News September 18, 2024

தினம் ஒரு திருக்குறள்

image

▶ குறள் பால்: அறத்துப்பால் ▶ அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம் ▶ குறள் எண்: 56 ▶ குறள்: தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற சொற்காத்துச் சோர்விலாள் பெண். ▶ பொருள்: கற்பு நெறியில் தன்னையும், தன் கணவனையும் காத்துக் கொண்டு, தமக்குப் பெருமை சேர்க்கும் புகழையும் காப்பாற்றிக் கொள்வதில் உறுதி குலையாமல் இருப்பவள் பெண்.

News September 18, 2024

ரஷ்ய ஊடகங்களின் வாயை அடைத்த மெட்டா!

image

ரஷ்யாவை சேர்ந்த சில ஊடகங்களுக்கு மெட்டா தடை விதித்துள்ளது. வெளிநாட்டு விவகாரங்களில் தலையிடுவதாக ரஷ்யாவைச் சேர்ந்த ரஷ்யா டுடே, ரோஸியா செகோட்ன்யா உள்ளிட்ட நிறுவனங்கள் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், பேஸ்புக், இன்ஸ்டா உள்ளிட்ட மெட்டா நிறுவனத்தின் சமூக வலைதளங்களில் அந்நிறுவனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ரஷ்யா டுடே பேஸ்புக் பக்கத்தை 72 லட்சம் பேர் பின்தொடர்வது குறிப்பிடத்தக்கது.

News September 18, 2024

கூட்டணியில் குண்டு வீசிய அஜித் பவார்

image

தனக்கும் CM பதவி வேண்டுமென கூறி மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் கூட்டணியில் குண்டு வீசியுள்ளார். பாஜக, சிவசேனா, தேசியவாத காங். கூட்டணி லோக்சபா தேர்தலில் தோல்வியை தழுவிய நிலையில், சட்டப்பேரவைத் தேர்தலுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில், தான் முதல்வராக அதிக ஆர்வத்துடன் இருப்பதாக பொது வெளியில் அஜித் பவார் பேசியிருப்பது அம்மாநில அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

News September 18, 2024

இன்றைய (செப்.18) நல்ல நேரம்

image

▶ செப்.18 (புரட்டாசி 2) ▶ புதன் ▶ நல்ல நேரம்: 9.15 – 10.15AM & 4.45 – 5.45PM ▶ கெளரி நேரம்: 10.45 – 11.45AM & 6.30 – 7.30PM ▶ இராகு காலம்: 12.00 – 1.30PM ▶ எமகண்டம்: 7.30 – 9.00AM ▶ குளிகை: 10.30 – 12.00PM ▶ திதி: பிரதமை ▶ பிறை: தேய்பிறை ▶நட்சத்திரம்: பூரட்டாதி மதியம் 12.56 மணி வரை ▶சுப முகூர்த்தம்: இல்லை ▶ சூலம்: வடக்கு ▶ பரிகாரம்: பால் ▶ யோகம்: அமிர்த/சித்தயோகம் ▶ சந்திராஷ்டமம்: பூசம், ஆயில்யம்

News September 18, 2024

மியான்மருக்கு உதவி கரம் நீட்டிய இந்தியா

image

மியான்மருக்கு 32 டன் நிவாரண பொருட்களை 2ஆவது கட்டமாக இந்தியா அனுப்பி வைத்துள்ளது. பிலிப்பைன்சில் உருவான யாகி புயல் வியட்நாம், தாய்லாந்து, லாவோஸ் ஆகிய நாடுகளை தாக்கியது. யாகி புயலால் மியான்மரில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 226 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், புயலால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளுக்கு ஆபரேஷன் சத்பவ் திட்டம் மூலம் இந்தியா உதவி செய்து வருகிறது.

News September 18, 2024

HAPPY BIRTHDAY❤️: பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (செப். 18) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

இளமைக்கு நாங்க கியாரண்டி!

image

வயசானாலும் அழகும், ஸ்டைலும் இன்னும் உன்ன விட்டு போகல அப்படின்னு எல்லோரும் உங்கள சொல்லனுமா? டிப்ஸ் இதோ..
*காலையில் மிதமான சூட்டில் உள்ள தண்ணீரில், சிறிது தேன், எலுமிச்சை சாறு கலந்து பருகலாம்.
*நாள்தோறும் 2 சப்போட்டா பழம் சாப்பிடலாம்.
*நாள்தோறும் 3 நெல்லிக்காய் உண்ணலாம்.
*தேனில் ஊறிய இஞ்சியை அப்பப்ப சாப்பிடலாம். *வெண்பூசணி, திராட்சை, சுரைக்காய், அன்னாசி சாறில் ஒன்றை தினமும் காலையில் பருகலாம்.

News September 18, 2024

பாஜகவினருக்கு ஒழுக்கத்தை கற்றுத் தாருங்கள்: கார்கே

image

பாஜகவினருக்கு மரியாதை மற்றும் ஒழுக்கத்தை கற்றுத்தர வேண்டும் என PM மோடிக்கு, காங்கிரஸ் தலைவர் கார்கே கடிதம் எழுதியுள்ளார். ராகுலுக்கு எதிரான வெறுப்புப் பேச்சுகளை சுட்டிக்காட்டிய அவர், அவதூறு கருத்துகளை வெளியிட்ட BJP தலைவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினார். முன்னதாக, இந்தியாவைப் பற்றி அமெரிக்காவில் குறை கூறியதாக, ராகுலை NO 1 பயங்கரவாதி போன்ற பல விமர்சனங்களை BJP முன்வைத்தது.

error: Content is protected !!