India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
உ.பி.யைச் சேர்ந்த பெண்மணி அல்கா (42). இவரது 17 வயது மகள், ரவுடியை காதலித்து வந்திருக்கிறார். எவ்வளவு சொல்லியும் கேட்காததால், மகளை கொல்ல முடிவெடுத்த அல்கா, கூலிப்படை தலைவனுக்கு பணம் கொடுத்திருக்கிறார். இங்குதான் விதி விளையாடியுள்ளது. ஏனெனில், அந்த கூலிப்படை தலைவன்தான் அவரது மகளின் காதலன். விஷயம் கேள்விப்பட்டு கொதித்து போன மகள், காதலனுடன் சேர்ந்து தாயையே போட்டு தள்ளிவிட்டார். விதி வலியது.
‘சுரமருசி நில்லா உருத்திரச்சடைக்கே உரை’ என்ற குணவாகடப் பாடல் உருத்திரச்சடையின் ஆற்றலைப் போற்றுகிறது. லினாலூல், யுஜெனால், ஜெரானியால் போன்ற வேதிப்பொருட்கள் நிறைந்த இதனை நீரிலிட்டுக் கொதிக்க வைத்துப் பருக, ஜூரம் குறைவதோடு வியர்வை வெளியேறி உடலும் மனமும் புத்துணர்வு அடைவதை உணர முடியும் என்றும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் எனவும் சித்த மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
ம.பி.யில் உள்ள துர்க்கை கோயிலில் நேற்று சிறப்பு பூஜை நடைபெற்றது. அப்போது, பக்தர்களுடன் இருந்த ஒருவர், திடீரென கத்தியை எடுத்து, தனது கழுத்தை கரகரவென அறுத்தார். இதை பார்த்து அங்கிருந்தவர்கள் ஓட்டம் பிடித்தனர். சிலர் அவரை தடுத்து நிறுத்தி, ஹாஸ்பிட்டலில் சேர்த்தனர். அவர் பாதி கழுத்து அறுபட்டு ICU-வில் அவர் உள்ளார். ராஜ்குமார் என்ற அவர், 9 நாள் விரதமிருந்து தலை காணிக்கை செலுத்த வந்தவராம்.
ICICI வங்கி அதன் கிரெடிட் கார்டு விதிமுறைகளில் புதிய மாற்றங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, ரிவார்டு புள்ளிகளைப் பெற மளிகை & பல்பொருள் அங்காடிகளில் மேற்கொள்ளும் செலவினங்களை (உயர்த்தி) வரம்பிற்குள் கொண்டுவந்துள்ளது. பிரீமியம் கிரெடிட் கார்டுதாரர்கள் மாதந்தோறும் ₹40,000 வரையிலும், பிற கார்டுதாரர்கள் ₹20,000 வரையிலும் செலவிடலாம் எனத் தெரிவித்துள்ளது. இது நவ. 15 முதல் நடைமுறைக்கு வருகிறது.
சனாதன தர்மத்தின் பெருமைகள் குறித்து ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பேசியுள்ளார். அவர் கூறுகையில், “முதலில் ஒரு விஷயத்தை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். இந்து தர்மம் என்பது இந்தியாவின் மதம் அல்ல. அது உலகுக்கே பொதுவான மதம். சனாதன தர்மமே இந்தியாவின் உயிராக இருக்கிறது. அதுதான் நமக்கு உத்வேகம் தருகிறது. நமக்கான வரலாறை தந்ததும் அதுதான். பலரது தியாகம் இதில் உள்ளது” எனக் கூறினார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக கமலா ஹாரிஸ் தேர்வானதை கொண்டாடும் விழாவில் AR ரஹ்மான் இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இது குறித்து AAPI அமைப்பு வெளியிட்ட அறிவிப்பில், நவம்பரில் நடைபெறவுள்ள ரஹ்மானின் இசைக் கச்சேரி நேரடியாக ஒளிபரப்பப்படும் எனத் தெரிவித்துள்ளது. ஆனால், இந்த இசைக் கச்சேரி குறித்து ரஹ்மான் தனது சமூக வலைதளங்களில் எந்தப் பதிவையும் பகிரவில்லை.
சென்னை அருகே கவரப்பேட்டையில் நேற்று நிகழ்ந்த ரயில் விபத்து மக்கள் மத்தியில் அச்சத்தையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்த ரயில்வே இணையமைச்சர் சோமண்ணா, “ரயில் விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. விபத்தில் யாரும் உயிரிழக்கவில்லை. இதற்கு கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும். கடவுள் அருளால்தான் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது” என்றார்.
தக்காளி, வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளை பசுமை பண்ணை, ரேஷன் கடை மூலம் குறைந்த விலையில் விற்க கோரிக்கை எழுந்தது. இந்நிலையில், சென்னையில் பண்ணை பசுமை கடைகள் மூலம் குறைந்த விலையில் தக்காளி Kg ₹60 வரையும், வெங்காயம் ₹40 வரையும் விற்பனை செய்யப்படுகிறது. இதற்கிடையில் விலையை கட்டுப்படுத்த அனைத்து மாவட்டங்களுக்கும் பண்ணை பசுமை கடைகளை விரிவுப்படுத்தப்படும் என அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.
இன்று 10 மணிக்கு <<14337378>>GK<<>> வினா-விடை பகுதியில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்கள் இவையே. 1) அமெரிக்கா (வயோமிங் – NAR Coal Mine) 2) Press Trust of India 3) ந.பிச்சமூர்த்தி 4) முதலை 5) யூகலிப்டஸ் மரம் 6) ஷெக்கல் 7) நத்தை. இதுபோன்ற அறிவார்ந்த தகவல்களை பெற Way2News-ஐ தொடர்ந்து படியுங்கள். பிறருக்கும் பகிருங்கள்.இன்றைய கேள்விகளுக்கு நீங்கள் எத்தனை சரியான பதிலளித்தீர்கள் என கமெண்ட்டில் சொல்லுங்கள்.
இந்தியர்களிடையே சர்க்கரை நோய் (நீரிழிவு) அதிகரிக்க காரணம், cakes, chips, cookies, crackers, fried foods, mayonnaise, margarine மற்றும் ultra processed உணவுகளை அதிகம் சாப்பிடுவது தான் என்று ICMR- MDRF இணைந்து நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. இவற்றில் நிறைந்திருக்கும் glycation end products (AGEs) எனப்படும் உட்பொருட்கள், நச்சுத்தன்மையை உண்டாக்கி சர்க்கரை நோய்க்கு காரணமாகிறது. மக்களே உஷார்!
Sorry, no posts matched your criteria.