India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருச்சியில் இருந்து இன்று மாலை 5.40 மணிக்கு சார்ஜாவுக்கு 141 பயணிகளுடன் AI விமானம் புறப்பட்டது. சிறிது நேரத்திலேயே விமானத்தின் சக்கரங்கள் உள்ளே செல்லாததை பைலட் கவனித்துள்ளார். இதையடுத்து, திருச்சியில் தரையிறங்குவதற்காக ஒரு மணிநேரமாக அந்த விமானம் வானில் வட்டமடித்து கொண்டிருக்கிறது. இதையடுத்து, விமான நிலையத்தில் ஏராளமான ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
இணையத்தில் கூகுள் நிறுவனம் ஏகபோக செல்வாக்கை அனுபவிப்பதாக கூறி, கூகுள் மீது ‘anti trust’ வழக்கை தொடுத்துள்ளது அமெரிக்க சட்டத் துறை. குரோம் பிரவுசர், ஆண்ட்ராய்டு ஆகிய தளங்களை பயன்படுத்தி கூகுள் சர்ச் இன்ஜினுக்கு பயனர்களை திருப்பிவிட்டு, அதன்மூலம் அதிக விளம்பர வருவாய் ஈட்டுவதாக குற்றஞ்சாட்டியுள்ள அரசு, பெரிய டெக் கம்பெனிகளின் ஏகபோக ஆதிக்கத்தை தடுக்க வேண்டும் என்கிறது. இதை கூகுள் மறுத்துள்ளது.
தமிழகத்திற்குரிய நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார். உ.பி., உள்ளிட்ட வட மாநிலங்களை ஒப்பிடும்போது, தமிழகத்திற்கு தரப்பட்ட நிதி மிகவும் குறைவானது என சுட்டிக்காட்டியுள்ள அவர், தமிழ்நாட்டை வஞ்சிக்கும் இந்த போக்கை மத்திய அரசு கைவிட வேண்டும் என்றார். பண்டிகை காலத்தையொட்டி வரி பகிர்வாக தமிழகத்திற்கு ₹7,268 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
ரத்தன் டாடாவிடம் கற்க வேண்டிய 3 விஷயங்கள்: 1) தீர்க்கமான முடிவு. சரியான முடிவு எடுப்பதில் எனக்கு விருப்பமில்லை. ஒரு முடிவை எடுத்து, அதை சரியாக மாற்றுவதே எனக்கு பிடிக்கும் என்பதே டாடாவின் தாரக மந்திரம் 2) அப்டேட். புது சிந்தனைகளை ஊக்குவிக்க, இளைஞர்களுக்கு பெரிய பதவிகளை கொடுத்தவர். 3) பணிவு. உலக கோடீஸ்வரராக இருந்தாலும், தனது கார், அலுவலக கதவுகளை தனக்காக யாரும் திறக்கக்கூடாது என உத்தரவிட்டவர்.
விஜய் சேதுபதியின் மகன் சூர்யா, சிறு வயதில் தனது தந்தையுடன் நானும் ரவுடிதான், சிந்துபாத் படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்திருந்தார். தற்போது வளர்ந்து இளைஞராகி விட்ட அவர், பீனிக்ஸ் வீழான் என்ற படத்தில் நாயகனாக அறிமுகமாகிறார். அந்தப் படத்தை பிரபல சண்டை இயக்குநர் அனல் அரசு இயக்குகிறார். சாம் சி.எஸ். இசையமைக்கிறார். படம் வருகிற நவ. 14இல் தியேட்டர்களில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.
மும்பையில் தாம் பயணிக்க இருந்த இண்டிகோ விமானம் 4 மணி நேரம் தாமதமானதாக ஸ்ருதிஹாசன் விரக்தி வெளியிட்டுள்ளார். எக்ஸ் பக்க பதிவில், எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் விமானம் தாமதமாகி இருப்பதாகவும், பயணிகள் அவதிக்கு ஆளாகியுள்ளதாகவும், குழப்பம் நிலவுவதாகவும் குறிப்பிட்டிருந்தார். மேலும் பலரும் கண்டனத்தை பதிவிட, விமானம் தாமதமாக மோசமான வானிலையே காரணம் என இண்டிகோ விளக்கம் அளித்துள்ளது.
மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள 39,481 பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் நிறைவடைய இன்னும் 4 நாள்களே உள்ளன. BSF, CISF, CRPF உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு படைகளில் 39,481 காலி பணியிடங்கள் உள்ளன. இதில் சேர ஆண்கள், பெண்கள் ஆகிய இருபாலருமே விண்ணப்பிக்கலாம். இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வருகிற 14ஆம் தேதி கடைசி நாளாகும். இந்தத் தகவலை வேலை தேடும் உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்க.
இந்திய கிரிக்கெட் அணி வேகப்பந்து வீச்சாளர் முகம்மது சிராஜ், தெலங்கானா மாநில காவல்துறை DSP-யாக நியமிக்கப்பட்டுள்ளார். கிரிக்கெட் விளையாட்டில் புரிந்த சாதனைகள், தெலங்கானா மாநிலத்திற்கான அர்ப்பணிப்பை கவுரவிக்கும் வகையில், இந்த பதவி அளிக்கப்பட்டுள்ளது. ஹைதராபாத்தை சேர்ந்த சிராஜ், டெஸ்ட், ஒருநாள், டி20 ஆகிய 3 வடிவ கிரிக்கெட் விளையாட்டுகளிலும் இதுவரை 163 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார்.
ஹிஸ்புல்லா தலைவர் நசரல்லா இஸ்ரேலின் வான் தாக்குதலில் கொல்லப்பட்டார். மிக ரகசியமாக இயங்கிவந்த அவரின் இருப்பிடத்தை ஈரான் படையில் உள்ள மொசாத் உளவாளி தான் வெளியிட்டதாக தகவல் வெளியானது. இந்நிலையில், இது தொடர்பாக ஈரான் அரசின் இஸ்லாமிய புரட்சிப்படையின் ‘Quds’ பிரிவு சீனியர் தளபதி இஸ்மாயில் கனியிடம் ஈரான் அரசு விசாரணை நடத்தி வருகிறது. சில நாட்களாக இவர் வெளியில் தென்படாத நிலையில், இத்தகவல் கசிந்துள்ளது.
ஆன்லைனில் கைது செய்ய முடியுமா என்ற சந்தேகத்திற்கு சைபர் கிரைம் போலீஸ் விளக்கம் அளித்துள்ளது. சிலருக்கு, நீங்கள் கைது செய்யப்பட்டுள்ளீர்கள். இதிலிருந்து தப்பிக்க பணம் செலுத்துங்கள் என மின்னஞ்சல் அனுப்பி மோசடி நடைபெறுகிறது. இதை சுட்டிக்காட்டி, சைபர் கிரைம் போலீசார் வெளியிட்டுள்ள எச்சரிக்கை அறிக்கையில், ஆன்லைனில் கைது செய்ய முடியாது. அதை நம்பி பணம் செலுத்த வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளனர்.
Sorry, no posts matched your criteria.