News October 16, 2024

எகிறிய பார்த்திபன்.. ஆக்சனில் இறங்கிய ரயில்வே!

image

நடிகர் பார்த்திபன் இரு தினங்களுக்கு முன்பு ‘வந்தே பாரத்’ ரயிலில் பயணம் செய்தார். அப்போது, அவருக்கு வழங்கப்பட்ட உணவு மிகவும் மோசமாக இருந்ததாக தனது எக்ஸ் பக்கத்தில் பார்த்திபன் பதிவிட்டார். இதையடுத்து, இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் வைரலாக மாறியது. இதன் தொடர்ச்சியாக, ஆக்சனில் இறங்கிய ரயில்வே நிர்வாகம், உணவு தயாரித்த சேலத்தை சேர்ந்த கான்டிராக்டருக்கு அபராதம் விதித்து உத்தரவிட்டது.

News October 16, 2024

ரயில்வேயில் 8,113 பணியிடங்கள்

image

நாடு முழுவதும் ரயில்வேயில் காலியாக உள்ள 8113 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அக்.20 ஆம் தேதி கடைசி நாளாகும். பயணச்சீட்டு மேற்பார்வையாளர், ஸ்டேஷன் மாஸ்டர், தட்டச்சர் உள்ளிட்ட பணியிடங்கள் உள்ளன. இதற்கு 18 -36 வயதுடையவர்கள் <>https://www.rrbchennai.gov.in/<<>> என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனை மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

News October 16, 2024

நட்சத்திரங்களும் அதற்குரிய பரிகார கோயில்களும்

image

➤திருவாதிரை – சேங்காலிபுரம் சோழீஸ்வரர் கோயில் ➤புனர்பூசம் – சீர்காழி சட்டநாதசுவாமி கோயில் ➤பூசம் – விளங்குளம் அட்சயபுரீஸ்வரர் கோயில் ➤ஆயில்யம் – திருப்புறம்பியம் சாட்சிநாதர் கோயில் ➤மகம் – திண்டுக்கல் மகாலிங்கேஸ்வரர் கோயில் ➤பூரம் – நாகை காயாரோகணேஸ்வரர் கோயில் ➤உத்திரம் – திருச்சி மாங்கல்யேஸ்வரர் கோயில் ➤அஸ்தம் – குத்தாலம் கிருபாகூபாரேஸ்வரர் கோயில் ➤சித்திரை – திருவையாறு ஐயாறப்பர் கோயில்.

News October 16, 2024

ஆறு சுவைகளும்! ஆற்றலும்!!

image

*இனிப்பு – உடலின் தசையை அதிகமாக வளர்க்க உதவும்.
*கசப்பு – வேண்டாத கிருமிகளை அழிக்கும் சக்தியை தரும்
*புளிப்பு – இரத்தக் குழாயில் உள்ள அழுக்கை நீக்கும்.
*கார்ப்பு – உடல் உஷ்ணம், உணர்ச்சிகளை கூட்டும்
*உவர்ப்பு – ஞாபக சக்தியை அதிகரிக்கும்.
*துவர்ப்பு- உடலில் காயம் ஏற்படும்போது இரத்தத்தை உறையச் செய்யும். #Share IT.

News October 16, 2024

நட்சத்திரங்களும் அதற்குரிய பரிகார கோயில்களும்

image

ஒருவர் தனது ஜென்ம நட்சத்திரத்திற்குரிய கோயில்களுக்குச் சென்று வணங்கினால் அவருக்கு ஏற்படும் தோஷங்கள் விலகும் என்கிறது ஜாதக புராணம். 27 நட்சத்திரங்களுக்குரிய கோயில்களைப் பற்றி இங்கே பார்க்கலாம். ➤அஸ்வினி-பிறவி மருந்தீஸ்வரர் கோயில் ➤பரணி-திருப்புகலூர் அக்னீஸ்வரர் கோயில் ➤கார்த்திகை-காத்ர சுந்தரேஸ்வரர் கோயில் ➤ரோகிணி-காஞ்சி பாண்டவ தூத பெருமாள் கோயில் ➤மிருகசீரிடம்-திருவாரூர் எண்கண் முருகன் கோயில்.

News October 16, 2024

ரேஷனில் துவரம் பருப்பு வழங்குக: வானதி

image

ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு கிடைப்பதை, தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என BJP MLA வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார். 6 மாதங்களாகவே ரேஷனில் துவரம் பருப்பு சரியாக வழங்கப்படவில்லை எனக் குற்றஞ்சாட்டிய அவர், வெளிச்சந்தைகளில் கிலோ ₹200 வரை விற்கப்படுவதால் மக்கள் இன்னல் அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார். பாமாயில் உள்ளிட்ட அனைத்து பொருள்களையும் தடையின்றி வழங்கும்படியும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

News October 16, 2024

குழந்தைகளை பாதிக்கும் செல்ஃபோன்

image

செல்ஃபோனை தொடர்ந்து பார்ப்பதால் வளரிளம் பருவத்தினரின் பேசும், கற்கும் திறன் பாதிக்கப்படுவதாக, பிரிட்டன் இம்பீரியல் கல்லூரி ஆய்வில் தெரியவந்துள்ளது. 1,007 பேரை ஆய்வு செய்து வல்லுநர்கள் அளித்த அறிக்கையில், COVID-19 நெருக்கடிக்கு பிறகு 3இல் 2 பேருக்கு இந்த மனநலம் பாதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க பிரிட்டன் அரசுக்கும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News October 16, 2024

கங்குவா வசூலில் புதிய உச்சம் படைக்கும்: ஞானவேல் ராஜா

image

கங்குவா பட வசூல் தமிழ் சினிமாவில் புதிய வரலாறு படைக்கும் என தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தெரிவித்துள்ளார். இப்படம் ரூ.1000 கோடி வசூல் சாதனை படைக்குமா என பலரும் கேட்பது வருத்தமாக இருப்பதாகவும், ரூ.2000 கோடி வசூலை எதிர்பார்த்து காத்திருப்பதாகவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். படம் மிகச் சிறப்பாக வந்துள்ளதாகவும், ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிச்சயம் பூர்த்தி செய்யும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

News October 16, 2024

‘எம்புரான்’ பிருத்விராஜின் சிறப்பு போஸ்டர் வெளியானது!

image

மலையாள நடிகர் பிருத்விராஜின் பிறந்தநாளை முன்னிட்டு ‘எம்புரான்’ படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. 2019இல் வெளியாகி அமோக வரவேற்பை ‘லூசிஃபர்’ பெற்றது. அதில், மோகன்லாலின் உதவியாளராக ‘சையத் மசூத்’ என்கிற கதாபாத்திரத்தில் பிருத்விராஜ் நடித்திருந்தார். அதன் 2ஆம் பாகமாக ‘எம்புரான்’ உருவாகி வருகிறது. பிருத்விராஜ் இயக்கி வரும் இப்படத்திற்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

News October 16, 2024

30 நொடிகளில் உலகைச் சுற்றி…

image

➤நைஜீரியாவின் ஜிகாவா பகுதியில் பெட்ரோல் டேங்கர் லாரி வெடித்து நிகழ்ந்த விபத்தில் 94 பேர் உயிரிழந்தனர். ➤மேற்குக் கரையில் வன்முறைச் செயல்களில் ஈடுபடும் யூத அமைப்புகளுக்கு பிரிட்டன் பொருளாதாரத் தடை விதித்தது. ➤ஈரானுக்கு பதிலடி கொடுக்கும் முடிவுதான் இறுதியானது என்று இஸ்ரேல் திட்டவட்டமாக அறிவித்தது. ➤இஸ்ரேல் தாக்குதல் காரணமாக லெபனானில் இருந்து 12 லட்சம் பேர் இடம்பெயர்ந்ததாக UNHCR தகவல் தெரிவித்தது.

error: Content is protected !!