India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
GOAT படத்தில் de-aging முறையில் விஜய்யை 19 வயது இளைஞனாக மாற்றினர். ஒருவரை உண்மையிலேயே இளமையாக மாற்றமுடியுமா? ‘முடியும்’ என்று கூறி ₹35 கோடி மோசடி செய்துள்ளனர் கான்பூரை சேர்ந்த ராஜீவ்குமார்- ரேஷ்மா தம்பதி. 60 வயது முதியவரை 25வயது இளைஞராக மாற்றும் இயந்திரத்தை இஸ்ரேலில் இருந்து தருவித்ததாக, போலி சிகிச்சை அளித்துள்ளனர். இதற்கு ₹60,000- ₹90,000 கட்டணம். மோசடி அம்பலமாக, தம்பதி வெளிநாட்டுக்கு எஸ்கேப்.
மகளிர் T20 WCல் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது தென்னாப்பிரிக்கா. முதலில் பேட்டிங் செய்த WI 20 ஓவர்கள் முடிவில் 118/6 ரன்கள் மட்டுமே எடுத்தது. பின்னர் களமிறங்கிய SA அணி 17.5 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 119 ரன்கள் எடுத்து அபார வெற்றிபெற்றது. SA அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான லாரா (59*), தஸிம் (57*) இருவருமே அரை சதம் அடித்தனர்.
ஒரு முறை பயன்படுத்தி தூக்கியெறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு TNGovt தடை விதித்துள்ளது. பிளாஸ்டிக் கோப்பைகள், உணவுப் பொருட்களை கட்டப் பயன்படுத்தும் பிளாஸ்டிக் தாள்கள், water பாக்கெட், 100 மைக்ரனுக்கு குறைவான பிளாஸ்டிக் உள்ளிட்டவைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை விற்பனை செய்வதும், பயன்படுத்துவதும் தண்டனைக்குரிய குற்றம். இதுகுறித்த புகார்களை http.tnpcb.gov.in.contact-phpஇல் தெரிவிக்கலாம்.
ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனத்தில் காலியாக உள்ள 81 ஆப்ரேட்டர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை (அக்டோபர் 5) கடைசி நாளாகும். டிப்ளமோ, ஐடிஐ முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். ஆப்ரேட்டர் (லேப்) பணியிடங்களுக்கு B.Sc.(chemistry) பட்டம் பெற்றிருக்க வேண்டும். தேவையான தகுதியுடன் 28 வயதிற்கு உட்பட்டவர்கள் <
மின் கட்டணம் குறித்த சிறு, குறு உற்பத்தியாளர்களின் கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற வேண்டும் என அரசுக்கு கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். சிறு, குறு தொழில்களுக்கு மின் கட்டண விகித உயர்வு தாங்க முடியாத சுமையாக மாறியுள்ளது. எனவே, எவ்வித காலதாமதமின்றி நிலைக் கட்டணத்தை உடனே குறைக்க வேண்டும். உச்சபட்ச பயன்பாட்டு நேரத்திற்கு வசூலிக்கப்படும் கூடுதல் கட்டணத்தை கைவிட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
வங்கதேசத்திற்கு எதிரான T20 தொடருக்கான இந்திய அணியில், ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா இடம்பெற்றுள்ளார். அவரது ஃபார்ம் மீது பவுலிங் கோச் மோர்னே மோர்கல் அதிருப்தி தெரிவித்துள்ளார். குறிப்பாக பயிற்சியின்போது, அவர் வீசிய ஒவ்வொரு பந்திற்கு பிறகு மோர்னே அவரிடம் சென்று ஆலோசனை வழங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. IND-BAN இடையிலான 3 போட்டிகள் கொண்ட T20 தொடர் அக்.6இல் தொடங்குகிறது.
முகத்துக்கு அழகு சேர்க்கும் புருவங்கள் பராமரிப்பு மிக அவசியமானது. மிக மெல்லியதாக உள்ள புருவங்களை அழகாக தெரிய வைக்க பலர் அதன் அடர்த்தியை அதிகரிக்க மெனக்கெடுகின்றனர். எளிய இயற்கை வழி இதோ: உறங்கப்போகும் முன் சுத்தமான பருத்தி துணியைப் பயன்படுத்தி புருவங்களில் சிறிதளவு (லேசாக டபுள் பாயில் செய்து) ஆமணக்கு எண்ணெய் தடவி வந்தால், அதில் உள்ள ரிசினோலிக் அமிலம் புருவத்தை அடர்த்தியாக வளரச் செய்யும்.
இலங்கையின் புதிய அதிபர் அனுர குமார திசநாயக்கேவை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று சந்தித்து பேசினார். அப்போது, இலங்கையின் பொருளாதார சீரமைப்புக்கு இந்தியா தொடர்ந்து உதவி செய்யும் என அவர் உறுதியளித்தார். பின்னர், இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சருடனும் ஜெய்சங்கர் ஆலோசனை நடத்தினார். அதிபர் அனுர குமார திசநாயக்கே, சீன ஆதரவு நிலைப்பாடு கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
திருப்பதி லட்டு பிரசாதத்தில் மாட்டுக் கொழுப்பு கலக்கப்பட்ட விவகாரம் பக்தர்களை மிகுந்த மன வேதனையில் ஆழ்த்தியது. இதிலிருந்து மீள்வதற்குள்ளாக, திருப்பதி கோயிலில் உள்ள தங்கக் கொடி மரத்தின் வளையம் இன்று திடீரென உடைந்தது. பிரம்மோற்சவத்திற்கு கயிறு கட்டும் பணியின் போது இந்த சம்பவம் நிகழ்ந்தது. திருப்பதியில் இப்படி அடுத்தடுத்து நிகழும் சம்பவங்கள் பக்தர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
ரயில் பயணம் அனைவருக்குமே பிடித்தமானது தான். ஆனால், எவ்வளவு பணம் கொடுத்தாலும் சுவையான, தரமான உணவுகள் ரயில்களில் ‘மிஸ்’ஸாகவே செய்கின்றன. ஆனால், அமிர்தசரஸ் முதல் நான்டெட் வரை 2000 கி.மீ. செல்லும் Sachkhand Express ரயிலில் பயணிகள் அனைவருக்கும் 3 வேளையும் இலவசமாக சுடச்சுட உணவு வழங்கப்படுகிறது. ஃப்ரீ என்பதால் ஏனோதானோ என்றில்லாமல் நட்சத்திர ஓட்டல் தரத்தில் சுவையும், தரமும் இருப்பதுதான் இதில் ஹைலைட்.
Sorry, no posts matched your criteria.