India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருப்பதி கோயிலின் லட்டு பிரசாதம் அமோகமாக விற்பனையாகி வருகிறது. திருப்பதி லட்டுவில் மாட்டுக் கொழுப்பு கலக்கப்பட்டதாக அண்மையில் எழுந்த சர்ச்சை பெரும் பூதாகரமானது. இதுதொடர்பாக உயர்மட்ட விசாரணையும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், திருப்பதியில் பிரம்மோற்சவத்தை ஒட்டி, கடந்த 4 முதல் 11-ம் தேதி வரை 8 நாட்களில் 30 லட்சம் லட்டுகள் விற்பனை ஆகியுள்ளன. ரூ.26 கோடி காணிக்கை பெறப்பட்டுள்ளது.
3ஆவது T20 ஆட்டத்தில் வ.தேச அணிக்கு 298 என்ற இமாலய ஸ்கோரை இலக்காக வைத்துள்ளது இந்திய அணி. தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி இந்திய பேட்ஸ்மென்கள், வங்கதேச பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்து 297/6 ரன் குவித்தனர். சஞ்சு சாம்சன் -111, SKY -75, ரியான் பராக் -34, பாண்ட்யா -47, ரன்கள் குவித்தனர். இவ்வளவு பெரிய ஸ்கோரை வ.தேசம் நெருங்குமா?
மனிதன் சொல்ல இறைவன் கேட்பது ‘திருவாசகம்’
இறைவன் சொல்ல மனிதன் கேட்பது ‘கீதை’
மனிதன் சொல்ல மனிதன் கேட்பது ‘குறள்’
அருளாளன் சொல்ல ஞானிகள் கேட்பது
‘திருவருட்பா’
ஞானிகள் சொல்ல ஞானிகள் கேட்பது ‘திருமந்திரம்’
மகன் சொல்ல மகேசன் கேட்பது ‘பிரணவம்’
மனைவி சொல்ல கணவன் கேட்பது ‘வாழ்க்கை’
உங்கள் மனைவி சொல்வதை நீங்கள் கேட்பீர்களா? கமெண்ட்ல சொல்லுங்க.
இயற்கையின் அழகிய வெளிப்பாடுகளில் ஒன்றான அரோரா (aurora) எனப்படும் துருவ விண்ணொளி மாயாஜாலம் காட்ட தொடங்கியுள்ளது. அமெரிக்கா, கனடா, பிரிட்டன், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் இரவில் இந்த அரோராக்கள் காட்டும் வர்ணஜாலத்தின் photos வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. சூரியப் புயல் ஏற்படுத்தும் புவிகாந்தப் புயலால் வானத்தில் பர்ப்பிள், பிங்க், இண்டிகோ என பல வண்ணங்கள் வானை வண்ணமயமாக்கிக் கொண்டிருக்கின்றன.
தமிழகத்தில் சரஸ்வதி பூஜை கொண்டாடப்படுவதை போல, வட மாநிலங்களில் துர்கா பூஜை இன்று கொண்டாடப்படுகிறது. குறிப்பாக, மேற்கு வங்கத்தில் துர்கா பூஜை கொண்டாட்டங்கள் தீபாவளியை போல களைக்கட்டும். இந்நிலையில், அம்மாநிலத் தலைநகர் கொல்கத்தாவில் நடைபெற்ற துர்கா பூஜை நிகழ்ச்சியில் மாடலிங் பெண்கள் சிலர் அரைகுறை ஆபாச உடையுடன் மேடை ஏறியது பலரையும் முகம் சுளிக்க வைத்தது.
சிலருக்கு சாப்பிட்டதுமே வயிறு உப்புசம் ஆகி நெளிய ஆரம்பித்து விடுவார்கள். ஏப்பமும் வந்து கொண்டே இருக்கும். இதற்கு காரணம் அஜீரணம்தான். சாப்பிட்டதும் உடனே உட்காருவோருக்கும், படுப்பவர்களுக்குமே இந்த பிரச்னை ஏற்படுகிறது. சாப்பிட்டு முடித்ததும் அரை டம்ளர் சோம்பு கலந்த வெந்நீரை மிதமான சூட்டில் குடித்துவிட்டு, 10 முதல் 12 நிமிடம் மெதுவாக ஒரு குறுநடை போட்டாலே ஏப்பம், அஜீரணம் எல்லாம் ஓடிவிடும். Share It
கொடை வள்ளல் பட்டியலில் உலகின் எந்த பெரிய கோடீஸ்வரரும் இந்திய தொழில்துறையின் தந்தையான ஜாம்ஷெட்ஜி டாடாவை மிஞ்ச முடியாது. ஆம், இன்றைய பணமதிப்பில், ₹8.6 லட்சம் கோடி ($102.4 பில்லியன்) அளவுக்கு அவர் நன்கொடை வழங்கியுள்ளார். 2-ம் இடத்தில் பில்கேட்ஸ் – மெலிண்டா இணை ($74.6 பில்லியன்) உள்ளனர். கல்வி, மருத்துவ சேவைகளுக்கு இவ்வளவு சொத்துகள் அளித்த இவர், அண்மையில் மறைந்த ரத்தன் டாடாவின் கொள்ளு தாத்தா ஆவார்.
கவரப்பேட்டை ரயில் விபத்தில் சிலருக்கு காயம் ஏற்பட்டாலும், எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை. இதற்கு 2 விஷயங்கள் காரணமாக சொல்லப்படுகிறது. 1) கவரப்பேட்டை ஸ்டேஷனின் வளைவு காரணமாக, அங்கு ரயிலும் 75 km வேகத்தில் வந்ததால் மோதலின் தாக்கம் குறைந்தது. 2) கூட்ஸ் ரயிலில் கடைசி பெட்டியாக பிரேக் வேன் இருந்ததால், எக்ஸ்பிரஸ் ரயில் மோதிய அதிர்ச்சியை அது தாங்கிக் கொண்டதால், பயணிகள் ரயிலில் சேதம் குறைந்தது.
டாப்-500 நிறுவனங்களில் தொழில்பயிற்சி வழங்கும் மத்திய அரசின் PM Internship Scheme திட்டத்துக்கான பதிவு இன்று தொடங்கியுள்ளது. இதில் பயிற்சி பெறுபவர்களுக்கு மாதம் ரூ.5000 உதவித்தொகையுடன் manufacturing, management, maintanane, sales – marketing, operations உள்பட 20 துறைகளில் 1 ஆண்டுக்கு உலகத்தரமான பயிற்சி வழங்கப்படும். 10-ம் வகுப்பு முதல், ITI, Dip, Degree முடித்தவர்கள் வரை <
இந்தியா – வங்கதேசம் இடையிலான 3ஆவது டி20 ஆட்டம் இன்று ஹைதராபாத்தில் நடந்துவருகிறது. டாஸ் வென்ற இந்திய அணியின் சூர்யகுமார் யாதவ் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். முதல் இரண்டு ஆட்டங்களில் வங்கதேசத்தை அடித்து நொறுக்கிய டீம் இந்தியா, இந்த ஆட்டத்திலும் அபாரமாக வெல்லும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். இன்றைய ஆட்டத்தின் முடிவு எப்படி இருக்கும்? யார் இன்றைய போட்டியில் கலக்குவார்கள்?
Sorry, no posts matched your criteria.