News October 16, 2024

மீண்டும் இணையும் அஜித் – சிவா கூட்டணி

image

இயக்குநர் சிவாவுடன், அஜித் மீண்டும் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், அதை உறுதிப்படுத்தும் விதமாக சிவா பேசியுள்ளார். சமீபத்திய நேர்காணலில் இதுகுறித்த கேள்விக்கு, ‘அஜித் சாருடன் இணைந்து கண்டிப்பாக ஒரு படம் பண்ணுவேன். அதை நான் சொல்வதைவிட அவரே கூறினால் நன்றாக இருக்கும்’ என பதிலளித்துள்ளார். முன்னதாக இருவரும் வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் படங்களில் இணைந்து பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.

News October 16, 2024

ராசி பலன் (16.10.2024)

image

◙மேஷம் – நன்மை
◙ரிஷபம் – பாசம்
◙மிதுனம் – தாமதம்
◙கடகம் – நட்பு
◙சிம்மம் – சாதனை
◙கன்னி – உயர்வு
◙துலாம் – நஷ்டம்
◙விருச்சிகம் – அமைதி
◙தனுசு – ஆர்வம் ◙மகரம் – நலம்
◙கும்பம் – வெற்றி ◙மீனம் – காேபம்

News October 15, 2024

செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்படுமா?

image

கடந்த 24 மணிநேர மழையில் ஒட்டுமொத்த சென்னையும் தண்ணீரில் மிதக்க தொடங்கிவிட்டது. இந்நிலையில், சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம் ஏரி வேகமாக நிரம்பி வருகிறது. 24 அடி உயரம் கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் தற்போது 13.23 அடி அளவுக்கு தான் தண்ணீர் உள்ளது. ஆகவே இப்போதைக்கு ஏரி திறக்கப்பட வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். 2015 அனுபவம் அப்படி!

News October 15, 2024

மழைக்காலத்தில் காய்ச்சல் வராமல் தடுக்கும் வழிமுறைகள்

image

☛நீரை கொதிக்க வைத்து ஆறிய பின் குடியுங்கள். ☛ஓட்டல் உணவுகளை தவிருங்கள். ☛குளிர்பானங்கள், ஐஸ்கிரீம் உட்கொள்வதை தவிருங்கள். ☛சைனஸ் தொந்தரவு உள்ளவர்கள் உப்பு கலந்த நீரால் வாய் கொப்பளித்தால் சளி பிரச்சனையிலிருந்து தப்பிக்கலாம். ☛தெருவில் விற்கும் உணவுகள், நீண்ட நாள் ஆன திண்பண்டங்களை தவிர்ப்பது நல்லது. ☛நிலவேம்பு, பப்பாளி இலைச்சாறு, ஆடாதொடை இலை போன்றவற்றில் கசாயங்களை எடுப்பது நல்லது.

News October 15, 2024

2 நாட்கள் ரொம்பவே கவனம்: வெளியான WARNING!

image

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இந்தக் காற்றழுத்த தாழ்வு மண்டலம் 17-ம் தேதி அதிகாலை, புதுச்சேரி – நெல்லூர் இடையே சென்னைக்கு அருகே கரையை கடக்கிறது. இதனால் அடுத்த 2 நாட்களுக்கு மிக அதிக கனமழை பெய்யும் எனக் கூறியுள்ள வானிலை மையம், மக்கள் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.

News October 15, 2024

கோலிக்கு இன்னும் 53 ரன்கள் தேவை

image

நாளை தொடங்கும் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்டில் இந்திய வீரர் விராட் கோலி புதிய சாதனை படைக்க காத்துள்ளார். நாளைய போட்டியில் அவர் 53 ரன்கள் எடுக்கும் பட்சத்தில் டெஸ்டில் 9,000 ரன்கள் என்ற புதிய மைல் கல்லை எட்டுவார். இதன்மூலம் இந்திய அணிக்காக டெஸ்டில் 9,000 ரன்கள் எடுத்த 4வது வீரர் என்ற பெருமையையும் பெறுவார். இதுவரை டெஸ்டில் அதிகபட்சமாக சச்சின் 15,921 ரன்கள் எடுத்துள்ளார்.

News October 15, 2024

மொத்தம் 11 மாவட்டங்களுக்கு நாளை விடுமுறை!

image

தமிழகத்தில் கனமழை அடித்து நொறுக்கி வருவதை ஒட்டி, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சேலம், ராணிப்பேட்டை ஆகிய 6 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

News October 15, 2024

வயநாடு தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டி

image

ரேபரேலி, வயநாடு என இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்ற ராகுல் காந்தி, வயநாடு எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, வயநாடு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் யார் போட்டியிடுவார் என்பதில் மர்மம் நீடித்தது. இந்நிலையில், அங்கு பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. வயநாடு இடைத்தேர்தல் நவ.13 நடைபெறுகிறது.

News October 15, 2024

சென்னையில் புறநகர் மின்சார ரயில்கள் ஓடுமா?

image

தண்டவாளங்களில் பல இடங்களில் தண்ணீர் தேங்கி உள்ளதால், அந்த இடங்களில் ரயில்கள் மெதுவாகவே இயக்கப்படுகின்றன. இதனால் ரயில்கள் தாமதமாக வாய்ப்புண்டு. மேலும், வானிலை நிலவரத்தை பொறுத்து, ரயில்கள் பகுதி நேரமாகவோ, முழுவதுமாகவோ ரத்து செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. ஆகவே, சிரமத்தை தவிர்க்க, பொதுமக்கள் மிகவும் அவசியமாக இருந்தால் மட்டும் பயணங்களை மேற்கொள்ள வேண்டும் என ரயில்வே நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

News October 15, 2024

தனியார் நிறுவனங்களுக்கும் விடுமுறையா?

image

கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் உள்ள அரசு அலுவலகங்களுக்கு நாளை (அக்.16) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்கள் குறைவான ஊழியர்களை வைத்து வேலை வாங்குமாறும், ஊழியர்களுக்கு WFH தருமாறும் தனியார் நிறுவனங்களை அரசு அறிவுறுத்தியுள்ளது. அதே சமயத்தில், மழை அதிகமாகும்பட்சத்தில் தனியார் நிறுவனங்களுக்கும் விடுமுறை வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

error: Content is protected !!