News July 9, 2025

மாணவிகளின் ஆடைகளை கழற்றிவிட்டு சோதனை.. ஷாக்

image

மகாராஷ்டிர மாநிலம், சாகாபூர் பள்ளியில் மாணவிகளின் ஆடைகளை கழற்றிவிட்டு சோதனை நடத்திய சம்பவம் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பாத்ரூமில் ரத்தம் சிதறி இருக்கவே, மாதாந்திர பீரியட்தான் இதற்கு காரணம் என கருதி தலைமை ஆசிரியை உள்ளிட்டோர் மாணவிகளிடம் சோதனை நடத்தியுள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெற்றோர் போராட்டத்தில் ஈடுபடவே, இதுகுறித்து போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது.

News July 9, 2025

மாலை 6 மணி வரையிலான தலைப்புச் செய்திகள்

image

<<17005460>>✪கடலூர் விபத்துக்கு<<>> கேட் கீப்பர் தூங்கியதே காரணம்

✪<<17007676>>குஜராத்தின் வதோதராவில் <<>> பாலம் இடிந்து விழுந்ததில் 10 பேர் பலி

✪<<17005030>>யோகா செய்து PM<<>> மோடிக்கு வரவேற்பளித்த நமீபியா

✪<<17004947>>4G, 5G ஸ்மார்ட்<<>> போன்களின் விலைகளை நிறுவனங்கள் குறைக்க உள்ளதாக தகவல்

✪<<17007716>>3-வது டெஸ்டில்<<>> களமிறங்கும் வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர்

News July 9, 2025

மகாராஷ்டிராவை போன்று பிஹாரிலும் பாஜக சதி: ராகுல்

image

ECI உதவியோடு மகாராஷ்டிராவை போன்று பிஹார் தேர்தலிலும் முறைகேடு செய்ய பாஜக சதி செய்வதாக ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார். அம்மாநிலத்தில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தும் பணியை ECI மேற்கொண்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற கடையடைப்பு போராட்டத்தில் ராகுல் காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது பேசிய அவர், ஏழை வாக்காளர்களை Voter List-ல் இருந்து நீக்க வாய்ப்புள்ளது என்றார்.

News July 9, 2025

₹10 யாசகம் போட்ட பெண்.. ரஜினிகாந்த் பேச்சு வைரல்

image

தனக்கு பெண் ஒருவர் ₹10 யாசகம் போட்டதாக ரஜினி பேசிய பழைய வீடியோ வைரலாகி வருகிறது. பெங்களூருவில் உள்ள கோயிலுக்கு தாம் மாறு வேடத்தில் சென்று இருந்ததாகவும், அப்போது அங்கு வந்த பெண் தன் உருவத்தை பார்த்து பிச்சை எடுப்பவர் என கருதி ₹10 அளித்ததாகவும், அதை மறுக்காமல் தாம் வாங்கிக் கொண்டதாகவும், பிறகு உண்டியலில் தாம் ₹200 போட்டதை பார்த்து அவர் தன்னிடம் வருத்தம் தெரிவித்தாகவும் கூறியுள்ளார்.

News July 9, 2025

கேட் கீப்பர் தூங்கியதே விபத்துக்கு காரணம்!

image

கடலூர் செம்மங்குப்பத்தில் நேர்ந்த விபத்துக்கு கேட் கீப்பர் தூங்கியதே காரணம் என்பது தெரியவந்துள்ளது. 7.10 மணிக்கு ரயில் வருவது குறித்து அவருக்கு தொலைபேசி மூலம் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், கேட்டை மூடாமல் மீண்டும் தூங்கியுள்ளார். கேட்டை மூட மறந்துவிட்டதாக பங்கஜ் சர்மா வாக்குமூலம் அளித்துள்ளார். அவர் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். So Sad!

News July 9, 2025

4 ஆண்டுகளுக்கு பின் டெஸ்டில் ஜோஃப்ரா ஆர்ச்சர்

image

3-வது டெஸ்டில் இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜாப்ரா ஆர்ச்சர் இணைந்துள்ளார். 3-வது டெஸ்டுக்கான அணியில் ஒரு மாற்றத்தை இங்கிலாந்து அணி செய்துள்ளது. அதன்படி 4 ஆண்டுகள் கழித்து டெஸ்டில் ஜோஃப்ரா ஆர்ச்சர் விளையாட உள்ளார். முழு உடல் தகுதியை எட்டாததால் முதல் 2 டெஸ்டில் ஆர்சர் விளையாடவில்லை. ஜோஷ் டங்கிற்கு பதில் அவர் அணியில் இணைந்துள்ளதால் இங்கிலாந்து பந்து வீச்சு மேலும் வலுவடைந்துள்ளது.

News July 9, 2025

செயல்படாத ஜன் தன் கணக்குகள் முடக்கம்?

image

வங்கிகளில் ஜீரோ பேலன்ஸ் வசதியுடன் ஜன் தன் சேமிப்பு கணக்கை மத்திய அரசு அளிக்கிறது. இக்கணக்கில் குறைந்தபட்ச பணம் எதுவும் இருப்பு வைக்க வேண்டியதில்லை என்பதால் நாட்டு மக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில், பல ஜன் தன் வங்கி சேமிப்பு கணக்குகள் செயல்படாமல் இருப்பதாகவும், அதை முடக்க அரசு உத்தரவிட்டு இருப்பதாகவும் தகவல் பரவி வருகிறது. ஆனால் இதை மத்திய நிதியமைச்சகம் மறுத்துள்ளது.

News July 9, 2025

ஸ்மார்ட் போன்கள் விலை குறைய வாய்ப்பு!

image

4G, 5G ஸ்மார்ட் போன்களின் விலைகளை நிறுவனங்கள் குறைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. One Plus, iQOO, Leomi, Realme உள்ளிட்ட நிறுவனங்களில் பெருமளவு செல்போன்கள் தேங்கியுள்ளன. ரக்‌ஷா பந்தன், சுதந்திர தினம் தொடங்கி அடுத்தடுத்து பண்டிகைகள் வர உள்ளதால் பண்டிகைகளுக்கு முன்பே கையிருப்பில் உள்ள செல்போன்களை சலுகையில் விற்பனை செய்துவிட நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. உங்கள் பட்ஜெட் என்ன?

News July 9, 2025

பரந்தூர் விவகாரம்: நிலம் வழங்கியோருக்கு இழப்பீடு

image

பரந்தூர் விமான நிலையம் அமைக்க இடம் கொடுத்த நில உரிமையாளர்கள் 19 பேருக்கு இன்று இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டது. காஞ்சிபுரம் ஆட்சியர் நடத்திய பேச்சுவார்த்தையில் பரந்தூர், பொடவூர், நெல்வாய், வளத்தூர், அக்கம்மாபுரம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 19 பேர் நிலத்தை கொடுக்க ஒப்புக்கொண்டனர். அதன்படி 17 ஏக்கர் நிலம் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்திற்கு பத்திரப்பதிவு செய்யப்பட்டது.

News July 9, 2025

13 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு

image

இன்று (ஜூலை 9) இரவு 7 மணி வரை மழை பெய்யக்கூடிய மாவட்டங்கள் பட்டியலை IMD வெளியிட்டுள்ளது. அதாவது, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், தி.மலை, கோவை, திருப்பூர், தேனி, தென்காசி, திண்டுக்கல்லில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என கூறியுள்ளது. வேலூர், திருப்பத்தூர், நீலகிரி, நெல்லையில் லேசான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக IMD தெரிவித்துள்ளது.

error: Content is protected !!