India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி 11,72,240 ரயில்வே பணியாளர்களுக்கு 78 நாள்களுக்கான ஊதியம் தீபாவளி போனஸாக வழங்கப்பட உள்ளது. இதற்காக 2,029 கோடி ரூபாயை ஒதுக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன்மூலம் ரயில்வேயில் பணியாற்றும் ரயில்வே டிராக் பராமரிப்பாளர்கள், லோகோ பைலட்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பு ஊழியர்களும் பயன்பெறுவர்.
BIG BOSS 8ஆவது சீசனை தொகுத்து வழங்க இருக்கும் நடிகர் விஜய்சேதுபதிக்கு ₹15 கோடி முதல் ₹18 கோடி வரை சம்பளம் வழங்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. ஒவ்வொரு வார இறுதியிலும் அவர் பிக்பாஸ் வீட்டில் நடக்கும் ஷூட்டிங்கில் கலந்து கொள்ள வேண்டும். அதன்படி, 15 வாரங்கள் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிக்கு, அவர் 15 நாள்கள் ஷூட்டிங் வரவேண்டும். அந்த 15 நாள்களுக்கான சம்பளம் தான் மேலே கூறியது.
ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய 4 முக்கிய முன்விரோதங்களே காரணம் என குற்றப்பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 6 மாதங்கள் திட்டமிட்டு “ரெக்கி ஆப்ரேஷன்” என்ற பெயரில் இந்த கொலை திட்டத்தை அரங்கேற்றியுள்ளனர். ஆற்காடு சுரேஷின் மனைவியின் சபதத்தால் ஓராண்டுக்குள் கொலை செய்ய குற்றவாளிகள் வேகம் காட்டியதாகவும், கொலைக்கு மொத்தமாக ₹10 லட்சம் செலவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக 4,982 பக்க குற்றப்பத்திரிக்கையை நீதிமன்றத்தில் போலீசார் தாக்கல் செய்தனர். அதில், அரசியல், சமூக ரீதியாக ஆள் பலத்தோடு வளர்ந்து வந்ததால், ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்தது அம்பலமாகியுள்ளது. முதல் குற்றவாளியான நாகேந்திரன், அனைவரையும் கொலை சதி திட்டத்திற்கு ஒருங்கிணைத்துள்ளார். ஆருத்ரா கோல்டு மோசடி விவகாரத்தில் ஆம்ஸ்ட்ராங்கிற்கு தொடர்பு இருப்பதாக தெரியவில்லை என கூறப்பட்டுள்ளது.
புதிதாக 5 மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மராத்தி, பெங்காலி, பாலி, பிராகிருதம், அசாமி மொழிகளுக்கும் செம்மொழி அந்தஸ்து வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் விரைவில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், மராத்திக்கு செம்மொழி அந்தஸ்து அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதம், கன்னடம், மலையாளம், ஒடியா செம்மொழியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
மகளிர் T20 உலகக் கோப்பையில் இந்திய அணி நாளை தனது முதலாவது ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது. இந்திய நேரப்படி இப்போட்டி இரவு 7:30 மணிக்கு தொடங்குகிறது. இதுவரை T20 உலகக் கோப்பையை இந்திய மகளிர் அணி ஒருமுறை கூட வெல்லாத நிலையில், இந்த முறை கோப்பையை வெல்லும் முனைப்பில் இந்திய வீராங்கனைகள் உள்ளனர். நாளை எந்த அணி வெற்றிபெறும் என நினைக்கிறீர்கள்?
சென்னை மெட்ரோ ரயில் 2ஆம் கட்ட திட்ட பணிகளுக்கு ₹63,246 கோடி நிதியை ஒதுக்க, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அண்மையில், டெல்லியில் பிரதமர் மோடியை முதல்வர் ஸ்டாலின் சந்தித்து, மெட்ரோ திட்டத்திற்கான நிதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுடன் மனு அளித்திருந்தார். அவரின் கோரிக்கையை ஏற்று இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
பெண் குழந்தைகளின் எதிர்கால பாதுகாப்புக்காக போஸ்ட் ஆபிஸ் மூலமாக செயல்படுத்தப்படும் ‘செல்வ மகள்’ திட்டத்தில் அக்.1 முதல் முக்கிய மாற்றம் வந்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் தங்கள் பேத்திகளுக்காக தாத்தா, பாட்டிகள் கணக்கு தொடங்கி இருந்தால், அது விரைவில் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அவற்றை அந்தந்த குழந்தைகளின் அதிகாரப்பூர்வ பெற்றோர் அல்லது கார்டியன்களின் பெயரில் மாற்ற வேண்டியது கட்டாயம்.
ரஜினி-ஞானவேல் கூட்டணியில் உருவாகி இருக்கும் ‘வேட்டையன்’ திரைப்படம் வரும் 10ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் வேட்டையன் திரைப்படம் வெளியாகும் அதே நாளில் லைகா நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் அஜித்தின் “விடாமுயற்சி” படத்தின் டீசரை, இடைவேளையின்போது திரையிட பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இதுவரை எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை.
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தமிழக அரசு தயாராக இருப்பதாக அமைச்சர் KKSSR தெரிவித்துள்ளார். அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும், மழைநீர் தேங்கும் பகுதிகள் கணக்கெடுக்கப்பட்டு மீட்புப்பணிக்கு படகுகள் அனுப்பப்பட்டு தயார்நிலையில் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இயல்பை விட 112% அதிக மழைப்பொழிவு இருக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.