரம் எது? 2) BMW என்பதன் விரிவாக்கம் என்ன? 3) பில்லியர்ட்ஸ் மேசையின் நீளம் & அகலம் எவ்வளவு? 4) மனிதனைப் போல தலையில் வழுக்கை விழும் விலங்கு எது? 5) செம்பைவிட அதிவேகமாக மின்சக்தி பாயும் உலோகம் எது? 6) குண்டலகேசிக்கு எதிராக எழுந்த வாத நூல் எது? 7) கருப்பு நிறத்தில் முட்டையிடும் பறவை எது? விடைகளை கமெண்ட்டில் சொல்லுங்க. சரியான விடையை 2 மணிக்கு பாருங்க.

News October 11, 2024

‘கங்குவா’ பாடல் வெளியீட்டு விழா எப்போது?

image

‘கங்குவா’ திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவை இம்மாதம் இறுதியில் சென்னையில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு நவ.14ஆம் தேதி ரிலீஸாக உள்ளது. தமிழ், இந்தி உட்பட 10-க்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியாகவிருக்கும் இப்படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பை அண்மையில் வெளியான டிரைலர் அதிகரிக்கச் செய்துள்ளது.

News October 11, 2024

புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி

image

வங்கக்கடலில் நாளை வளிமண்டல சுழற்சி உருவாகிறது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல சுழற்சி மேலும் தீவிரமடைந்து புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும் என்றும், தமிழகத்தில் மழை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் எச்சரித்துள்ளது. இதனால், அதிகனமழை பெய்தாலும் சமாளிக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அனைத்து மாவட்டங்களுக்கும் அரசு உத்தரவிட்டுள்ளது.

News October 11, 2024

ஆங்கிலம் அறிவோம்: Plebiscite Vs Referendum

image

பொதுவாக்கெடுப்பு என்பதைக் குறிக்க Plebiscite, Referendum என்ற இரு சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவை இரண்டுக்கும் என்ன வேறுபாடு எனத் தெரியுமா? Referendum என்பது புதிய சட்ட சாசனம் அமலாவது போன்ற விஷயம் குறித்து நேரடியாகவே வாக்களிப்பதை குறிக்கும். Plebiscite என்பது மொழி இன அடிப்படையில் ஒரு நாட்டில் இருந்து பிரிந்துப் போகும் சுயநிர்ணய உரிமையை உறுதி செய்ய நடத்தப்படும் ஒரு வகையான வாக்கெடுப்பு ஆகும்.

error: Content is protected !!