India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சூர்யா நடிக்கும் 45வது படத்தை RJ பாலாஜி இயக்குவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். வேல் மற்றும் அரிவாள்கள் இடம்பெற்றிருக்கும் போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது. போஸ்டரை பார்க்கும்போதே கண்டிப்பாக இது ஒரு Action படமாக இருக்கும் என தெரிகிறது. சூர்யா ரசிகர்கள் இந்த போஸ்டரை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
சின்ன வெங்காயம், ப.மிளகாய், இஞ்சி, பூண்டு, தூதுவளை இலைகள் ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். இவற்றை எண்ணெய்விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, கறிவேப்பிலை, மல்லித் தழைகளைச் சேர்த்து தாளித்து, நன்றாக வதக்கவும். பின்னர், இக்கலவையை மசிய அரைத்து, சாமை அரிசி மாவுடன் கலந்து பிசையவும். அதை சூடான தோசைக் கல்லில் மெலிதாக ஊற்றி, வேக வைத்து எடுத்தால், சுவையான தூதுவளை தோசை ரெடி.
‘இலவச மொபைல் யோஜனா 2024’ என்ற திட்டத்தின் கீழ் மத்திய அரசு 1 கோடி பேருக்கு இலவச மொபைல் போன்களை வழங்குவதாக வடஇந்திய யூடியூப் சேனல்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த தகவல் முற்றிலும் தவறானது, இதுபோன்ற எந்த திட்டத்தையும் மத்திய அரசு அறிவிக்கவில்லை என மத்திய அரசின் ‘PIB Fact Check’ தளம் விளக்கமளித்துள்ளது. மேலும், இது போன்ற செய்திகளை நம்பாமல், மக்கள் விழிப்புணர்வுடன் இருக்கவும் கேட்டுக்கொண்டுள்ளது.
சென்னை மற்றும் அதன் சுற்று மாவட்டங்களில் நாளை முதல் 4 நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. மேலும், சென்னைக்கு ரெட் அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, அக்.15 முதல் அக்.18 வரை ஐடி ஊழியர்களுக்கு WFH தர முதல்வர் அறிவுறுத்தி இருந்தார். ஆனால், பல ஐடி நிறுவனங்கள், என்ன மழை பெய்தாலும் ஊழியர்கள் கட்டாயம் அலுவலகத்துக்கு வர வேண்டும் எனக் கூறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னையில் நாளை நடைபெறவிருந்த B.ED மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சென்னையில் நாளை அதிகனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், கலந்தாய்வு தேதி மாற்றப்பட்டு, அக்.21ஆம் தேதி நடைபெறும் என கல்லூரி கல்வி ஆணையர் அறிவித்துள்ளார். அன்றைய தினம், தாவரவியல், விலங்கியல், வேதியியல், இயற்பியல் மாணவர்களுக்கான B.ED கலந்தாய்வு நடைபெற உள்ளது.
நாளை (OCT 15), எதிர்பார்க்கப்படும் மழையை பொறுத்து மாவட்டங்களுக்கு கீழ்க்கண்டவாறு ‘அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது:
RED ALERT: திருவாரூர், நாகை, மயிலாடுதுறை
ORANGE ALERT: சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தி.மலை, ராணிப்பேட்டை, விழுப்புரம், க.குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சை.
YELLOW ALERT: வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருச்சி, புதுக்கோட்டை.
‘வந்தே பாரத்’ ரயிலில் உணவு மிக மோசமாக இருப்பதாக நடிகர் பார்த்திபன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், “வந்தே பாரத் ரயிலில் தந்த உணவு தரமாக இல்லை. ஆரோக்கிய கேடாக இருப்பதாக பலர் முனுமுனுத்தனர். நான் புகார் கொடுத்துள்ளேன். நான் அதில் தொடர்ந்து செல்லாவிட்டாலும், செல்பவர்கள் பயன்பெற வேண்டி இந்த புகாரை அளித்தேன்” எனக் கூறியுள்ளார்.
‘சிறகடிக்க ஆசை’ தொடர் நாயகன் வெற்றி வசந்துக்கு, ‘பொன்னி’ தொடர் நடிகை வைஷ்ணவியுடன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. இருவரும் நீண்ட நாள்களாகவே காதலித்து வந்தநிலையில், சென்னையில் மிக எளிமையாக நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இதில் சின்னத்திரை பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டு இந்த ஜோடியை வாழ்த்தியுள்ளனர். திருமணத் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என தெரிகிறது.
டெஸ்ட் போட்டிகளில் ஒரு நாளில் இந்திய அணி 400 ரன்கள் குவிப்பதை விரும்புவதாக பயிற்சியாளர் கம்பீர் தெரிவித்துள்ளார். வெற்றிக்கான தேவை இருப்பின் 2 நாள்கள் தொடர்ந்து ஆடவும் இந்திய வீரர்கள் தயாராக இருப்பதாகவும், வெற்றி மட்டுமே தங்களின் குறிக்கோள் எனவும் குறிப்பிட்டுள்ளார். மக்களை மகிழ்விக்க வேண்டும் என்பதை தாண்டி, கிரிக்கெட்டை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதை அடுத்து, தமிழகம் முழுவதுமே பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, நாமக்கல், கரூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விருதுநகர், தென்காசி ஆகிய 15 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணிவரை இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.