India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த முதல் 5 அணிகள் எவை எவை என்பது குறித்து இங்கு நாம் தெரிந்து கொள்ளலாம்.
1) நேபாள அணி: 314 ரன்கள்
2) இந்திய அணி: 297 ரன்கள்
3) ஆப்கானிஸ்தான் அணி: 278 ரன்கள்
4) செக் குடியரசு அணி: 278 ரன்கள்
5) மலேசிய அணி: 268 ரன்கள்
ரஜினிகாந்த் குறித்து நடிகை ரித்திகா சிங் நெகிழ்ச்சியுடன் பதிவு வெளியிட்டுள்ளார். வேட்டையன் படத்தில் ரஜினியுடன் இணைந்து நடித்தது குறித்து அவர் பதிவிட்டுள்ளார். அதில் அவர், ரஜினியின் கண்கள் காயத்தை குணப்படுத்தும் சக்தி காெண்டவை என்றும், அவரை போன்று இன்னொருவர் வரப் போவதில்லை, பிறக்கப் போவதுமில்லை என்றும் கூறியுள்ளார். நீங்கள் என்ன நினைக்கிறீங்க. கீழே பதிவிடுங்கள்.
தமிழகத்தில் திமுக அரசை அகற்ற நேரம் வந்து விட்டதாக டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். ஆட்சிக்கு வந்தால் தேனாறும், பாலாறும் ஓடும் என்று கூறி, மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்த திமுக, வாக்குறுதிகளில் 450-க்கும் மேலானதை நிறைவேற்றவில்லை என அவர் சாடியுள்ளார். திமுக அரசுக்கு எதிராக பாமக சார்பில் சிதம்பரம் (17ம் தேதி), திண்டிவனம் (20), சேலத்தில் (26) கூட்டம் நடத்த இருப்பதாகவும் அறிவித்துள்ளார்.
நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களிலும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் 2023இல் பெய்த கனமழையால் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இயல்பு நிலை திரும்ப சுமார் 10 நாள்களுக்கும் மேல் பிடித்தது. இந்நிலையில் இன்று முதல் 4 நாள்களுக்கு வானிலை மையம் மிக கனமழை, அதி கனமழை எச்சரிக்கை விடுத்திருப்பதால், 2023 போன்ற பாதிப்பு ஏற்படுமோ என்ற அச்சத்தில் மக்கள் உள்ளனர்.
ஆதாரில் உள்ள மொபைல் எண்ணை சிலர் தொலைத்திருப்பர் அல்லது பயன்படுத்தாமல் இருப்பர். அவர்கள் புதிய எண்ணை ஆதாரில் எளிதில் இணைக்க முடியும். இதை ஆன்லைனில் நாம் சொந்தமாக செய்ய முடியாது. அருகிலுள்ள ஆதார் மையத்துக்கு சென்று பயோமெட்ரிக் பதிவிட்டு, விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அளிக்க வேண்டும். அப்படி செய்தால் 1 வாரம் முதல் 10 நாள்களுக்குள் அந்த எண் இணைந்துவிடும். SHARE IT
அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்பை கொலை செய்யும் திட்டத்துடன் துப்பாக்கிகளுடன் வந்த நபரை போலீசார் கைது செய்தனர். துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு பிறகு டிரம்புக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கோசெல்லாவில் நடந்த கூட்டத்தில் டிரம்ப் பங்கேற்ற நிலையில், அங்கு போலி பாஸுடன் வந்த நபரை பிடித்து போலீசார் விசாரித்தனர். இதில், துப்பாக்கிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதால் கைது செய்தனர்.
தமிழகத்தின் பல மாவட்டங்களுக்கு 4 நாள்களுக்கு மிக கனமழை (ஆரஞ்ச்) எச்சரிக்கையும், ஒரு நாள் அதி கனமழை (ரெட் அலர்ட்) எச்சரிக்கையும் RMC விடுத்துள்ளது. இன்று விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டையில் மிக கனமழை பெய்யக்கூடும் என RMC கூறியுள்ளது. 16ஆம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சி, செங்கல்பட்டில் அதி கனமழை பெய்யக்கூடும் எனவும் கூறியுள்ளது.
2 புதிய ப்ரீபெய்ட் திட்டங்களை ஜியோ அறிமுகப்படுத்தியுள்ளது. ₹1,028 மற்றும் ₹1,029 விலையை அந்தத் திட்டங்களுக்கு ஜியோ நிர்ணயித்துள்ளது. இதில் ₹1,028 திட்டமானது, 84 நாள் வேலிடிட்டி கொண்டது. 4ஜி எனில் தினமும் 2 ஜிபி டேட்டாவும், 5ஜி எனில் அன்லிமிடெட் டேட்டாவும், 100 எஸ்எம்எஸ்-சும் வழங்குகிறது. ₹1,029 திட்டத்தில், ₹1,028 திட்ட பயன்களுடன் சேர்த்து, Amazon Prime Lite membership அளிக்கிறது.
SBI வங்கியில் ஸ்பெஷலிஸ்ட் கேடர் அதிகாரிகள் நிலையிலான பதவிகளில் காலியாக இருக்கும் 1,497 இடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும். இதற்கான விண்ணப்பப்பதிவு SBI வங்கியின் இணையதளமான sbi.co.in.இல் நடைபெறுகிறது. EWS, OBC, பொது பிரிவினர் ரூ.750 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம். எஸ்சி, எஸ்டி உள்ளிட்ட பிரிவினருக்கு கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலை பகிருங்கள்.
தெற்கு வங்கக்கடலில் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருப்பதாக RMC தெரிவித்துள்ளது. தமிழக உள் பகுதிகளிலும், தென்கிழக்கு வங்கக்கடலிலும் தலா 1 வளிமண்டல சுழற்சி நிலவுகிறது என்றும் RMC குறிப்பிட்டுள்ளது. இன்று உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்து, வட தமிழகம், புதுச்சேரி, தெற்கு ஆந்திர கடலோரப் பகுதியை நோக்கி 48 மணி நேரத்தில் நகரும் என்றும் கூறியுள்ளது.
Sorry, no posts matched your criteria.