News October 12, 2024

ரயில் விபத்து அதிர்ச்சியளிக்கிறது: முதல்வர்

image

கவரைப்பேட்டையில் ஏற்பட்டுள்ள ரயில் விபத்து அறிந்து அதிர்ச்சியடைந்ததாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அவரது X தளத்தில் ”விபத்து நடந்த இடத்திற்கு அமைச்சர் நாசர், மாவட்ட ஆட்சியர், அரசு அதிகாரிகளை செல்ல உத்தரவிட்டேன். விபத்தில் காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். மற்ற பயணிகள் ஊர் திரும்புவதற்கான பயண வசதிகள் ஏற்பாடு செய்ய தனியே குழு அமைக்கப்பட்டுள்ளது.” என்றார்.

News October 12, 2024

HAPPY BIRTHDAY❤️: பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (அக். 12) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

News October 12, 2024

அமெரிக்காவை கெஞ்சும் வளைகுடா நாடுகள்

image

ஏவுகணை தாக்குதல் நடத்திய ஈரானுக்கு பதிலடியாக, அதன் எண்ணெய் கிணறுகள் மீது தாக்குதல் நடத்த இஸ்ரேல் தயாராகி வருகிறது. இந்நிலையில், தங்களை இஸ்ரேல் தாக்குவதற்கு வான்பரப்பை அனுமதித்தால், அப்படி செய்யும் நாடுகள் தாக்கப்பட நேரிடும் என ஈரான் எச்சரித்தது. இதனால், அச்சமடைந்த சவுதி, கத்தார், UAE., உள்ளிட்ட நாடுகள், ஈரான் எண்ணெய் கிணறுகளை இஸ்ரேல் தாக்காமல் தடுக்கும்படி USA-வை கெஞ்சி கேட்டுக் கொண்டுள்ளன.

News October 12, 2024

விமானி, விமான நிலைய ஊழியர்களுக்கு CPM பாராட்டு

image

விமானி டொமினிக் பெலிசோ மற்றும் திருச்சி விமான நிலைய ஊழியர்களின் துரிதமான விவேகமான செயல்பாடு பாராட்டுக்குரியது என மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். விமான பயணிகள் பதட்டமடையாத விதத்தில் சூழ்நிலையை கையாண்டு, 2 மணி நேர கடும் போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் அனைவரையும் CPM சார்பில் நெகிழ்ந்து, பாராட்டி வாழ்த்துகிறோம் என அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

News October 12, 2024

JUST NOW: நியூஸி. டெஸ்ட் தொடர்: இந்திய அணி அறிவிப்பு

image

நியூஸிலாந்து டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ள இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்த அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா, துணை கேப்டனாக பும்ரா அறிவிக்கப்பட்டுள்ளனர். ஜெய்ஸ்வால், சுப்மன் கில், கோலி, கே.எல். ராகுல், சர்பராஸ் கான், ரிஷப் பண்ட் (கீப்பர்), துருவ் ஜூரல் (கீப்பர்), அஸ்வின், ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், ஆகாஸ் தீப் ஆகியோரும் அணியில் இடம்பிடித்துள்ளனர்.

News October 12, 2024

அந்நிய செலாவணி கையிருப்பு ₹31, 179 கோடி சரிவு

image

இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு ₹31, 179 கோடி அளவுக்கு சரிவை சந்தித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 4ஆம் தேதியுடன் முடிந்த நிலவரப்படி, இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு குறித்த புள்ளி விவரத் தரவுகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. அதில் அந்நிய செலாவணி கையிருப்பு முந்தைய வாரத்துடன் ஒப்பிடுகையில் ₹31, 179 கோடி சரிந்து ₹58.94 லட்சம் கோடியாக உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 12, 2024

ரயில் விபத்து: முதல்வர் அதிரடி உத்தரவு

image

ரயில் விபத்து தொடர்பாக தேவையான உதவிகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மீட்பு பணியில் சுணக்கம் ஏற்படாமல் மருத்துவ வசதி, ஆம்புலன்ஸ்கள், மருந்துகள் உள்ளிட்டவற்றை தயார் நிலையில் வைக்க முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். மேலும் பயணிகளுக்கு குடிதண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உறுதி செய்யவும் உத்தரவிட்டார்.

News October 12, 2024

விமானத்தில் என்ன பிரச்னை? மத்திய அரசு விளக்கம்

image

திருச்சியில் வானில் 2 மணி நேரம் விமானம் வட்டமடித்ததற்கான காரணம் குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து பேசிய மத்திய விமானப் போக்குவரத்து இணையமைச்சர் முர்ளிதர் மோகல், ஹைட்ராலிக் தோல்வி காரணமாக சார்ஜா சென்ற விமானம் திருச்சிக்கு திரும்பி வர நேரிட்டதாக கூறினார். எரிபொருளை வெளியேற்றி எடையை குறைக்க விமானி விரும்பியதால் 4,000 அடி உயரத்தில் வட்டமடித்ததாகவும் தெரிவித்தார்.

News October 12, 2024

டோரேமானுக்கு குரல் கொடுத்தவர் மரணம்

image

இந்தியா உள்பட உலகம் முழுவதும் கோடிக்கணக்கான சிறார்களின் மனம் கவர்ந்த கார்டூன் கதாபாத்திரங்களில் டோரேமானும் ஒன்றாகும். ஜப்பானைச் சேர்ந்த கார்டூன் கலைஞர் பிஜிகோ பிஜியோ என்பவரால் உருவாக்கப்பட்ட இந்த கதாபாத்திரத்துக்கு 1979ஆம் ஆண்டு முதல் 2005ஆம் ஆண்டு வரை குரல் கொடுத்தவர் நொபுயு ஓயாமா ஆவார். அவர் கடந்த 29ஆம் தேதி தனது 90ஆவது வயதில் வயோதிகம் காரணமாக காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 12, 2024

ரயில் விபத்து: உதவி எண்கள் அறிவிப்பு

image

பொன்னேரியை அடுத்த கவரப்பேட்டையில் சரக்கு ரயில் மீது மைசூர் – தர்பங்கா (12578) எக்ஸ்பிரஸ் ரயில் மோதி விபத்துகுள்ளானது. மீட்புக் குழுவினர் வந்து ரயிலில் இருந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்கின்றனர். இதுவரை எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை. மேலும் தகவல்களுக்கு 044 – 2535 4151, 044 – 2435 4995 ஆகிய உதவி எண்களை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!