India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தொண்டர்கள் என்ற நீங்கள் இல்லாமல் நான் இங்கு இல்லை என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாடும், திமுகவும் என் இரு கண்கள் எனக் கூறிய அவர், தலைவர் – தொண்டன் என்ற உணர்வு இல்லாமல் அண்ணன், தம்பி என்ற உணர்வோடு கட்சி கட்டமைக்கப்பட்டுள்ளது. இதுவரை சந்தித்த தேர்தல்களை போலவே அடுத்தடுத்து வரும் தேர்தல்களிலும் திமுகவே வெற்றி பெற வேண்டும். தேர்தல் வரவுள்ளதால், யாரும் மெத்தனமாக இருந்துவிடக் கூடாது என்றார்.
பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ₹2- ₹4 வரை விரைவில் குறைக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவடைந்து பேரல் 70 டாலருக்கு கீழ் உள்ளது. இதே நிலை இன்னும் சில நாட்கள் நீடித்தால் விலை குறைப்பு அறிவிப்பு வெளியாகலாம் என பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். மகாராஷ்டிரா தேர்தல் அறிவிப்புக்கு முன்னர் இந்த அறிவிப்பு வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறுகின்றனர்.
T20 WC கிரிக்கெட் போட்டிகளில் இனிமேல், ஆண்கள், பெண்கள் அணிக்கு சமமான பரிசுத் தொகை வழங்கப்படும் என ICC அறிவித்துள்ளது. 2024 T20 WCஐ வென்ற இந்திய ஆண்கள் அணிக்கு சுமார் ₹20 கோடி பரிசுத் தொகை வழங்கப்பட்டது. இந்நிலையில், அக்டோபரில் நடைபெறும் மகளிர் T20 WCஐ வெல்லும் அணிக்கும் ₹20 கோடி பரிசு வழங்கப்படும் என ICC கூறியுள்ளது. கடந்த ஆண்டு சாம்பியன் பட்டம் வென்ற AUS மகளிர் அணிக்கு ₹8.3 கோடி அளிக்கப்பட்டது.
கடலூர், நாமக்கல், திருப்பத்தூர், மயிலாடுதுறை மற்றும் நாகை ஆகிய மாவட்டங்களில் இரவு 9 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் இன்று 15 இடங்களுக்கு மேல் வெயில் சதம் அடித்ததால், மக்கள் கடும் வேதனைக்கு உள்ளாகியுள்ளனர். இரவில் மழை பெய்தால், வெப்பம் தணியும் என்பதால், மக்கள் சற்று நிம்மதியடைந்துள்ளனர்.
தமிழக சுகாதாரத்துறை கோமாவில் இருப்பதாக அதிமுக விமர்சனம் செய்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் மூத்த தலைவர் ஜெயக்குமார் பேசியபோது, தமிழகத்தில் வேகமாக பரவும் டெங்குவை கட்டுப்படுத்துவதில் சுகாதாரத்துறை தோல்வி அடைந்து விட்டதாகவும், ஆனால் டெங்கு இல்லை என அமைச்சர் பொய் பேசி வருவதாக சாடினார். தமிழக சுகாதாரத்துறை ICU-வில் இருப்பதாகவும் கிண்டல் அடித்தார். ஜெயக்குமார் சொல்வது பற்றி உங்கள் கருத்து என்ன?
தமிழகத்தில் ஒவ்வொரு மனிதனையும் திமுக அரசு காப்பதாக CM ஸ்டாலின் கூறியுள்ளார். பவள விழாவில் பேசிய அவர், திமுகவின் சேவை இன்னும் 100 ஆண்டுகளுக்கு தேவை எனத் தெரிவித்தார். மேலும், கிரீம் பன்னுக்கு இவ்வளவு வரியா? என கேட்கக்கூட முடியாத சூழல் நாட்டில் நிலவுவதாக அவர் குற்றஞ்சாட்டினார். முன்னதாக UM நிர்மலா சீதாராமனிடம் கிரீம் பன்னுக்கு GST வசூலிப்பதாக அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் கேட்டது பேசுபொருளானது.
பிரதமர் நரேந்திர மோடி செப்டம்பர் 21 – 23 வரை அரசு முறை பயணமாக அமெரிக்கா செல்ல உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. செப்.21 ஆம் தேதி அங்கு நடைபெறும் ‘குவாட்’ உச்சி மாநாட்டில் கலந்துகொண்டு அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஆஸ்திரேலியா, ஜப்பான் பிரதமர்களை சந்தித்து உரையாடுகிறார். அதற்கு மறுநாள் நியூயார்க் நகரில் இந்தியர்களிடையே உரையாற்ற உள்ளார். செப்.23ல் அங்கிருந்து தாயகம் திரும்புவார் என கூறப்படுகிறது.
இந்தியாவிலேயே இன்று அதிகபட்சமாக மதுரையில் வெயில் கொளுத்தியது. 106 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவானதால், மக்கள் மதிய நேரத்தில் வெளியே வரமுடியாமல், கடும் தவிப்புக்கு ஆளாகினர். அதேபோல், சென்னை மீனம்பாக்கத்தில் 103 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் தகித்தது. 22 ஆண்டுகளுக்கு பின் செப்டம்பரில் சென்னையில் பதிவான அதிகபட்ச வெயில் இதுவாகும். மேலும், ஈரோடு, நாகையில் தலா 103 ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது.
அக்டோபர் 3 – 20 வரை நடைபெறவுள்ள மகளிர் T20 உலகக்கோப்பை தொடருக்கான திருத்தப்பட்ட அட்டவணையை ICC வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்திய அணி அக்டோபர் 4, 6, 9, 13ஆம் தேதிகளில் முறையே நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை, ஆஸ்திரேலியா என பலம் வாய்ந்த அணிகளை எதிர்கொள்கிறது. இந்தத் தொடர் முழுவதும் UAEயில் நடைபெறவுள்ளது. ஆண்கள் அணியைப் போல T20 WCஐ இந்திய மகளிர் அணி வெல்லுமா? கமெண்ட்ல சொல்லுங்க.
திமுக முப்பெரும் விழாவில் ‘அண்ணா விருது’ அறந்தாங்கி மிசா ராமநாதனுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். அதேபோல், ‘கலைஞர் விருது’ எம்.பி., ஜெகத்ரட்சகனுக்கும், ‘பாவேந்தர் பாரதிதாசன்’ விருது தமிழ்தாசனுக்கும், ‘பேராசிரியர் விருது’ வி.பி.ராஜனுக்கும், ‘பெரியார் விருது’ பாப்பம்மாள் என்பவருக்கு பதிலாக அவரது பேத்தி ஜெயசுதாவுக்கும் வழங்கினார்.
Sorry, no posts matched your criteria.