India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மழைக்காலத்தில் ஏற்படும் சைனஸ், இருமல், மூக்கடைப்பு, ஜலதோஷம், தலைவலி, உடல்வலி போன்ற பிரச்னைகள் உள்ளவர்கள் தும்பை தேநீரைப் பருகலாம் என சித்த மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். இரு தும்பை இலை, சுக்கு, மிளகு, துளசி, மஞ்சள், கிராம்பு, ஏலக்காய் பொடி சேர்த்து நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி, பனங்கற்கண்டு சேர்த்தால் மணமிக்க சுவையான தும்பை தேநீர் ரெடி. இந்த டீயை எப்போது வேண்டுமானாலும் பருகலாம்.
➤சீனாவும், ரஷ்யாவும் இணைந்து தைவான் எல்லையில் நேரடி கூட்டுப்போர் பயிற்சியில் ஈடுபட்டன. ➤மத்திய காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் குழந்தைகள் உள்பட 20 பேர் கொல்லப்பட்டனர். ➤வியாழன் கிரகத்தின் நிலவை ஆராய்வதற்காக ‘யுரோப்பா கிளிப்பர்’ விண்கலத்தை நாசா மையம் அனுப்பியுள்ளது. ➤இஸ்ரேலின் தாக்குதலுக்குள்ளான லெபனானுக்கு UAE சார்பில் 450 டன் அளவிலான நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
சையத் முஷ்டாக் அலி கோப்பையின்(SMAT), 2024-25 சீசன் வரும் நவ.23ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்நிலையில் வரவிருக்கும் SMAT தொடரில் இருந்து ‘Impact Player’ விதியை நீக்குவதாக BCCI அறிவித்துள்ளது. இந்த விதியால் இந்திய கிரிக்கெட்டிற்கு ஆல்-ரவுண்டர்கள், கிடைப்பதில் சிரமம் ஏற்படுவதாக பல முன்னாள் வீரர்கள் புகார் தெரிவித்திருந்த நிலையில் இதை நீக்கியுள்ளது. இந்த விதி IPL-லில் அடுத்த 3 சீசனுக்கு தொடரும்.
தமிழகத்தில் காலை 10 மணி வரை 4 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் எனக் குறிப்பிட்டுள்ளது. ஏற்கெனவே, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் இன்று அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. எனினும், இம்மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படவில்லை.
ஆரோக்கியமாக இருக்க தினமும் உடற்பயிற்சி செய்வது அவசியமாகும். ஆனால் இந்த உடற்பயிற்சியை தினமும் எவ்வாறு செய்யலாம்? என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கும். இதுகுறித்து நிபுணர்கள் கூறுகையில், வாரத்திற்கு 5 நாள்கள் 1 மணி நேரம் உடற்பயிற்சி செய்யலாம். இது உடலை கட்டுக் கோப்பாக வைக்க உதவும் என பரிந்துரைக்கின்றனர். இந்தத் தகவலை மற்றவர்களுக்கும் பகிருங்கள்.
நம் வாழ்வின் தேவைகளை இறை ஆற்றலிடம் வேண்டிப் பெறுவது போலக் காதலையும் வேண்டிப் பெறலாம். காதல் கைகூட காதற் கடவுளர்களான ரதி – மன்மதனை வணங்க வேண்டுமென சாஸ்திரம் கூறுகிறது. அந்த வகையில் திண்டுக்கல்லை அடுத்த தாடிக்கொம்பு சௌந்தரராஜ பெருமாள் திருக்கோயிலில் உள்ள மன்மதனின் சிலைக்கு பெண்களும், ரதியின் சிலைக்கு ஆண்களும் மஞ்சள் – குங்குமம் அபிஷேகம் செய்து வழிபட, காதல் நிறைவேறும் என்பது ஐதீகம்.
ராயன் படத்தின் வெற்றியைத் தொடந்து நடிகர் தனுஷ் இயக்கும் ’நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ படத்தின் முதல் பாடலான கோல்டன் ஸ்பேரோ கடந்த மாதம் வெளியாகி மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், இப்பாடல் தற்போது யூடியூபில் 40 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இப்பாடலை பலரும் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் செய்து பதிவிட்டு வருகின்றனர். உங்களுக்கு இந்த பாடல் பிடித்திருந்ததா?
கோவை மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளி, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கு இன்று அரை நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மழை காரணமாக, இதற்கான அறிவிப்பை கோவை மாவட்ட ஆட்சியர் பிறப்பித்துள்ளார்.
டிஎன்பிஎஸ்சி, ஆசிரியர் தேர்வு வாரியம், ரயில்வே தேர்வு வாரியம் உள்ளிட்ட அரசுப்பணி போட்டித் தேர்வு எழுதுவோருக்கு, தமிழக அரசு சார்பில் கட்டணமில்லா இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. தமிழக அரசின் கல்வித் தொலைக்காட்சியில் வருகிற 18ஆம் தேதி வரை காலை 7 மணி முதல் 9 மணி வரை நேரடி ஒளிபரப்பாகிறது. இதே நிகழ்ச்சி அன்றைய தினமே இரவு 7 மணி முதல் 9 மணி வரை மறுஒளிபரப்பு செய்யப்படுகிறது. SHARE IT
கனமழை காரணமாக தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கும், விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.