India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
‘GOAT’ திரைப்படம் வெளியாகி ஒரு மாதத்தை கடந்து விட்ட நிலையில், இதுவரை உலகம் முழுவதும் ₹455 கோடி வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. இப்படம் சமீபத்தில் OTTயில் வெளியான நிலையில், அதிலும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இருப்பினும் ‘லியோ’ படத்துடன் ஒப்பிடுகையில் ‘GOAT’ குறைவாகவே வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தை நீங்கள் பார்த்துவிட்டீர்களா?
வங்கதேசத்திற்கு எதிரான T20 போட்டியில் சரவெடியாக வெடித்த ரிங்கு சிங் 26 பந்துகளில் அரை சதம் (53*) அடித்துள்ளார். வங்கதேசத்தின் பவுலிங்கை நாலாபுறமும் சிதறடித்த அவர், 5 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் விளாசினார். இது T20 போட்டியில் அவர் அடிக்கும் மூன்றாவது அரை சதமாகும். தற்போது வரை இந்தியா 16 ஓவர்களில் 182/4 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியா எவ்வளவு ரன்கள் எடுக்கும்?
தமிழ்நாட்டில் 21 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மிக கனமழையும், 14 மாவட்டங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சி, வேலூர், தி.மலை, தருமபுரி, கரூர், திருச்சி, ஈரோடு, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, விருதுநகர், மதுரை, நெல்லை, குமரி உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கணித்துள்ளது.
சாம்சங்கிற்கு ஆதரவாக அரசு ஈடுபடுவது சரியில்லை என பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார். ஐகோர்ட் ஆணைப்படி தொழிலாளர்களின் அறவழிப் போராட்டத்தை அனுமதிக்க வலியுறுத்திய அவர், இந்த விவகாரத்தில் கைதாகியுள்ள தொழிலாளர்களை விடுவிக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளார். 8 மணி நேர வேலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சுங்குவார்சத்திரம் சாம்சங் தொழிலாளர்கள் செப்டம்பர் முதல் போராடி வருகின்றனர்.
வங்கதேசத்திற்கு எதிரான இரண்டாவது T20 போட்டியில் அதிரடியாக ஆடிவரும் நிதிஷ் ரெட்டி 27 பந்துகளில் அரை சதம் (50*) அடித்துள்ளார். வங்கதேசத்தின் பவுலிங்கை அடித்து நொறுக்கிய அவர், 3 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் விளாசி T20யில் தனது முதலாவது அரை சதத்தை பதிவு செய்துள்ளார். இவரது அதிரடியால் இந்தியா 12 ஓவர்களில் 122/3 ரன்கள் எடுத்துள்ளது. மற்றொரு வீரர் ரிங்கு சிங் 34* ரன்களுடன் களத்தில் உள்ளார்.
Forbes இதழ் வெளியிட்ட உலகின் பணக்கார நடிகைகளின் பட்டியலில் ஹாலிவுட் நடிகை ஜேமி கெர்ட்ஸ் $8 பில்லியனுடன் (₹ 66,000 கோடி) முதலிடம் பிடித்துள்ளார். 2ஆவது இடத்தில் டெய்லர் ஸ்விஃப்ட் ($1.6 பில்லியன்), 3ஆவது இடத்தில் ரிஹானா ($1.4 பில்லியன்), 4ஆவது இடத்தில் செலினா கோமஸ் ($1.3 பில்லியன்), 5ஆவது இடத்தில் மடோனா ($850 மில்லியன்) உள்ளனர். முதல் 10 இடங்களில் ஒரு இந்திய நடிகைகூட இடம்பெறவில்லை.
டாடா குழுமத் தலைவர் ரத்தன் டாடா உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக, மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த திங்கள் கிழமை அவர் அனுமதிக்கப்பட்டார். ICU பிரிவில் செயற்கை சுவாசக் கருவி உதவியுடன் மூத்த மருத்துவர்கள் குழு அவரை கண்காணித்து வருகிறது. இந்நிலையில் இன்று, திடீரென அவரது உடல்நிலை சற்று மோசமடைந்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
வங்கதேசத்திற்கு எதிரான 2வது T20 போட்டியில் பேட்டிங் செய்துவரும் இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. தொடக்க ஆட்டக்காரர்களான சஞ்சு சாம்சன் 10, அபிஷேக் ஷர்மா 15, சூர்யகுமார் 8 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தனர். தற்போது ரிங்கு சிங் 4*, நிதிஷ் ரெட்டி 7* ரன்களுடன் ஆடி வருகின்றனர். இந்திய அணி 6 ஓவர்கள் முடிவில்45/3 ரன்கள் எடுத்துள்ளது. இன்று எந்த அணி வெற்றிபெறும்?
சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற செய்த ஜூலானா மற்றும் ஹரியானா மக்களுக்கு வினேஷ் போகத் நன்றி தெரிவித்துள்ளார். ஜூலானா தொகுதியின் முன்னேற்றத்திற்கு பாடுபடுவேன் எனக் கூறிய அவர், சண்டை இன்னும் ஓயவில்லை; சாமானிய மக்களுக்கு நீதி கிடைக்க இன்னும் பலத்துடன் மோத வேண்டும். நமது உரிமைகள் மற்றும் நீதிக்காக தொடர்ந்து குரல் எழுப்ப வேண்டும் எனக் கூறியுள்ளார்.
இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது T20 போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. இதையடுத்து, இந்திய அணி சற்று நேரத்தில் பேட்டிங்கை தொடங்க உள்ளது. India Team: சஞ்சு சாம்சன், அபிஷேக் ஷர்மா, சூர்யகுமார், நிதிஷ் ரெட்டி, பாண்டியா, ரியான் பராக், ரிங்கு சிங், வாஷிங்டன் சுந்தர், வருண் சக்கரவர்த்தி, அர்ஷ்தீப் சிங், மயங்க் யாதவ்.
Sorry, no posts matched your criteria.