India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பருவமழையை எதிர்கொண்டு மக்களுக்கு உதவிட திமுகவினர் தயாராக இருக்க வேண்டுமென்று அக்கட்சித் தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். மழைக்காலத்தில் திமுகவினர், அரசு, பொதுமக்களுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்றும், பொதுமக்கள் முன்வைக்கின்ற கோரிக்கைகள், தகவல்களுக்கு முக்கியத்துவம் அளித்து மேல் நடவடிக்கைக்கு வழிவகை செய்ய வேண்டுமென்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
1956: சட்டமேதை டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் புத்த மதத்திற்கு மாறினார்.
1981: இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் பிறந்தார்.
1998: அமர்த்தியா சென் நோபல் விருதை பெற்றார்.
1943: பிலிப்பைன்ஸ் சுதந்திரம் பெற்றது.
1957: நடிகர் பார்த்திபன் பிறந்தார்.
1985: நடிகை நவ்யா நாயர் பிறந்தார்.
2025 IPL வீரர்கள் ஏலத்தை சிங்கப்பூரில் அடுத்த மாதம் நடத்துவது குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதேபோல், சவூதி அரேபியாவின் ரியாத், ஜெட்டாவில் நடத்துவது குறித்தும் பரிசீலித்து வருவதாக அத்தகவல் கூறுகிறது. முன்னதாக, 2024ம் ஆண்டு IPL வீரர்கள் ஏலத்தை துபாயில் பிசிசிஐ நடத்தியது குறிப்பிடத்தக்கது.
பாக்கெட் லைட்டர் பாகங்களை இறக்குமதி செய்ய மத்திய அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது. வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பாக்கெட் லைட்டர், கியாஸ் லைட்டர் பாகங்கள் இறக்குமதிக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது. உள்நாட்டு உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கவும், சீனாவைச் சார்ந்திருப்பதை குறைக்கும் வகையிலும் இந்த முடிவை மத்திய அரசு எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.
MI பயிற்சியாளராக ஜெயவர்த்தனே மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். 2017-22 வரை ஏற்கெனவே பயிற்சியாளராக அவர் இருந்துள்ளார். அவரது காலத்தில் 5 முறை MI கோப்பையை வென்றது. இதையடுத்து, அதன் சர்வதேச தலைவராக 2 ஆண்டுகளுக்கு முன்பு நியமிக்கப்பட்டார். எனவே, தெ.ஆப்பிரிக்காவின் மார்க் பவுச்சர் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டிருந்தார். ஆனால் அவர் காலத்தில் 2023, 24 ஐபிஎல்லில் அந்த அணி சரியாக விளையாடவில்லை.
*நாத்திகம், பொதுவுடைமையின் பிரிக்க முடியாத பகுதி. *உங்கள் இதயம் நெருப்பிலும், மூளை பனியிலும் இருக்க வேண்டும். *கற்றலானது பிழைகள், தோல்வி இல்லாமல் செய்யப்படுவதில்லை. *அரசியலில் தலையிடவில்லை என்றால், அது உங்கள் வாழ்க்கையில் தலையிடும். *தவறான சொல்லாடல், பெருமிதம் தார்மீக அழிவை உச்சரிக்கிறது. *புரட்சிகர கோட்பாடு இல்லாமல் ஒருபோதும் புரட்சிகர இயக்கம் இருக்காது.
இன்று காலை 4 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள் பட்டியலை RMC வெளியிட்டுள்ளது. அதன்படி, திருவள்ளூரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் மழை பெய்யக்கூடும் எனக் கூறியுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி, ராணிப்பேட்டை, தி.மலை, கடலூர், திண்டுக்கல், கோவை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, விருதுநகர், தேனி, மயிலாடுதுறை, கிருஷ்ணகிரியில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக குறிப்பிட்டுள்ளது.
BSF, CISF, CRPF உள்ளிட்ட மத்திய பாதுகாப்பு படைகளில் காலியாக உள்ள 39,481 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே (அக்.14) கடைசி நாளாகும். SCC மூலம் 2025 ஜனவரி- பிப்ரவரியில் இந்த வேலைகளுக்கு தேர்வு நடத்தப்பட இருக்கிறது. இந்த வேலைகளுக்கு விண்ணப்பிக்கும் பணி கடந்த மாதம் 5ஆம் தேதி தொடங்கியது. இன்று இரவு 11 மணியுடன் இந்த அவகாசம் முடிகிறது. இந்தத் தகவலை வேலை தேடும் உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
பாஜக ஒரு தீவிரவாத கட்சி என காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே குற்றம்சாட்டியிருந்தார். இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்த ஜெ.பி. நட்டா, தொடர் தேர்தல் தோல்விகளால் கார்கேயின் சித்தாந்தம் திவாலாகி விட்டதாக சாடினார். சமூக பணிகள், காெள்கை வகுத்தலில் மோடியின் தரத்திற்கு ஈடுகொடுக்க முடியாததால், நாட்டையும், மோடியையும் அவமதிக்க காங்கிரசார் முயற்சிக்கிறார்கள் என்று அவர் கூறினார்.
▶அக். 14 (புரட்டாசி 28) ▶திங்கள் ▶நல்ல நேரம்: 9:15 AM – 10:15 AM &4:45 PM – 5:45 PM ▶கெளரி நேரம்: 1:45 AM – 2:45 AM & 7:30 PM – 8:30 PM ▶ராகு காலம்: 7:30 AM – 9:00 AM ▶எமகண்டம்: 10:30 AM – 12:00 PM ▶குளிகை: 1:30 PM – 3:00 PM ▶ திதி: துவாதசி ▶ பிறை: வளர்பிறை ▶சுப முகூர்த்தம்: இல்லை ▶ சூலம்: கிழக்கு ▶ பரிகாரம்: தயிர் ▶ நட்சத்திரம்: சதயம்▶சந்திராஷ்டமம்: புனர்பூசம், பூசம். இந்தத் தகவலை பகிருங்கள்.
Sorry, no posts matched your criteria.