News October 11, 2024

மும்பை விமான நிலையத்தில் 4 மணி நேரம் தவித்த ஸ்ருதி

image

மும்பையில் தாம் பயணிக்க இருந்த இண்டிகோ விமானம் 4 மணி நேரம் தாமதமானதாக ஸ்ருதிஹாசன் விரக்தி வெளியிட்டுள்ளார். எக்ஸ் பக்க பதிவில், எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் விமானம் தாமதமாகி இருப்பதாகவும், பயணிகள் அவதிக்கு ஆளாகியுள்ளதாகவும், குழப்பம் நிலவுவதாகவும் குறிப்பிட்டிருந்தார். மேலும் பலரும் கண்டனத்தை பதிவிட, விமானம் தாமதமாக மோசமான வானிலையே காரணம் என இண்டிகோ விளக்கம் அளித்துள்ளது.

News October 11, 2024

39,481 மத்திய அரசு வேலைகள்.. உடனே APPLY பண்ணுங்க

image

மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள 39,481 பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் நிறைவடைய இன்னும் 4 நாள்களே உள்ளன. BSF, CISF, CRPF உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு படைகளில் 39,481 காலி பணியிடங்கள் உள்ளன. இதில் சேர ஆண்கள், பெண்கள் ஆகிய இருபாலருமே விண்ணப்பிக்கலாம். இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வருகிற 14ஆம் தேதி கடைசி நாளாகும். இந்தத் தகவலை வேலை தேடும் உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்க.

News October 11, 2024

போலீஸ் DSP ஆன கிரிக்கெட் வீரர் சிராஜ்

image

இந்திய கிரிக்கெட் அணி வேகப்பந்து வீச்சாளர் முகம்மது சிராஜ், தெலங்கானா மாநில காவல்துறை DSP-யாக நியமிக்கப்பட்டுள்ளார். கிரிக்கெட் விளையாட்டில் புரிந்த சாதனைகள், தெலங்கானா மாநிலத்திற்கான அர்ப்பணிப்பை கவுரவிக்கும் வகையில், இந்த பதவி அளிக்கப்பட்டுள்ளது. ஹைதராபாத்தை சேர்ந்த சிராஜ், டெஸ்ட், ஒருநாள், டி20 ஆகிய 3 வடிவ கிரிக்கெட் விளையாட்டுகளிலும் இதுவரை 163 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார்.

News October 11, 2024

தளபதியே காட்டி கொடுத்தாரா! அதிர்ச்சியில் ஈரான்

image

ஹிஸ்புல்லா தலைவர் நசரல்லா இஸ்ரேலின் வான் தாக்குதலில் கொல்லப்பட்டார். மிக ரகசியமாக இயங்கிவந்த அவரின் இருப்பிடத்தை ஈரான் படையில் உள்ள மொசாத் உளவாளி தான் வெளியிட்டதாக தகவல் வெளியானது. இந்நிலையில், இது தொடர்பாக ஈரான் அரசின் இஸ்லாமிய புரட்சிப்படையின் ‘Quds’ பிரிவு சீனியர் தளபதி இஸ்மாயில் கனியிடம் ஈரான் அரசு விசாரணை நடத்தி வருகிறது. சில நாட்களாக இவர் வெளியில் தென்படாத நிலையில், இத்தகவல் கசிந்துள்ளது.

News October 11, 2024

ஆன்லைனில் கைது செய்ய முடியுமா? போலீஸ் விளக்கம்

image

ஆன்லைனில் கைது செய்ய முடியுமா என்ற சந்தேகத்திற்கு சைபர் கிரைம் போலீஸ் விளக்கம் அளித்துள்ளது. சிலருக்கு, நீங்கள் கைது செய்யப்பட்டுள்ளீர்கள். இதிலிருந்து தப்பிக்க பணம் செலுத்துங்கள் என மின்னஞ்சல் அனுப்பி மோசடி நடைபெறுகிறது. இதை சுட்டிக்காட்டி, சைபர் கிரைம் போலீசார் வெளியிட்டுள்ள எச்சரிக்கை அறிக்கையில், ஆன்லைனில் கைது செய்ய முடியாது. அதை நம்பி பணம் செலுத்த வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளனர்.

News October 11, 2024

இரவு 7 மணி வரை இந்த மாவட்டங்களில் மழை

image

இன்று இரவு 7 மணி வரை சிவகங்கை, மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் மழை பெய்யக்கூடும் என RMC தெரிவித்துள்ளது. தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், தி.மலை, குமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் லேசான மழை பெய்யலாம் எனவும் கணித்துள்ளது. SHARE IT

News October 11, 2024

லெபனானை கைப்பற்ற இஸ்ரேல் திட்டம்?

image

இஸ்ரேல் – லெபனான் மோதல் ஏற்படுவதை தடுக்கவே 1978 முதல் தெற்கு லெபனான் எல்லையில் ஐநா அமைதிப் படை நிறுத்தப்பட்டுள்ளது. இந்தியாவும் இதில் பங்கேற்றுள்ளது. இந்நிலையில் இஸ்ரேல் நடத்திய குண்டுவீச்சில் ஐநா அமைதிப்படை வீரர்கள் 4 பேர் காயமடைந்துள்ளனர். எல்லைப் பகுதியில் ஐநா படையினர் இருப்பது லெபனான் மீது படையெடுக்க தடையாக இருப்பதால், வேண்டுமென்றே இஸ்ரேல் அங்கு தாக்குதல் நடத்தியதாக நிபுணர்கள் கணிக்கின்றனர்.

News October 11, 2024

Recipe: முருங்கைப்பூ வடை எப்படி செய்வது?

image

கடலை பருப்பு, துவரம்பருப்பு ஆகிய இரண்டையும் 2 மணிநேரம் நீரூற்றி ஊறவைத்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். காம்பு நீக்கிய முருங்கைப் பூ, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, கறிவேப்பிலை, மல்லித் தழை ஆகியவற்றை பொடிதாக வெட்டி, பருப்பு கலவையில் உப்பு சேர்த்து பிசையவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி, மிதமான சூட்டில் மாவை வடைகளாக தட்டி, பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சுவையான முருங்கைப்பூ வடை ரெடி.

News October 11, 2024

₹39 முதல் ISD திட்டங்கள்… JIO அசத்தல்

image

ISD அழைப்பு திட்டங்களை ஜியாே மாற்றியமைத்துள்ளது. அதன்படி, ₹39 ரீசார்ஜ் திட்டத்தை ரீசார்ஜ் செய்தால், 7 நாள்கள் வேலிடிட்டி கிடைக்கும். அதில் அமெரிக்கா, கனடாவுக்கு 30 நிமிடங்கள் வரை பேசலாம். வங்கதேசத்துக்கு ₹49, மலேசியா, தாய்லாந்து, ஹாங்காங், சிங்கப்பூருக்கு ₹59, ஆஸ்திரேலியா, நியூசிலாந்துக்கு ₹69 ஆகிய திட்டங்களையும் தனித்தனி வேலிடிட்டி, அழைப்பு நிமிடங்களுடன் ஜியாே அறிமுகம் செய்துள்ளது.

News October 11, 2024

பூமியை நோக்கி இன்று வரும் 3 எரிகற்கள்

image

பூமியை நோக்கி இன்று 3 பிரமாண்ட எரிகற்கள் மிக வேகமாக வருவதாக அமெரிக்காவின் நாசா அமைப்பு எச்சரித்துள்ளது. அந்த எரிகற்களின் பயணப் பாதையை உன்னிப்பாக கவனிப்பதாக கூறியுள்ள நாசா, அவற்றால் பூமிக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை எனவும் தெரிவித்துள்ளது. பாெதுமக்கள் பாதுகாப்பு, எதிர்காலத் தேவைக்கு தயாராகும் வகையில் எரிகற்கள் பயணத்தை கண்காணித்து தரவுகளை சேகரித்து வருவதாகவும் நாசா கூறியுள்ளது.

error: Content is protected !!