News October 17, 2024

நீங்களே நம்பர் 1 வீரர்.. வில்லியர்சுக்கு கோலி புகழாரம்

image

தென்னாப்பிரிக்க முன்னாள் வீரர் டி-வில்லியர்சே உண்மையான நம்பர் 1 கிரிக்கெட் வீரர் என்று விராட் கோலி புகழாரம் சூட்டியுள்ளார். ICC ஹால் ஆப் பேம் வீரராக டி-வில்லியர்ஸ் நேற்று அறிவிக்கப்பட்டார். இதையொட்டி கடிதம் எழுதியுள்ள கோலி, தாம் இணைந்து விளையாடிய வீரர்களில் வில்லியர்சே சிறந்தவர். அதிரடி வீரராகவே டி-வில்லியர்சை அறிவர். ஆனால் உண்மையில் சூழலுக்கு ஏற்ப அவர் விளையாடுவார் என்று குறிப்பிட்டுள்ளார்.

News October 17, 2024

22 கி.மீ. வேகத்தில் நகரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்

image

காற்றழுத்த தாழ்வு மண்டலம் 22 கி.மீ. வேகத்தில் நகர்வதாக IMD தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் சென்னையில் இருந்து 80 கி.மீ., நெல்லூரில் இருந்து 150 கி.மீ. தூரத்தில் நிலை காெண்டு இருப்பதாகவும், இது மேற்கு வட மேற்கில் நகர்ந்து, புதுச்சேரி- நெல்லூர் இடையே வட தமிழகம், தென் ஆந்திர கடலோர பகுதியில் இன்று காலை கடந்து குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிலக்கும் எனவும் கணித்துள்ளது.

News October 17, 2024

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: அறத்துப்பால் ▶ அதிகாரம்: அன்புடைமை ▶குறள் எண்: 80 ▶ குறள்: அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு ▶பொருள்: அன்பின் வழியில் இயங்கும் உடம்பே உயிர்நின்ற உடம்பாகும்: அன்பு இல்லாதவர்க்கு உள்ள உடம்பு எலும்பைத் தோல்போர்த்த வெற்றுடம்பே ஆகும். SHARE IT.

News October 17, 2024

முடிந்தால், இந்த பெயரை வாசியுங்கள்

image

உலகில் வித்தியாசமான பெயர்களுக்கு பஞ்சமில்லை. அந்த வரிசையில், நியூசிலாந்து நாட்டின் மலைக்கு வைக்கப்பட்டுள்ள பெயர் ஆச்சரியப்படுத்துகிறது. பொரங்காவில் உள்ள அந்த மலைக்கு 85 எழுத்துக்களில் TAUMATAWHAKATANGIHANGAKOAUAUOTAMATEAPOKAIWHENUAKITANATAHU என பெயரிடப்பட்டுள்ளது. இது உலகின் நீளமான பெயர் என்ற சாதனையை படைத்துள்ளது. இந்த பெயரை வாசியுங்கள் பார்க்கலாம்.

News October 17, 2024

மழையை காணோம்.. அன்புமணி விமர்சனம்

image

ரெட் அலர்ட் விடுத்தும், ஒரு சொட்டு மழையை கூட காணோம் என்று அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார். எக்ஸ் பக்க பதிவில் அவர், இன்று ரெட் அலர்ட் என்று வானிலை முன்னறிவிப்புகள் தெரிவித்திருந்தன. ஆனால் மாலை வரை ஒரு சொட்டு மழை கூட பெய்யவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார். அரசும் மக்களும் தயாராகவும், திட்டமிடலுக்கு ஏற்ற வகையிலும், வானிலை அறிவிப்புகள் துல்லியமாக இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

News October 17, 2024

டாடா அணிந்த வாட்சின் விலை தெரியுமா?

image

மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடா, பல ஆயிரம் கோடிகளுக்கு அதிபதியாக திகழ்ந்த போதிலும் கடைசி வரை எளிமையாகவே வாழ்ந்தார். சுவிட்சர்லாந்து ராணுவ வாட்சான விக்டோரினேக்ஸ் பிராண்ட் வாட்சையே அவர் விரும்பி அணிந்தார். அதன் மதிப்பு ₹10 ஆயிரமே ஆகும். மாத சம்பளம் வாங்குவோர் கூட இன்று பல ஆயிரம் ரூபாய் மதிப்புடைய வாட்சை அணியும் நிலையில், டாடா எந்தளவு எளிமையாக வாழ்ந்தார் என்பதற்கு இது ஒரு உதாரணமாகும்.

News October 17, 2024

கொடூர வில்லனாக நடிக்க ஆசை.. ஷாருக்கான் பேட்டி

image

திரைப்படங்களில் கொடூர வில்லனாக நடிக்க ஆசைப்படுவதாக பாலிவுட் நடிகர் ஷாருக்கான் தெரிவித்துள்ளார். விழா ஒன்றில் கலந்து கொண்ட அவரிடம், ஏதேனும் கதாபாத்திரத்தில் நடிக்கவில்லை என்று எண்ணமும், புதிய கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்ற விருப்பமும் உள்ளதா என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், 2023இல் ஆக்சன் படங்களில் நடித்து விட்டதாகவும், இனி வில்லனாக நடிக்க ஆசைப்படுவதாகவும் தெரிவித்தார்.

News October 17, 2024

இந்தியா-நியூசி. டெஸ்ட்: இன்று 2ஆவது நாள் ஆட்டம்

image

இந்தியா. நியூசிலாந்து அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி, பெங்களூருவில் நேற்று தொடங்கியது. ஆனால் மழை காரணமாக முதல்நாள் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று 2ஆவது நாள் ஆட்டம் நடைபெறவுள்ளது. மழை குறுக்கிடவில்லை எனில், போட்டி காலை 9.30 மணிக்கு தொடங்கும். அதன் நேரலையை Sports 18-1 SD, Sports 18-1 HD, Sports 18-2 (ஹிந்தி) டிவிக்கள், JioCinema app, வெப்சைட்டில் காணலாம். SHARE IT.

News October 17, 2024

ரேஷனில் பருப்பும், பாமாயிலும் வழங்கப்படும்: அமைச்சர்

image

தீபாவளிக்கு ரேஷன் கடையில் துவரம் பருப்பும், பாமாயிலும் தடையின்றி வழங்கப்படும் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். இம்மாதத்திற்கு 11 ஆயிரம் மெட்ரிக் டன் துவரம் பருப்பு, 1 கோடி பாமாயில் பாக்கெட்டுகள் உள்ளதாக கூறியுள்ளார். இதனால், தீபாவளிக்கு பொருள்கள் வழங்கப்படுமா என பொதுமக்கள் அச்சம்கொள்ள தேவையில்லை என்றார். முன்னதாக பருப்பு பற்றாக்குறை இருப்பதாக MLA வானதி சீனிவாசன் குற்றம் சாட்டியிருந்தார்.

News October 17, 2024

நட்சத்திரங்களும் அதற்குரிய பரிகார கோயில்களும்

image

➤சதயம் – நன்னிலம் அக்னிபுரீஸ்வரர் கோயில் ➤பூரட்டாதி – திருக்குவளை பிரம்மபுரீஸ்வரர் கோயில் ➤உத்திரட்டாதி – திருநாங்கூர் மதங்கீஸ்வரர் கோயில் ➤ரேவதி – காருகுடி கயிலாசநாதர் கோவில். இந்த ஜென்ம நட்சத்திரத்திற்குரிய நாளில் விரதமிருந்து, இந்தக் கோயில்களுக்குச் சென்று, 11 வகை அபிஷேகம் செய்து, நெய் தீபமேற்றி வணங்கினால் கைமேல் பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

error: Content is protected !!