News October 5, 2024

சத்தீஸ்கர் துப்பாக்கிச்சூடு: உயிரிழப்பு மேலும் அதிகரிப்பு

image

சத்தீஸ்கரில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த மாவோயிஸ்ட்டுகளின் எண்ணிக்கை 36 ஆக அதிகரித்துள்ளது. நெந்தூர் – துள்துளி அருகே உள்ள காடுகளில் என்கவுன்டர் நடந்ததாகவும், காடுகளுக்குள் பின்வாங்கிய சில மாவோயிஸ்டுகளை பாதுகாப்புப் படையினர் பின்தொடர்வதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சமீபத்தில் மாவோயிஸ்ட்டுகள் மீது நடைபெற்ற மிகப்பெரிய தாக்குதல் இது என்றும் போலீசார் கூறியுள்ளனர்.

News October 5, 2024

புதிய சாதனை படைப்பாரா பாண்ட்யா?

image

BAN எதிரான டி20 தொடரில் ஹர்திக் பாண்டியா 11 விக்கெட் எடுத்தால், டி20 கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அதிக விக்கெட் கைப்பற்றிய வீரர் என்ற சாதனையை படைப்பார். இந்திய அணிக்காக அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் சாஹல் (96 விக்கெட்) முதலிடத்திலும், புவனேஷ்வர் குமார் (90 விக்கெட்) 2ஆம் இடத்திலும், ஜஸ்ப்ரீத் பும்ரா (89 விக்கெட்) 3ஆவது இடத்திலும், பாண்டியா (86 விக்கெட்) 4ஆவது இடத்திலும் உள்ளனர்.

News October 5, 2024

அக்டோபர் 5: வரலாற்றில் இன்று

image

▶1864 – கொல்கத்தாவை தாக்கிய சூறாவளியில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர்.
▶1905 – ரைட் சகோதரர்கள் 24 மைல்களை 39 நிமிடங்களில் விமானத்தில் பறந்து சாதனை படைத்தனர்.
▶1823 – ராமலிங்க அடிகளார் பிறந்த தினம்
▶1934 – பத்திரிகையாளர் மற்றும் நடிகர் சோ பிறந்த தினம்
▶1952 – பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இம்ரான் கான் பிறந்த தினம்

News October 5, 2024

விமான சாகச நிகழ்ச்சியை காண கூடுதல் பேருந்து வசதி

image

மெரினாவில் நடைபெற உள்ள விமான சாகச நிகழ்ச்சியை காண கூடுதல் பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது. நாளை நடைபெறும் இந்த நிகழ்ச்சியை காண 15 லட்சம் பேர் வர வாய்ப்புள்ளதாக கருதப்படுவதால், இதற்கான சிறப்பு ஏற்பாடுகளை அதிகாரிகள் தீவிரப்படுத்தியுள்ளனர். அந்த வகையில், சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து மெரினாவுக்கு இயக்கப்படும் 120 பேருந்துகளுடன் கூடுதலாக 75 பேருந்துகள் இயக்கப்படவுள்ளது.

News October 5, 2024

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: அறத்துப்பால்
▶அதிகாரம்: அன்புடைமை.
▶குறள் எண்: 73
▶குறள்:
அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு
என்போடு இயைந்த தொடர்பு.
▶பொருள்: அருமையான உயிர்க்கு உடம்போடு பொருந்தி இருக்கின்ற உறவு, அன்போடு பொருந்தி வாழும் வாழ்க்கையின் பயன் என்று கூறுவர்.

News October 5, 2024

ஹரியானாவில் இன்று வாக்குப்பதிவு

image

ஹரியானாவில் சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெற உள்ளது. 90 தொகுதிகளை கொண்ட அந்த மாநிலத்தில் ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக கடந்த 1 மாதத்திற்கு மேலாக அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தனர். காங்கிரஸ், பாஜக இடையே பலத்த போட்டி நிலவும், இம்மாநிலத்தில் யார் ஆட்சியை பிடிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அக்.8இல் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.

News October 5, 2024

இன்றைய நல்ல நேரம்

image

▶அக்டோபர் – 05 ▶புரட்டாசி – 19 ▶கிழமை: சனி
▶நல்ல நேரம்: 07:45 AM – 08:45 AM & 04:45 PM – 05:45 PM
▶கெளரி நேரம்: 10:45 AM – 11:45 AM & 09:30 PM – 10:30 PM
▶ராகு காலம்: 09:00 AM – 10:30 AM
▶எமகண்டம்: 01:30 PM – 03:00 PM
▶குளிகை: 06:00 AM – 07:30 AM
▶திதி: திரிதியை ▶சூலம்: கிழக்கு
▶பரிகாரம்: தயிர்
▶ சந்திராஷ்டமம்: உத்திரட்டாதி, பூரட்டாதி

News October 5, 2024

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (அக். 05) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

error: Content is protected !!