News October 12, 2024

MEESHO ஊழியர்களுக்கு ஹாப்பி நியுஸ்

image

தங்களின் ஊழியர்கள் புத்துணர்ச்சி பெறுவதற்காக 9 நாட்கள், ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கி MEESHO நிறுவனம் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது. வெற்றிகரமான பண்டிகை கால விற்பனையை தொடர்ந்து, அக் 26-நவ. 3ம் தேதி வரை லேப்டாப், மீட்டிங் என எந்த தொந்தரவும் இல்லாமல் ஊழியர்கள் தங்களின் விடுப்பை கொண்டாடலாம் என கூறியுள்ளது. ஊழியர்களின் கஷ்டத்தை புரிந்ததற்காக நன்றி என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

News October 12, 2024

அக். 12: வரலாற்றில் இன்று

image

1971 – பாரசீகப் பேரரசின் 2,500ம் ஆண்டு நிறைவு விழா கொண்டாடப்பட்டது.
1976 – சென்னை நோக்கிச் சென்ற இந்தியன் ஏர்லைன் விமானம், மும்பை விமான நிலையத்தில் தரையிறங்கும்போது வெடித்ததில், நடிகை ராணி சந்திரா உட்பட அதில் பயணம் செய்த 95 பேர் உயிரிழந்தனர்.
1993 – இந்தியாவில் தேசிய மனித உரிமை ஆணையம் அமைக்கப்பட்டது.
1999 – பாக். ராணுவ தளபதி முஷாரப், நவாஸ் ஷெரீபை ஆட்சியில் இருந்து அகற்றி அரசுத்தலைவரானார்.

News October 12, 2024

மகாத்மா காந்தியின் பொன்மொழிகள்

image

* நேற்றைய தோல்விகளை பற்றி நீங்கள் கவலைப்பட்டால், இன்றைய வெற்றிகள் குறைவாகவே இருக்கும். நிகழ்காலத்தில் நாம் என்ன செய்கிறோம் என்பதைப் பொறுத்தே எதிர்காலம் அமையும். *நீங்கள் இந்த உலகை மாற்ற விரும்பினால், உங்களிலிருந்து தொடங்குங்கள். *உறவுகள் நான்கு கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டவை: மரியாதை, புரிதல், ஏற்றுக்கொள்ளல் மற்றும் பாராட்டு.* மனிதகுலத்தின் மிகவும் சக்திவாய்ந்த ஆயுதம் அமைதி.

News October 12, 2024

அடுத்த 1 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் 22 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக IMD தெரிவித்துள்ளது. தஞ்சாவூர், புதுக்கோட்டை, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும் எனவும், திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சி, சென்னை, ராணிப்பேட்டை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி,சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, சிவகங்கை, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், குமரி மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்றும் கணித்துள்ளது.

News October 12, 2024

நவம்பர் 15இல் திரைக்கு வரும் ‘எமக்கு தொழில் ரொமான்ஸ்’

image

‘எமக்கு தொழில் ரொமான்ஸ்’ படம் நவம்பர் 15ஆம் தேதி தியேட்டரில் ரிலீஸாகும் என படக்குழு அறிவித்துள்ளது. அறிமுக இயக்குநர் பாலாஜி கேசவன் இயக்கும் இந்தப் படத்தில் அசோக் செல்வனுக்கு ஜோடியாக அவந்திகா மிஸ்ரா நடிக்கிறார். நகைச்சுவை கலந்த காதல் கதையாக இந்த படம் உருவாகியுள்ளது இதுபோன்ற சினிமா அப்டேட்களை பெற WAY2NEWS ஆப்-ஐ டவுன்லோடு பண்ணுங்க. இந்த தகவலை SHARE பண்ணுங்க.

News October 12, 2024

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: அறத்துப்பால் ▶அதிகாரம்: அன்புடைமை. ▶குறள் எண்: 80
▶ குறள்: அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு.
▶பொருள்: அன்பின் வழியில் இயங்கும் உடம்பே உயிர்நின்ற உடம்பாகும்: அன்பு இல்லாதவர்க்கு உள்ள உடம்பு எலும்பைத் தோல்போர்த்த வெற்றுடம்பே ஆகும்.

News October 12, 2024

இன்றைய நல்ல நேரம்

image

▶அக். 12 (புரட்டாசி 26) ▶சனி ▶நல்ல நேரம்: 10:45 – 11:45 AM – 4:45 – 5:45 PM ▶கெளரி நேரம்: 12:15 AM – 1:15 AM & 9:30 PM – 10:30 PM ▶ராகு காலம்: 9:00 AM – 10:30 AM ▶எமகண்டம்: 1:30 PM – 3:00 PM ▶குளிகை: 6:00 AM – 7:30 AM ▶ திதி: தசமி ▶ பிறை: வளர்பிறை ▶சுப முகூர்த்தம்: இல்லை ▶ சூலம்: கிழக்கு ▶ பரிகாரம்: தயிர் ▶சந்திராஷ்டமம்: திருவாதிரை ▶ நட்சத்திரம்: உத்திராடம் அ.கா 1.42 ▶ யோகம்: சித்த யோகம்

News October 12, 2024

HAPPY BIRTHDAY❤️: பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (அக். 12) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

News October 12, 2024

ஆஸ்திரேலிய டெஸ்ட்: ரோஹித் விளையாடுவது சந்தேகம்

image

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் தனிப்பட்ட காரணங்களுக்காக கேப்டன் ரோஹித் சர்மா விளையாடுவது சந்தேகம் எனக் கூறப்படுகிறது. ஆஸ்திரேலியாவில் நவ 22 முதல்- ஜன. 7 வரை சுற்றுப்பயணம் செய்து 5 டெஸ்டில் இந்தியா விளையாடவுள்ளது. இதில் முதல் டெஸ்டில் ரோஹித் விளையாடவில்லையெல், துணை கேப்டனாக சுப்மன் கில் (அ) பும்ரா ஆகியோரில் ஒருவர் நியமிக்கப்பட்டு அணியை வழிநடத்துவர் எனக் கூறப்படுகிறது.

News October 12, 2024

19 பேர் காயம்: அமைச்சர் நாசர்

image

கவரப்பேட்டையில் ஏற்பட்ட ரயில் விபத்தில் 19 பேர் காயமடைந்துள்ளதாக அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்கள் அருகில் உள்ள ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில், 3 பேருக்கு எலும்பு முறிவு 16 பேருக்கு சிறிய அளவில் காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், மற்ற பயணிகள் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்றார்.

error: Content is protected !!