India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்தில் நாளை முதல் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைகிறது. குறிப்பாக, சென்னை மற்றும் சுற்று மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் எனக் கூறப்பட்டுள்ளது. பொதுவாக, இதுபோன்று பெரிய மழை பெய்யும் போது, பொந்துகளில் நீர் நிரம்புவதால் அங்குள்ள பாம்புகள் வீடுகளுக்குள் வந்துவிடும். எனவே, வீடுகளுக்குள் பாம்பு புகுந்தால் அதனை அப்புறப்படுத்த 044 – 22200335 என்ற எண்ணில் தொடர்புகொள்ள வனத்துறை அறிவுறுத்தியுள்ளது.
குஜராத்தில் 10ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் பொதுத்தேர்வில் தோல்வியடையவே, மறு கூட்டலுக்கு விண்ணப்பித்துள்ளார். அதில், ஆசிரியரின் கவனக்குறைவால் 30 மதிப்பெண்கள் தவறவிடப்பட்டது தெரியவந்துள்ளது. அந்த விடைத்தாளை திருத்தியது ஒரு கணித ஆசிரியர் என்ற தகவலும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதேபோல், பொதுத்தேர்வு மதிப்பெண் கூட்டலின்போது தவறு செய்த 4,488 ஆசிரியர்களுக்கு அம்மாநில கல்வித்துறை அபராதம் விதித்துள்ளது.
சென்னையில் நாளை முதல் அதிகனமழை இருக்கும் என்பதால் மக்கள் ஒருவித பீதியில் உள்ளனர். இந்நிலையில், வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் இதுபற்றி கருத்து தெரிவித்துள்ளார். “சென்னையில் பெரிய மழை வருவது உண்மைதான். ஆனால், இதற்கான முன்னேற்பாடுகள் ஏற்கனவே செய்யப்பட்டு விட்டன. அதனால் மக்கள் தேவையில்லாமல் பயப்பட வேண்டாம். வெளியே வருவதை தவிர்த்தாலே போதுமானது. வதந்திகளை நம்பவும், பரப்பவும் வேண்டாம்” என்றார்.
தமிழ்நாடு சுற்றுலாத்துறை சந்தையியல் பிரிவில் காலியாக உள்ள Digital Marketing , Event Manager உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதி வாய்ந்தவர்கள் tamilnadutourism.tn.gov.in/recruitment என்ற இணையதளத்தில் அக்.20 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். கூடுதல் தகவல்களுக்கு <
சென்னையில் நாளை முதல் மிக கனமழை பெய்யவுள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது. மேலும், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு நாளை மறுதினம் (அக்.16) ரெட் அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, அக்.15 முதல் அக்.18 வரை சென்னையில் உள்ள ஐடி நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு WORK FROM HOME கொடுக்குமாறு முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.
வயது மூப்பு காரணமாக டாடா குழுமத் தலைவர் ரத்தன் டாடா கடந்த 9ஆம் தேதி காலமானார். இந்நிலையில், அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக மகாராஷ்டிரா மாநில திறன் மேம்பாட்டு பல்கலை.,யின் பெயரை, “ரத்தன் டாடா மகாராஷ்டிரா மாநில திறன் மேம்பாட்டு பல்கலைக்கழகம்’ என மாற்ற உள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. முன்னதாக டாடாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கவும் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்திருந்தது.
GMAIL-இல் AI மூலமாக பெரிய அளவில் மோசடி அரங்கேறி வருவதாக சைபர் க்ரைம் எச்சரித்துள்ளது. அதாவது, போனுக்கு திடீரென ஒரு மெசேஜ் வருமாம். அதில், GMAIL Recovery Request என ஒரு லிங்க் வருமாம். தப்பித்தவறி இதில் வரும் எந்த லிங்க்கை தொட்டாலும், நமது மெயிலை ஹேக் செய்து, வங்கிக்கணக்கை திருடி, பணத்தை அபேஸ் செய்து விடுவார்களாம். எனவே, GMAIL Recovery என ஏதாவது கண்ணில் பட்டால், அதை தொட வேண்டாம். Share It.
ஆப்ரிக்கா கண்டத்தில் மிகுதியாக உள்ள ஒட்டகச்சிவிங்கிகள் பற்றி தெரிந்து கொள்வோம் 1,700 kg எடை கொண்ட பாலூட்டி விலங்கான இதன் இதயம் (11kg) நொடிக்கு 170 முறை துடிக்கும். வேல மர இலையை விரும்பிச் சாப்பிடும் இவற்றின் நாக்கின் நீளம் 53 Cm ஆகும். குட்டி பிறந்ததும் எழுந்து நிற்கும். 6 அடி உயர கால்களைக் கொண்ட இவை நின்ற நிலையில் தூங்கும். மணிக்கு 56 Km வேகத்தில் ஓடும் இவற்றின் ஆயுட்காலம் 30 ஆண்டுகளாகும்.
➤உலோகக் கட்டமைப்புகள் மற்றும் உலோகத் தாளுடன் கூடிய கட்டுமானங்களைத் தவிர்க்கவும்.
➤தரையில் படுத்துக் கொள்ளக் கூடாது; அனைத்து மின்கம்பிகள், உலோக வேலிகள், மரங்கள் மற்றும் மலை உச்சிகளிலிருந்து விலகி இருங்கள்.
➤ மரங்களுக்கு அடியில் ஒதுங்க வேண்டாம், ஏனெனில் இவை மின்சாரம் கடத்துகின்றன
➤ரப்பர்-சோல்ட் ஷூக்கள் மற்றும் கார் டயர்கள் மின்னலில் இருந்து பாதுகாப்பு வழங்காது
பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்த நீங்கள், உதவி என கேட்பவர்களுக்கு முடிந்த உதவி செய்வீர்கள் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. நட்புக்கு முக்கியத்துவம் தருவீர்கள். நட்புக்கு மரியாதை, பணிவு, தன்னடக்கம் உள்ளவராக இருப்பீர்கள். வாழ்க்கையில் போராட்டங்களை கண்டு துவளாமல் எதிர்நீச்சல் போடுபவராக இருப்பீர்கள் என்கிறது நந்தி வாக்கியம். இவை உங்கள் குணங்களோடு ஒத்துப்போகிறதா என கமெண்ட்டில் சொல்லுங்கள்.
Sorry, no posts matched your criteria.