India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
▶குறள் பால்: அறத்துப்பால் ▶அதிகாரம்: அன்புடைமை. ▶குறள் எண்: 79
▶ குறள்: புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கை அகத்துறுப்பு அன்பி லவர்க்கு.
▶பொருள்: அன்பு என்னும் அகத்து உறுப்பு இல்லாதவர்க்குப் புறத்து உறுப்புக்கள் அழகாக இருந்து என்ன பயன்?
▶அக். 11 (புரட்டாசி 25) ▶வெள்ளி ▶நல்ல நேரம்: 12:15 – 1:15 AM – 4:45 – 5:45 PM ▶கெளரி நேரம்: 1:45 AM – 2:45 AM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 10:30 AM – 12:00 PM ▶எமகண்டம்: 3:00 PM – 4:30 PM ▶குளிகை: 7:30 AM – 9:00 AM ▶ திதி: நவமி ▶ பிறை: வளர்பிறை ▶சுப முகூர்த்தம்: இல்லை ▶ சூலம்: மேற்கு ▶ பரிகாரம்: வெல்லம் ▶ சந்திராஷ்டமம்: மிருகசீரிடம் ▶ நட்சத்திரம்: பூராடம் அ.கா 2.09 ▶யோகம்: சித்த-மரண யோகம்
இன்று (அக். 11) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
கேரளா ஓணம் பம்பர் லாட்டரியில் முதல் பரிசான ₹ 25 கோடி, கர்நாடகாவைச் சேர்ந்த மெக்கானிக் ஒருவருக்கு கிடைத்துள்ளது. அங்குள்ள பாண்டவாபுரத்தில் மெக்கானிக்காக வேலை பார்த்து வரும் அல்தாஃப் என்பவர்தான் தற்போது ஓவர் நைட்டில் ஒபாமாவாக மாறி இருக்கிறார். ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த அல்தாஃப், கடந்த 15 ஆண்டுகளாக லாட்டரி வாங்கி வந்திருக்கிறார். வரிப்பிடித்தம் போக ரூ.13 கோடி அவருக்கு கிடைக்கும்.
இன்று (அக். 11) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
‘வேட்டையன்’ வெறும் ஆக்ஷன், அடிதடி என்று இல்லாமல், கல்விக் கொள்ளை பற்றி கருத்து சொல்லும் படமாக ரசிகர்களை கவர்கிறது. ஆனால், முதல் பாதியில் அட்டகாச த்ரில்லராக போகும் படம், 2-ம் பாதியில் எளிதில் யூகிக்க கூடிய காட்சிகளாக மாறிவிடுகிறது என்கின்றனர் விமர்சகர்கள். ஹீரோவுக்கு ஓவர் பில்ட்-அப் கொடுத்து, வில்லனுக்கு வெயிட்டேஜ் ஏற்றாமல் டம்மியாக காட்டி உள்ளதாகவும் சொல்கின்றனர். நீங்கள் படம் பாத்துட்டீங்களா?
◙மேஷம் – பெருமை
◙ரிஷபம் – அமைதி
◙மிதுனம் – ஜெயம்
◙கடகம் – சினம்
◙சிம்மம் – போட்டி
◙கன்னி – தெளிவு
◙துலாம் – இன்பம்
◙விருச்சிகம் – சாதனை
◙துனுசு – விவேகம் ◙மகரம் – மேன்மை
◙கும்பம் – மகிழ்ச்சி ◙மீனம் – சாந்தம்
BiggBoss-ல் ஸ்கோர் செய்வதில் ஒவ்வொருவரும் தீவிரமாக உள்ளனர். ஃபேட்மேன், ரஞ்சித் இடையில் நடந்த சண்டை ‘ப்ராங்க்’ எனத் தெரிந்ததும் ஜாக்குலின், சௌந்தர்யா உள்ளிட்டவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்களை சமாதானப்படுத்த ரஞ்சித் சௌந்தர்யா நெற்றியில் முத்தமிட்டு, ஜாக்குலின் கன்னத்தை கிள்ளிவிட்டு சென்றார். இதை பலர் விமர்சிக்க, ‘நெற்றியில் இட்ட முத்தம் புனிதமானது’ என்று ரஞ்சித்துக்கு ஆதரவு கொடுத்துள்ளார் வனிதா.
பாகிஸ்தானுடனான முதலாவது டெஸ்ட்டின் முதல் இன்னிங்சில், இங்கிலாந்து 150 ஓவர்கள் பேட்டிங் செய்து, 7 விக்கெட்டுக்கு 823 ரன்கள் எடுத்து டிக்ளர் செய்தது. ஹாரி புரூக் 317 ரன்களும், ஜோ ரூட் 262 ரன்களும் குவித்தனர். டெஸ்ட்டில் ஒரு அணி 800 ரன்களுக்கு மேல் குவிப்பது, 27 ஆண்டுகளுக்கு பின் தற்போது நடந்துள்ளது. இதற்கு முன் 1997-ல் கொழும்புவில், இந்தியாவுக்கு எதிரான டெஸ்டில் இலங்கை 952 ரன்கள் எடுத்திருந்தது.
ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை என தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டது. தற்போது சனிக்கிழமை பள்ளிகள் திறந்திருக்கும் என பள்ளிக்கல்வித்துறையின் அறிவிப்பால் மாணவர்கள் குழம்பி விட்டனர். இந்நிலையில், மாணவர் சேர்க்கைக்காக மட்டுமே பள்ளிகள் திறந்திருக்கும். ஆனால், மாணவர்களுக்கு வழக்கம்போல் பொதுவிடுமுறை தான் என்றும், திங்கட்கிழமை வழக்கம்போல் பள்ளிகள் இயங்கும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.