India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழ்நாடு & புதுச்சேரி வருமான வரித் துறையில் நிரப்பப்படவுள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு இன்றுயுடன் நிறைவடைகிறது. IT Inspector, Assistants, Multi-Tasking Staff பணிகளில் சேர ஆர்வம் உள்ளவர்கள் இன்றே ஆன்லைன் மூலம் விண்ணப்பியுங்கள். கல்வித் தகுதி: 10ஆம் வகுப்பு, Any UG Degree. வயது வரம்பு: 18-30. சம்பளம்: ₹5,200-₹34,800. கூடுதல் விவரங்களுக்கு <
➤China Open Tennis: பெலாரஸின் சபலென்காவை வீழ்த்தி செக்குடியரசின் முச்சோவா அரையிறுதிக்கு முன்னேறினார். ➤மகளிர் T20 உலகக் கோப்பை: IND அணியை 58 ரன் வித்தியாசத்தில் NZ அணி வென்றது. ➤U21 உலக துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப்பில் 25 மீ. ரேபிட் பயர் பிஸ்டல் பிரிவில் இந்திய ஆடவர் அணி தங்கப் பதக்கத்தை கைப்பற்றியது. ➤காமன்வெல்த் வலு தூக்கும் போட்டியில் புதுச்சேரி காவலர் அனிதா ராய் தங்கப் பதக்கம் வென்றார்.
ஹரியானாவில் சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது. 90 தொகுதிகளை கொண்ட அம்மாநிலத்தில் ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடைபெறுகிறது. சுமார் 2 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க மாநிலம் முழுவதும் 20,629 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. முதல்வர் நயாப் சிங் சைனி, துஷ்யந்த் சவுதாலா, மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் உள்ளிட்டோர் களத்தில் உள்ளனர். இதில், காங்கிரஸ், பாஜக இடையே பலத்த போட்டி நிலவுகிறது.
தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் இன்று (சனிக்கிழமை) பல இடங்களில் கனமழை வெளுத்து வாங்கும் என வானிலை மையம் கணித்துள்ளது. அதன்படி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, நீலகிரி, ஈரோடு, சேலம், கடலூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் எனக் கூறியுள்ளது.
விஷ்ணுவின் விஸ்வரூபம் போல ஹயக்ரீவர், நரசிம்மம், கருடன், வானரம், வராகம் ஆகிய 5 திருமுகங்களுடன் காட்சித்தரும் திருத்தலம் புதுச்சேரி பஞ்சவடி பஞ்சமுக ஆஞ்சநேயர் கோயிலாகும். சனியின் வக்கிர பார்வையை வலுவிழக்கச் செய்து, பக்தரை காக்கும் 5 தெய்வங்களும் ஒன்றாக அருளும் இக்கோயிலுக்கு விரதமிருந்துச் சென்று, வெண்ணை காப்பு & வெற்றிலை மாலை சாற்றி, மிளகு வடை படைத்து வழிபட்டால் துஷ்ட சக்திகள் விலகும் என்பது ஐதீகம்.
PM கிசான் திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் தகுதியான விவசாயிகளுக்கு மூன்று தவணையாக ₹2,000 வீதம் ஆண்டுக்கு ₹6,000 மத்திய அரசு வழங்கி வருகிறது. இதுவரை 17 தவணைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், 18வது தவணை இன்று (அக்.5) வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட உள்ளது. eKYC நிறைவு செய்யாதவர்களுக்கு பணம் வழங்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. eKYCயை pmkisan.gov.in இணையதளத்தில் பதிவு செய்யலாம்.
மெட்ரோ 2ஆம் கட்ட பணிக்கு காலம் கடந்து நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை விமர்சித்துள்ளார். மெட்ரோ ரயில் திட்ட மொத்த மதிப்பீட்டில் 12% மட்டுமே மத்திய அரசு ஒதுக்கியுள்ளதாக குறிப்பிட்ட அவர், மோடி அரசின் மாநில விரோத போக்கை இது அப்பட்டமாக வெளிகாட்டுவதாகவும் விமர்சித்துள்ளார். 2 கட்ட மெட்ரோ திட்டத்துக்கு மத்திய அரசு ரூ.7425 கோடி ஒதுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 2,000க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக லெபனானின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஹிஸ்புல்லா அமைப்பினருக்கு எதிராக இஸ்ரேல் கடந்த மாதம் 23ஆம் தேதி லெபனான் மீது மிகப்பெரிய அளவிலான வான்வழி தாக்குதலை தொடங்கியது. இந்த தாக்குதலில் 127 குழந்தைகள் மற்றும் 261 பெண்கள் பலியாகியுள்ளனர். இஸ்ரேலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்றும் அந்நாடு எச்சரித்துள்ளது.
உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் மெட்டா நிறுவன தலைவர் மார்க் ஜுக்கர்பெர்க் 2ஆம் இடத்தில் உள்ளார். உலக கோடீஸ்வரர்கள் பட்டியலை புளூம்பெர்க் நிறுவனம் ஒவ்வொரு வாரமும் வெளியிடுகிறது. கடந்த வாரம் டெஸ்லா CEO எலான் மஸ்க் முதலிடத்தில் இருந்தார். இந்நிலையில், இந்த வாரம் வெளியான பட்டியலிலும் அவர் 256 பில்லியன் டாலருடன் முதலிடத்தில் உள்ளார். ஜுக்கர்பெர்க் 206 பில்லியன் டாலர்களுடன் 2ஆம் இடத்தில் உள்ளார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் கோவிந்தா வீடு திரும்பினார். மும்பையில் உள்ள வீட்டில் துப்பாக்கியை சுத்தம் செய்த போது எதிர்பாராமல் வெடித்ததில், அவரின் காலில் குண்டு பாய்ந்தது. இதனால் கடந்த 3 நாள்களாக சிகிச்சை பெற்றுவந்த அவர், உடல் நிலை தேறியதையடுத்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். அடுத்த சில நாள்கள் கோவிந்தா ஓய்வில் இருக்க வேண்டும் எனவும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
Sorry, no posts matched your criteria.