News October 4, 2024

ஜீவாவின் ‘பிளாக்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு

image

பாலசுப்ரமணி இயக்கத்தில் ஜீவா, பிரியா பவானி சங்கர் நடித்துள்ள புதிய படம் ‘பிளாக்’. SR பிரபு தயாரித்துள்ள இப்படத்திற்கு சாம் CS இசையமைத்துள்ளார். இப்படம் வரும் 11 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஓராண்டு இடைவெளிக்குப் பின் ஜீவாவின் படம் வெளியாக உள்ளதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

News October 4, 2024

ஆட்சிக்கு வந்த 300 நாட்களில் ₹72,500 கோடி கடன்

image

தெலங்கானாவில் ரேவந்த் ரெட்டி தலைமையிலான காங்., அரசு, ஆட்சிக்கு வந்த 300 நாட்களில் ₹72,500 கோடியை கடனாக வாங்கியுள்ளது. அதாவது, சராசரியாக நாள் ஒன்றுக்கு ₹241 கோடி. செப்டம்பரில் மட்டும் ₹5,500 கோடி கடனாக பெறப்பட்டுள்ளது. அடுத்த 3 மாதத்தில் ₹7,400 கோடியை கடனாக திரட்டவும் திட்டமிடப்பட்டுள்ளது. தேர்தல் நேரத்தில் கொடுத்த இலவச வாக்குறுதிகளை நிறைவேற்ற கடன் மேல் கடன் வாங்கப்படுவதாக கூறப்படுகிறது.

News October 4, 2024

குழந்தைகளுக்கான தடுப்பூசி தட்டுப்பாடு?

image

குழந்தைகளுக்கு போடப்படும் DPT Diphtheria-pertussis-tetanus எனும் தடுப்பூசி கடந்த இரண்டு மாதங்களாக தட்டுப்பாட்டில் உள்ளதாக புகார்கள் எழுந்துள்ளது. இதுகுறித்து இபிஎஸ், அரசு மருத்துவமனைகளை நம்பியுள்ள ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களின் உயிரோடு விளையாடுவதை திமுக அரசு நிறுத்த வேண்டும். உடனடியாக இத்தடுப்பூசி தட்டுப்பாடின்றி கிடைக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

News October 4, 2024

நாட்டை காக்கும் காவலர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

image

NIA உள்ளிட்ட அமைப்புகளில் காலியாக உள்ள காவலர் பணிகளுக்கு விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள். பணியாளர் தேர்வு ஆணையம் (SSC) நடத்தும் இந்த போட்டித் தேர்வுக்கு ssc.gov.in. என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். NIA, CAPFs, SSF மற்றும் அசாம் ரைபிள்ஸ் படையில் காலியாக உள்ள காவலர் பணியில் பணிபுரியலாம். மேலும் விவரங்களுக்கு நாளைக்குள் ssc.gov.in. என்ற இணைய முகவரியில் அணுகலாம். SHARE IT

News October 4, 2024

மதுரைக்கு வந்த உதயநிதி: பிடிஆரை கவனிச்சீங்களா..

image

துணை முதல்வராக பதவியேற்ற உதயநிதி ஸ்டாலின் முதன்முறையாக மதுரைக்கு வந்துள்ளார். ஆனால், அமைச்சர் பிடிஆர் அவரை விமான நிலையத்தில் வரவேற்றதோடு சரி, அதன் பிறகு உதயநிதியுடன் அவரை பார்க்க முடியவில்லை. மதுரையின் மற்றொரு அமைச்சரான மூர்த்தி தான், உதயநிதியின் வரவேற்பு, நிகழ்ச்சி ஏற்பாடுகளை தடபுடலாக செய்துள்ளார். முன்னதாக, உதயநிதியின் பதவியேற்பு நிகழ்ச்சியிலும் பிடிஆர் மிஸ் ஆனது குறிப்பிடத்தக்கது.

News October 4, 2024

WT20 WC: இந்திய அணி பவுலிங்

image

மகளிர் T20 உலகக் கோப்பை லீக் போட்டியில் இன்று நடைபெறும் தனது முதல் போட்டியில் இந்திய அணி நியூசிலாந்தை எதிர்கொள்கிறது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. இதையடுத்து இந்திய அணி தற்போது பவுலிங் செய்து வருகிறது. INDIA Team: ஷஃபாலி, ஸ்மிருதி மந்தனா, ஹர்மன் ப்ரீத், ரோட்ரிக்ஸ், ரிச்சா, தீப்தி, வஸ்த்ரகர், ஸ்ரேயங்கா பாட்டீல், அருந்ததி, ரேணுகா சிங், ஆஷா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

News October 4, 2024

இந்த கேக்குகளை சாப்பிட்டால் கேன்சர் வரும்?

image

மக்கள் விரும்பி சாப்பிடும் கேக்குகளில் புற்றுநோயை உண்டாக்கும் ரசாயனங்கள் அதிக அளவில் இருப்பது தெரியவந்துள்ளது. கர்நாடகா முழுவதும் food safety துறையினர் நடத்திய ஆய்வில், ரெட் வெல்வெட், பைன் ஆப்பிள், பிளாக் ஃபாரஸ்ட் கேக்குகளில் சேர்க்கப்படும் செயற்கை வண்ணங்களில் புற்றுநோய் ஏற்படுத்தக்கூடிய ரசாயனங்கள் இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து, அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். SHARE IT

News October 4, 2024

‘இட்லி ‘கடை முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு

image

தனுஷ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘இட்லி கடை’ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். கடந்த சில நாள்களுக்கு முன்பு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. அருண் விஜய், ராஜ்கிரண் உள்ளிட்டோர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

News October 4, 2024

தீர்ப்பை உறுதி செய்த உச்சநீதிமன்றம்

image

பட்டியல் சாதியினருக்குள் பின் தங்கியுள்ளோருக்கு மாநில அரசு உள் ஒதுக்கீடு அளிப்பதில் தவறு இல்லை என SC மீண்டும் உறுதி செய்துள்ளது. அருந்ததியர் உள் ஒதுக்கீடு வழங்கலாம் என்ற தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி விசிக உள்ளிட்ட கட்சிகள் மனுத் தாக்கல் செய்தன. இதை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம், தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு அளித்த தீர்ப்பில் எந்த தவறும் இல்லை என தெளிவுப்படுத்தியுள்ளது.

News October 4, 2024

30 மாவோயிஸ்ட் சுட்டுக்கொலை

image

சத்தீஸ்கர் மாநிலத்தில் போலீசார் அதிரடியாக நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 30 மாவோயிஸ்ட் கொல்லப்பட்டுள்ளனர். நாராயண்பூர்-தந்தேவாடா மாவட்டங்களுக்கு இடையேயான எல்லையில் தொடர்ந்து துப்பாக்கிச் சண்டை நடந்து வருவதால், பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்த ஆண்டு இதுவரை, பஸ்தார் பகுதியில் நடந்த தனித்தனி மோதலில் 171 மாவோயிஸ்டுகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

error: Content is protected !!