News October 17, 2024

தயவுசெய்து இதை மட்டும் குடிக்காதீங்க!

image

பொடுகு, தோல் தடித்து, சிவந்து, அரிப்பது, வறட்சி, அழற்சி போன்ற தோல் பிரச்னைகளுக்கு தவறான உணவுப் பழக்கமே காரணம் என ஆயுஷ் மருத்துவம் கூறுகிறது. இது தொடர்பாக பேசிய ஆயுஷ் மருத்துவர் ஹரி, “ஒவ்வாமை போன்ற உடல் நல பாதிப்புகளில் இருந்து தப்பிக்க முரண்பட்ட இரு சுவைகளான புளிப்பு, இனிப்பு தன்மை கொண்ட உணவுப் பொருள்களை பாலில் சேர்த்து ‘மில்க் ஷேக்’ என்ற பெயரில் திரவ உணவாக எடுத்துக்கொள்ள கூடாது” என்றார்.

News October 17, 2024

விக்கெட்களை இழந்து தடுமாறும் இந்திய அணி

image

நியூசி.,க்கு எதிரான முதல் டெஸ்டில் இந்திய அணி தடுமாறி வருகிறது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த ரோகித் தலைமையிலான இந்திய அணிக்கு பெரும் அதிர்ச்சி கிடைத்தது. ரோகித் சர்மா (2), விராட் கோலி (0), சர்பராஸ் கான் (0) என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். நியூசி. வேகப்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் முக்கிய விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது. தற்போது ஜெய்ஸ்வால் (8*) கிரீஸில் உள்ளார். ஸ்கோர் 12/3.

News October 17, 2024

யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனத்தில் வேலை!

image

யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனத்தில் காலியாக உள்ள 200 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிகளுக்கு பி.காம், பி.டெக், எம்.காம், எம்.டெக் உள்ளிட்ட ஏதேனும் ஒரு பாடப்பிரிவில், 60% மதிப்பெண்கள் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். எழுத்துத் தேர்வு, நேர்காணல் முறையில் ஆட்கள் சேர்ப்பு நடைபெறும். விருப்பமுடையவர்கள் நவ. 5ஆம் தேதிக்குள் uiic.co.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். Share it.

News October 17, 2024

FLASH: தங்கம் விலை மேலும் உயர்ந்தது

image

தங்கம் விலை நாளுக்கு நாள் உயர்ந்து, புதிய உச்சம் தொட்டு வருகிறது. அந்தவகையில், சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹160 உயர்ந்து ஒரு சவரன் ₹57,280க்கும், கிராமுக்கு ₹20 உயர்ந்து ஒரு கிராம் ₹7,160க்கும் விற்பனையாகிறது. அதேநேரம், சில்லறை விற்பனையில் வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ₹103க்கும், கிலோ ₹1,03,000க்கும் விற்கப்படுகிறது.

News October 17, 2024

அதிமுகவினர் நேரில் வந்தார்களா? சேகர் பாபு கேள்வி

image

மழை வெள்ள பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளுக்கு அதிமுக நிர்வாகிகள் நேரில் வந்தார்களா? என அமைச்சர் சேகர்பாபு கேள்வி எழுப்பியுள்ளார். சென்னையில் வெள்ள பாதிப்பு நடவடிக்கைகளை நேரில் ஆய்வு செய்த அவர், முதல்வர் ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது நிவாரணப் பணிகளை மேற்கொண்டதாக நினைவுகூர்ந்தார். அத்துடன், இபிஎஸ் எதிர்க்கட்சித் தலைவர் என்று சொல்வதற்கே தகுதியில்லாதவர் என்றும் சாடினார்.

News October 17, 2024

நடிகை ராதிகா ஆப்தே கர்ப்பம்

image

நடிகை ராதிகா ஆப்தே கர்ப்பமாக இருப்பதை முதல்முறையாக வெளிப்படுத்தியுள்ளார். BFI லண்டன் திரைப்பட விழாவில் பங்கேற்ற அவர், கர்ப்பமாக இருப்பதைக் கண்டதும் பலரும் ஆச்சரியம் அடைந்தனர். பிரிட்டிஷ் வயலின் கலைஞரான பெனடிக்ட் டெய்லரை 2012ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட அவர், தனது தனிப்பட்ட வாழ்க்கையை பொது வெளியில் வெளியிட விரும்பாதவர். இந்நிலையில், அவர் கர்ப்பமாக இருப்பது தற்போதுதான் தெரிய வந்துள்ளது.

News October 17, 2024

சைனஸை விரட்டி அடிக்கும் பஞ்ச மூலிகை கசாயம்

image

மழைக்காலத்தில் ஏற்படும் சைனஸ், இருமல், மூக்கடைப்பு, ஜலதோஷம், தலைவலி, உடல்வலி போன்ற பிரச்னைகள் உள்ளவர்கள் பஞ்ச மூலிகை கசாயத்தைப் பருகலாம் என சித்த மருத்துவம் பரிந்துரைக்கிறது. தும்பை, தூதுவளை, துளசி, வெற்றிலை, கற்பூரவள்ளி, இஞ்சி, பூண்டு, சிறிதளவு இந்துப்பு சேர்த்து நீரில் 10 நிமிடம் கொதிக்க வைத்து வடிகட்டி, சிட்டிகை மிளகு சேர்த்தால் பஞ்ச மூலிகை கசாயம் ரெடி. இதை காலையில் மட்டுமே பருக வேண்டும்.

News October 17, 2024

₹1,00,000 சம்பளம்… தமிழக அரசில் வேலை!

image

தமிழ்நாடு சுற்றுலாத் துறையில் காலியாகவுள்ள 26 ஒப்பந்த பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. பொறியியல் & மார்க்கெட்டிங் பிரிவுகளில் பணியாற்ற விரும்புவோர் விண்ணப்பிக்கலாம். கல்வித் தகுதி: Any UG Degree, B.E, B.Tech, B.Arch. வயது வரம்பு: 21-35. சம்பளம்: ₹20,000 – ₹1,00,000. விண்ணப்பிக்க கடைசி நாள்: அக்.20. கூடுதல் விவரங்களுக்கு இந்த <>TTDC<<>> லிங்க்கை கிளிக் செய்யவும்.

News October 17, 2024

விளையாட்டு துளிகள்

image

➤ISSF World Cup: ஆடவர் 50 மீ. ரைபிள் 3 நிலை பிரிவில் இந்திய வீரர் அகில் ஷியோரன் வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றினார். ➤செஸ் மாஸ்டர்ஸ் தொடர்: காலிறுதியின் ‘டை பிரேக்கர்’ சுற்றில் விஸ்வநாதன் ஆனந்தை பிரக்ஞானந்தா வீழ்த்தினார். ➤IPL 2025: MI அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக பராஸ் நியமிக்கப்பட்டார். ➤’Hall of Fame’ பட்டியலில் இந்திய கிரிக்கெட் வீராங்கனை நீத்து டேவிட்டை சேர்த்து ICC கௌரவித்தது.

News October 17, 2024

புது மோசடி நடக்குது.. பெற்றோர்களே அலர்ட்!

image

பள்ளி மாணவர்களின் பெற்றோரை குறிவைத்து மோசடி நடப்பதால், விழிப்புணர்வோடு இருக்க பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. +2 மாணவர்களுக்கு தொழில் பயிற்சிக்கு பின் ஊக்கத்தொகை வழங்கப்படுவதாகவும், பள்ளியில் ஆதார் புதுப்பிப்பு முகாம் நடப்பதாகவும் பெற்றோரிடம் வங்கிக்கணக்கு விவரம் பெற்று, அதில் உள்ள பணத்தை பறிப்பதாக குறிப்பிட்டு, பள்ளிக்கல்வித்துறை இதுபோன்ற விவரங்களை போனில் கேட்காது என்றும் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!