India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருச்சியில் இருந்து சார்ஜா புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், திருச்சி விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறங்கியுள்ளது. விமானத்தின் டயர்கள் உள்ளே செல்லாததால், விமானத்தின் அடிப்பகுதியை தரையில் உரசி (Belly Landing) இவ்விமானம் தரையிறக்கப்பட்டது. விமானியின் சாமர்த்தியத்தால் பத்திரமாக விமானம் தரையிறக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விமானத்தில் 141 பயணிகளும் மகிழ்ச்சியில் கூச்சலிட்டு வருகின்றனர்.
திருச்சியில் இருந்து சார்ஜா புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், கோளாறு காரணமாக திருச்சி விமான நிலையத்தில் 8.15-க்கு தரையிறங்கவுள்ளது. விமானத்தின் டயர்கள் உள்ளே செல்லாததால், விமானத்தின் அடிப்பகுதியை தரையில் உரசி (Belly Landing) தரையிறக்கப்படும் எனக் கூறப்படுகிறது. மிக மெதுவாக விமானத்தை தரையிறக்க பைலட் முயற்சித்து வருகிறார்.
3ஆவது டி20 கிரிக்கெட் போட்டியில், இந்தியாவும் வங்கதேசமும் நாளை மோதவுள்ளன. 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா 2 போட்டிகளில் வென்று தொடரை கைப்பற்றியுள்ளது. இந்நிலையில், ஹைதராபாத்தில் நாளை 3ஆவது டி20 போட்டி நடைபெறவுள்ளது. இதில் வென்றால் 3-0 என்ற கணக்கில் வங்கதேசத்தை இந்திய அணி ஓய்ட் வாஸ் செய்து தொடரைக் கைப்பற்றும். வங்கதேசத்தை இந்திய அணி ஓய்ட் வாஸ் செய்யுமா? உங்கள் கருத்தை பதிவிடுங்க
சத்தியவாணி அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திர திட்டம் என்ற பெயரில் தமிழக அரசால், கைம் பெண்கள், ஏழை, மாற்றுத் திறனாளி பெண்களுக்கு தையல் இயந்திரம் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்திற்கான தகுதிகள்: வயது 20-40 இருக்க வேண்டும். தையல் தெரிந்திருக்க வேண்டும். ஆண்டு வருமானம் ₹72,000-க்கு மிகாமல் இருத்தல் அவசியம். இ-சேவை மூலம் அரசுக்கு விண்ணப்பிக்கலாம். இந்தத் தகவலை மற்றவர்களுக்கும் பகிருங்கள்.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று வீழ்ச்சியை சந்தித்துள்ளது. வர்த்தக நேர தொடக்கத்தில் ₹83.97ஆக இருந்தது. பிறகு ₹83.96ஆக உயர்ந்து, ₹84.10ஆக சரிந்தது. எனினும், வர்த்தக நேர முடிவில் ₹84.09ஆக இருந்தது. நேற்றைய வர்த்தக நேர முடிவுடன் ஒப்பிடுகையில் 11 காசுகள் வீழ்ச்சியை சந்தித்தது. மத்திய கிழக்கில் போர் சூழல், கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு உள்ளிட்டவையே காரணமாகக் கூறப்படுகிறது.
திருச்சியில் இருந்து சார்ஜா புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் கோளாறு ஏற்பட்டதை அடுத்து, அது இன்னும் சில நிமிடங்களில் தரையிறங்க உள்ளது. விமானத்தின் சக்கரங்கள் உள்ளே செல்லாததால், அது தரையிறங்கும் போது அசம்பாவிதம் ஏற்பட்டால், உள்ளே இருக்கும் பயணிகளுக்கு சிகிச்சை கொடுப்பதற்காக திருச்சி அரசு ஹாஸ்பிட்டல் தயாராக இருப்பதாக அம்மாவட்ட ஆட்சியர் பிரதீப் தெரிவித்துள்ளார்.
திருச்சியில் இருந்து சார்ஜா புறப்பட்ட விமானத்தில் கோளாறு ஏற்பட்டதை அடுத்து, அது 10 நிமிடங்களில் தரையிறங்கும் என மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். விமானத்தின் சக்கரங்கள் உள்ளே செல்லாதது தெரியவந்ததால் விமானத்தை தரையிறக்கும் முயற்சி நடைபெறுகிறது. விமானத்தில் 141 பயணிகள் உள்ள நிலையில், அவர்களுக்கு ஆபத்து ஏற்படாமல் தடுப்பதற்காக பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
திருச்சியில் இருந்து சார்ஜா புறப்பட்ட AIR INDIA விமானத்தின் டயர்கள் உள்ளே செல்லாததால், அதிலிருக்கும் 141 பயணிகளின் நிலைமை என்னவாகும் என்ற கேள்வி எழும்பியுள்ளது. ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால், அதை எதிர்கொள்வதற்காக ஆம்புலன்ஸ்களும், தீயணைப்பு வாகனங்களும் குவிந்துள்ளன. எரிபொருள் அதிகமாக இருப்பது ஆபத்து என்பதால், விமானத்தில் எரிபொருள் குறைந்த பிறகு தரையிறக்க பைலட் முயற்சிக்கிறார்.
திருச்சியில் இருந்து இன்று மாலை 5.40 மணிக்கு சார்ஜாவுக்கு 141 பயணிகளுடன் AI விமானம் புறப்பட்டது. சிறிது நேரத்திலேயே விமானத்தின் சக்கரங்கள் உள்ளே செல்லாததை பைலட் கவனித்துள்ளார். இதையடுத்து, திருச்சியில் தரையிறங்குவதற்காக ஒரு மணிநேரமாக அந்த விமானம் வானில் வட்டமடித்து கொண்டிருக்கிறது. இதையடுத்து, விமான நிலையத்தில் ஏராளமான ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
இணையத்தில் கூகுள் நிறுவனம் ஏகபோக செல்வாக்கை அனுபவிப்பதாக கூறி, கூகுள் மீது ‘anti trust’ வழக்கை தொடுத்துள்ளது அமெரிக்க சட்டத் துறை. குரோம் பிரவுசர், ஆண்ட்ராய்டு ஆகிய தளங்களை பயன்படுத்தி கூகுள் சர்ச் இன்ஜினுக்கு பயனர்களை திருப்பிவிட்டு, அதன்மூலம் அதிக விளம்பர வருவாய் ஈட்டுவதாக குற்றஞ்சாட்டியுள்ள அரசு, பெரிய டெக் கம்பெனிகளின் ஏகபோக ஆதிக்கத்தை தடுக்க வேண்டும் என்கிறது. இதை கூகுள் மறுத்துள்ளது.
Sorry, no posts matched your criteria.