News September 17, 2024

திராவிட பாதையில் விஜய்?

image

ஆரம்பத்தில் இருந்தே விஜய்யின் அரசியல் பேச்சுகள், திராவிட சித்தாந்தத்தையே எதிரொலித்து வந்திருக்கின்றன. ஒன்றிய அரசு, நீட் எதிர்ப்பு என திமுகவின் சொல்லாடல்களே அவரது பேச்சிலும் இருந்தது. தற்போது பெரியார் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்ததோடு, சமூக நீதிப் பாதையில் பயணிப்போம் என விஜய் கூறியுள்ளார். திமுக என்ற இரும்புக் கோட்டையை தகர்க்க, அதன் ஆயுதத்தையே விஜய் கையில் எடுத்துள்ளார் என்றே தோன்றுகிறது.

News September 17, 2024

BREAKING: டெல்லியின் புதிய முதல்வர் அதிஷி

image

டெல்லியின் புதிய முதல்வராக அதிஷி (43) பெயரை அரவிந்த் கெஜ்ரிவால் பரிந்துரைத்தார். இதனையடுத்து, AAP எம்எல்ஏக்கள் கூட்டத்தில், அக்கட்சியின் புதிய சட்டமன்றக்குழு தலைவராகவும் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து, இன்று மாலை 4 மணிக்கு, துணை நிலை ஆளுநரை சந்திக்கும் கெஜ்ரிவால் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, புதிய முதல்வருக்கான எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதத்தையும் வழங்க உள்ளார்.

News September 17, 2024

விசிக மாநாட்டில் பங்கேற்போம்: காங்கிரஸ்

image

விசிக மது ஒழிப்பு மாநாட்டிற்கு அழைப்பு வந்தால் நிச்சயம் கலந்துகொள்வோம் என தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். முன்னதாக, நேற்று CM ஸ்டாலினை சந்தித்த திருமா, மாநாட்டிற்கு அழைப்பு விடுத்தார். முதல்வரும் மூத்த அமைச்சர்களை அனுப்பி வைப்பதாக உறுதி அளித்துள்ளார். இதனிடையே, கம்யூனிஸ்ட், காங்கிரஸ், மதிமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளை அவர் இன்னும் அழைக்கவில்லை என கூறப்படுகிறது.

News September 17, 2024

ஜெர்மனியில் நர்ஸ் வேலை.. ரூ.3 லட்சம் சம்பளம்

image

‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் ஜெர்மனியில் செவிலியர் பணிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் சேருவோருக்கு இலவசமாக ஜெர்மன் மொழி கற்றுத்தரப்படும். மாத சம்பளம் 2,300 முதல் 3,300 யூரோ (ரூ.2 லட்சம் – 3 லட்சம்). வயது வரம்பு: 35 வயதிற்குள். கல்வித் தகுதி: Bsc or GMN. கூடுதல் தகவல்களை நான் முதல்வன் வலைதளத்திலோ, செய்தி மக்கள் தொடர்புத்துறை சமூக ஊடக பக்கங்களிலோ தெரிந்து கொள்ளலாம்.

News September 17, 2024

DMK உருவாக்கிய CM-களின் எண்ணிக்கை தெரியுமா?

image

திமுக தொடங்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், இதுவரை அக்கட்சியை சேர்ந்த 6 பேர் முதல்வர்களாக இருந்துள்ளனர். 1967இல் அண்ணா, 1969 இல் கருணாநிதி (5 முறை), 2021இல் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் முதல்வர் நாற்காலியில் அமர்ந்தனர். அதேபோல புதுச்சேரியில் MHO ஃபரூக் (1967), MDR ராமசந்திரன் (1980, 1990), RV ஜானகி ராமன் (1996) உள்ளிட்டோரும் திமுக சார்பில் முதல்வர்களாக இருந்துள்ளனர்.

News September 17, 2024

முதல்வருடன் இணைந்து திருமா நாடகம்: எல்.முருகன்

image

வெளிநாட்டு பயணம் மூலம் தமிழகத்திற்கு எந்த பலனும் இல்லை என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். அமெரிக்க பயணத்தின் முதலீடு குறித்து சர்ச்சைகள் எழாமல் இருப்பதற்காக திருமாவளவனும், ஸ்டாலினும் இணைந்து அரசியல் நாடகம் நடத்துவதாகவும் விமர்சித்துள்ளார். ஆண்டாண்டு காலமாக மது விற்பனை நடைபெறும் நிலையில், இப்போது ஏன் VCK போராட்டம் நடத்துகிறது என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

News September 17, 2024

மூலிகை: உடலுக்கு ஊட்டம் அளிக்கும் சிற்றாமுட்டி

image

‘அத்திசுரம் முதல் அனந்தசுரம் பித்தமும் போம்’ எனும் குணவாகடப் பாடல் சிற்றாமுட்டியின் ஆற்றலைப் போற்றுகிறது. எஃபிட்ரின், சைட்டோஸ்டீரால் , ஸ்டிக்மாஸ்டீரால், பால்மிடிக் போன்ற வேதிப்பொருட்கள் நிறைந்துள்ள இதன் வேரோடு பனைவெல்லம் சேர்த்துத் தயாரிக்கப்படும் கஷாயத்தை உரிய முறையில் 7 நாட்கள் காலையில் குடித்துவந்தால் சுரம், சோர்வு நீங்குவதோடு உடல் ஊட்டமும் பெறும் என சித்த மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

News September 17, 2024

சமூக நீதி பாதையில் பயணிக்க உறுதியேற்போம்: விஜய்

image

பெரியாரின் 146வது பிறந்தநாளையொட்டி, தவெக தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்தார். சாதி, மத ஆதிக்கம், மூடப்பழக்க வழக்கங்களால் விலங்கிடப்பட்டுக் கிடந்த தமிழக மக்களிடையே விழிப்புணர்வை விதைத்தவர் பெரியார் என்று நினைவுகூர்ந்தார். பகுத்தறிவுப் பகலவன், தென்னகத்தின் சாக்ரட்டீஸ் என்று போற்றப்பட்ட அவரது பிறந்தநாளில், சமத்துவம், சம உரிமை, சமூக நீதிப் பாதையில் பயணிக்க உறுதியேற்போம் என்றும் வலியுறுத்தினார்.

News September 17, 2024

டெல்லியின் புதிய CM யார்? நண்பகல் 12 மணிக்கு அறிவிப்பு

image

டெல்லி புதிய முதலமைச்சர் யார்? என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு நண்பகல் 12 மணிக்கு வெளியாகவுள்ளது. இன்று காலை நடைபெறும் AAP எம்எல்ஏக்கள் கூட்டத்தில், அக்கட்சியின் புதிய சட்டமன்றக்குழு தலைவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார். இன்று மாலை 4 மணிக்கு, துணை நிலை ஆளுநரை சந்திக்கும் முதல்வர் கெஜ்ரிவால் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, புதிய முதல்வருக்கான எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதத்தையும் வழங்குகிறார்.

News September 17, 2024

1949 – 2024: திமுக சாதித்ததும், சறுக்கியதும்

image

1949இல் ஆரம்பிக்கப்பட்ட திமுக இன்று பவள விழாவைக் கொண்டாடுகிறது. சுதந்திரத்துக்கு பிறகு 20 ஆண்டுகள் TN அதிகாரத்தில் இருந்த CONG வீழ்த்தி 1967இல் ஆட்சியை பிடித்தது திமுக. இந்தியாவில் ஒரு மாநிலக் கட்சி முதல் முறையாக ஆட்சியை பிடித்த வரலாற்று சாதனையை படைத்தது. 1971இல் வரலாற்று வெற்றி, 1991இல் படுதோல்வி என அரசியல் ஏற்ற இறங்கங்களை சந்தித்தாலும், மாநிலக் கட்சிகளின் GOAT ஆக தனது பயணத்தை தொடர்கிறது.

error: Content is protected !!