News September 17, 2024

வட்டி விகிதம் எவ்வளவு குறையும்?

image

அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கியின் வட்டி விகித மாற்றம் குறித்த அறிவிப்பை உலகமெங்கும் உள்ள முதலீட்டாளர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். FOMC கூட்டத்திற்குப் பின் ஃபெட் தலைவர் ஜெரோம் பவல் வட்டி விகிதத்தை 50 bps புள்ளியாக குறைக்கலாம் என ராய்ட்டர்ஸ் கணித்துள்ளது. சந்தையின் குறுகிய கால செயல்பாட்டை இதன் மூலம் நிர்ணயிக்க வாய்ப்புள்ளதால், உலக பங்குச் சந்தைகள் விண்ணை முட்டும் என்பது உறுதி.

News September 17, 2024

முழு அரசியல்வாதியாக மாறிய விஜய்..!

image

பெரியார் திடல் சென்று தன்னை ஒரு முழு அரசியல்வாதி என நிரூபித்துள்ளார் விஜய். தமிழ் தேசியத்தை கையில் எடுத்த சீமானும், மைய அரசியல் (Centre Politics) பேசிய கமல்ஹாசனும் ஒரு இடத்திற்கு மேல் நகர முடியாமல் தேங்கியதை பார்த்து, விஜய் பாடம் கற்றுக் கொண்டதாகவே தெரிகிறது. தமிழகத்தில் பெரிய அரசியல் சக்தியாக உருவெடுக்க, திராவிட சித்தாந்தமே சிறந்த வழி என்பதே அவர் கற்றுக்கொண்ட முதல் அரசியல் பாடமாக இருக்குமோ?

News September 17, 2024

‘தூம்-4’ படத்தில் வில்லனாக நடிக்கும் சூர்யா?

image

‘தூம்-4’ திரைப்படத்தில் வில்லனாக நடிக்க நடிகர் சூர்யாவிடம் அப்படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வாய்ப்பை சூர்யா ஒப்புக்கொண்டால், ‘தூம் 4’ அவரது 2ஆவது இந்தி படமாக அமையும். இதற்கு முன்பு அக்சய் குமார் நடிப்பில் வெளிவந்த ‘சர்பிரா’வில் கேமியோ ரோலில் அவர் தோன்றியது குறிப்பிடத்தக்கது.

News September 17, 2024

கருணாநிதி இருந்திருந்தால்.. ராமதாஸ் கணிப்பு

image

கருணாநிதி இருந்திருந்தால் சாதிவாரி கனக்கெடுப்பு நடத்தியிருப்பார் என டாக்டர் ராமதாஸ் தெரிவித்தார். பெரியார் 146வது பிறந்தநாளையொட்டி சிலைக்கு மாலை அணிவித்து அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, சாதிவாரி கணக்கெடுப்புக்காக 43 ஆண்டுகளாக பாமக போராடி வருவதாக கூறினார். கருணாநிதி இருந்திருந்தால் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கி இருப்பார் என்றும் அவர் கூறினார். நீங்க என்ன நினைக்கறீங்க? கமெண்ட்

News September 17, 2024

FLASH: அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் எச்சரிக்கை

image

அரசு விடுமுறை நாளான இன்று தனியார் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. மாணவர்களை சாதாரண உடைகளில் வரவழைத்து சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுவதாகவும், குறிப்பாக 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் இந்த வகுப்புகள் நடப்பதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, சிறப்பு வகுப்புகள் நடத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என தனியார் பள்ளிகள் இயக்குநரகம் எச்சரித்துள்ளது.

News September 17, 2024

டெல்லியின் 3ஆவது பெண் முதல்வராகும் அதிஷி

image

டெல்லியின் மூன்றாவது பெண் முதல்வராக AAP-யின் அதிஷி பதவியேற்க உள்ளார். அம்மாநிலத்தில் இதுவரை 2 பெண்கள் மட்டுமே முதல்வராக இருந்துள்ளனர். கடந்த 1998இல் பாஜகவின் சுஷ்மா ஸ்வராஜ் சில வாரங்கள் முதல்வராக இருந்துள்ளார். அதை தொடர்ந்து காங்கிரஸின் ஷீலா தீட்சித் 1998 முதல் 2013 வரை தொடர்ந்து 3 முறை முதல்வராக இருந்துள்ளார். டெல்லியில் ஆட்சியில் இந்த 3 கட்சிகளுமே பெண்களை முதல்வர் பதவியில் அமர்த்தியுள்ளன.

News September 17, 2024

பொது அறிவு: கேள்விகளுக்கான பதில்கள்

image

இன்று 10 மணிக்கு <<14120186>>GK<<>> வினா – விடை பகுதியில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்கள் இவையே. 1) J.F.எண்டர்ஸ் 2) 3 ஜனவரி 3) Light Emitting Diode 4) சிலோன் கெஜட் 5) சலவைக்கல் 6) கெமர் அரசர் II சூர்யவர்மன் 7) H₂O 8) விரால். இதுபோன்ற அறிவார்ந்த தகவல்களை பெற Way2News-ஐ தொடர்ந்து படியுங்கள். பிறருக்கு பகிருங்கள். இன்றைய கேள்விகளுக்கு நீங்கள் எத்தனை சரியான பதிலளித்தீர்கள் என இங்கே கமெண்ட்டில் சொல்லுங்கள்.

News September 17, 2024

பிறந்தநாள் வாழ்த்துகள் மேஸ்ட்ரோ: ஜெய் ஷா

image

இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் அஸ்வினுக்கு பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது X பக்கத்தில், “இந்தியாவின் ஸ்பின் மேஸ்ட்ரோ அஷ்வினுக்கு வாழ்த்துகள். பந்தைக் கொண்டு நீங்கள் செய்யும் மேஜிக்கைப் பார்ப்பது ஒரு உண்மையான பாக்கியம். நீங்கள் தொடர்ந்து புதிய வரையறைகளை அமைக்க விரும்புகிறேன். இந்த ஆண்டு உங்கள் வாழ்க்கை சிறப்பாக அமைய வாழ்த்துகிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.

News September 17, 2024

இனி ஒரு மின் இணைப்புக்கே 100 யூனிட் இலவசம்?

image

ஒரே உரிமையாளரின் இரு மின் இணைப்புகளை ஒருங்கிணைந்து, ஒரு இணைப்புக்கு மட்டும் 100 யூனிட் இலவச மின்சாரம் கழிக்கப்பட உள்ளது. இந்த புதிய நடைமுறையை அமல்படுத்த, அதுபோன்ற இணைப்பு உள்ள வீடுகள், வர்த்தக நிறுவனங்களை கணக்கெடுக்கும் பணி நடந்து வருவதாகக் கூறப்படுகிறது. இதற்காக மின்வாரியத்தின் சாஃப்ட்வேர்கள் மாற்றி அமைக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

News September 17, 2024

Health Tips: கல்லீரல் பாதிப்பை உணர்த்தும் 9 அறிகுறிகள்

image

உடலில் ஏற்படும் 90% நோய்களுக்கு கல்லீரலில் ஏற்படும் பிரச்சனைகளே காரணமென ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கல்லீரல் பாதிப்பின் 9 அறிகுறிகளைப் பற்றி காண்போம்:- 1) காய்ச்சல் & உடல் சோர்வு 2)குமட்டல் & வாந்தி 3) வயிறு & கால் வீக்கம் 4) தோல் அரிப்பு 5) பசியின்மை 6) தூக்கமின்மை 7) கவனச்சிதறல் 8) வாய் துர்நாற்றம் & நாக்குப் புண் 9) ரத்தப்போக்கு ஆகியவை ஆகும். இந்த அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவரை அணுகுங்கள்!

error: Content is protected !!