India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
<<14343462>>வங்கதேசத்துக்கு<<>> எதிரான 3ஆவது போட்டியில் அதிரடியாக விளையாடி 111 ரன்கள் குவித்த சஞ்சு சாம்சனுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டுள்ளது. இத்தொடரில் 3 போட்டிகளிலும் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்களிப்பை அளித்த ஹர்திக் பாண்டியாவுக்கு ஆட்ட நாயகன் விருது அளிக்கப்பட்டுள்ளது. முதல் போட்டியில் 39, 2ஆவது போட்டியில் 32, 3ஆவது போட்டியில் 47 ரன்களை அவர் அதிரடியாக குவித்திருந்தார்.
<<14343462>>3ஆவது டி20<<>> போட்டியில் பவுண்டரிகள் மூலம் மட்டுமே இந்தியா 232 ரன்களை குவித்துள்ளது. அதேபோல், 297 ரன்களை குவித்து, டி20 கிரிக்கெட் வரலாற்றில் 2ஆவது அதிகபட்ச ரன் சேர்த்த அணி என்ற சாதனையை புரிந்துள்ளது. நேபாளம் (314 ரன்) முதலிடத்தில் உள்ளது. மேலும், 2ஆவது அதிவேக சதமடித்த இந்திய வீரர் என்ற சாதனையை சாம்சன் (40 பந்து) புரிந்துள்ளார். அப்பட்டியலில் ரோஹித் (35 பந்து) முதலிடத்தில் உள்ளார்.
இன்றிரவு 1 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்களின் பட்டியலை RMC வெளியிட்டுள்ளது. அதில், தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, கரூர், சிவகங்கை, திருச்சி, ராமநாதபுரம், தூத்துக்குடி, மதுரை, விருதுநகர், தென்காசி, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது. நாமக்கல், சேலம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும் எனக் கூறியுள்ளது.
* நாற்பது வயதுக்கு மேல் உள்ளவர்களில் பெரும்பாலானோர் தங்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவதே இல்லை. இவர்கள் பெரும்பாலும் இறைச்சி வகைகளில் மட்டனை கண்டிப்பாக குறைத்துக்கொள்ள வேண்டும். *இரவு நேரத்தில் கீரை உண்பதை தவிர்க்க வேண்டும். *பீட்சா, பர்கர் போன்ற துரித உணவுகளை தவிர்க்கவும். *வாழைக்காய், உருளைக்கிழங்கு போன்ற உணவுகள் மூட்டு பிரச்சனையை ஏற்படுத்தும் என்பதால் அவற்றை குறைத்துக்கொள்ளலாம்.
◙மேஷம் – காரியசித்தி
◙ரிஷபம் – நற்சொல்
◙மிதுனம் – சினம்
◙கடகம் – கவனம்
◙சிம்மம் – பாசம்
◙கன்னி – நம்பிக்கை
◙துலாம் – நலம்
◙விருச்சிகம் – நிம்மதி
◙துனுசு – வரவு ◙மகரம் – லாபம்
◙கும்பம் – பக்தி ◙மீனம் – மறதி
சமையலில் பயன்படுத்தப்படும் முக்கியப் பொருள்களில் வெந்தயமும் ஒன்று. வெந்தயத்தை அப்படியே சாப்பிடுவதைக் காட்டிலும் முளைகட்ட வைத்து சாப்பிடுவதால் வைட்டமின் C, பொட்டாசியம், இரும்பு, புரதம் ஆகிய சத்துகள் அதிகளவில் கிடைக்கின்றன. குறிப்பாக, இது முடி உதிர்தல் பிரச்னைக்கு சிறந்த தீர்வு அளிக்கிறது. இதயக்கோளாறுகள், மாதவிலக்கு பிரச்னை, மூலநோய், நீர்க்கடுப்பு, நரம்புத்தளர்ச்சி பாதிப்பையும் கட்டுப்படுத்துகிறது.
வங்கதேசத்துக்கு எதிரான 3ஆவது டி20 போட்டியில் சஞ்சு சாம்சன் புது சாதனை படைத்துள்ளார். 47 பந்துகளை எதிர்கொண்ட அவர், 111 ரன்களை குவித்தார். இதில் 11 பவுண்டரிகள், 8 சிக்சர்களும் அடங்கும். குறிப்பாக, ஒரே ஓவரில் 5 சிக்சர்களை பறக்கவிட்டு அனைவரையும் அவர் அசத்தினார். இந்த சதத்தின் மூலம், சர்வதேச டி20 போட்டியில் சதமடித்த முதல் இந்திய அணி விக்கெட் கீப்பர் என்ற சாதனையை சாம்சன் புரிந்தார்.
உத்தரகாண்ட் மாநிலம் ஹரிதுவாரில் உள்ள ரோஷ்னாபாத் சிறையில் இன்று தசரா நிகழ்ச்சி நடைபெற்றது. இதன் ஒருபகுதியாக நடந்த ராம்லீலா நாடகத்தில் சீதையை தேடும் படலம் வந்தது. அப்போது சீதையை தேடுவதற்காக, வானர சேனை வேடமிட்ட 2 கைதிகள் ஓடினர். ஆனால், அவர்கள் திரும்பவில்லை. இதையடுத்து, போலீசார் தேடிச் சென்ற போது, அவர்கள் சிறை சுவரை ஏறி குதித்து தப்பியது தெரியவந்தது.
மத்திய அரசின் நிர்வாக திறமையின்மையால் அடிக்கடி ரயில் விபத்துகள் நிகழ்வதாக CPM பாலகிருஷ்ணன் குற்றஞ்சாட்டியுள்ளார். 6 நாள்களுக்கு ஒரு விபத்து என்ற விகிதத்தில் ரயில்வே துறை இருப்பது மிகவும் ஆபத்தானது என எச்சரித்த அவர், பயணிகள் பாதுகாப்பை உறுதி செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். திருவள்ளூர் அருகே கவரப்பேட்டையில் நேற்று சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதியது குறிப்பிடத்தக்கது.
ஆண்கள் பெரும்பாலும் அணியும் V Shape உள்ளாடை, விதைப்பையில் அழுத்தத்தை ஏற்படுத்துவதோடு காற்றோட்டத்தையும் குறைக்கும். ஆனால், Boxer Type உள்ளாடையில் காற்றோட்டம் நன்றாக இருக்கும். எனினும், எந்த உள்ளாடையும் பாலிஸ்டர் கலந்த துணியில் இருக்கவே கூடாதாம். அதிலுள்ள Electrostatic, விந்தணு உற்பத்தியை வெகுவாக பாதிக்குமாம். இப்போது கோமணம் டைப்பில் வரும் காட்டன் உள்ளாடைகள் ரொம்பவே பெஸ்ட் என்கின்றனர் டாக்டர்கள்.
Sorry, no posts matched your criteria.