News October 13, 2024

சபரிமலையில் தரிசன நேரத்தை அதிகரிக்க முடிவு

image

சபரிமலை அய்யப்பன் கோயிலில் மகரவிளக்கு சீசனில் தரிசன நேரத்தை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மகரவிளக்கு சீசனையொட்டி அக்கோயில் நடை, நவ.15ஆம் தேதி திறக்கப்படவுள்ளது. இதுகுறித்து திருவிதாங்கூர் தேவஸ்தான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் இந்த ஆண்டு சீசன் முதலே தரிசன நேரத்தை 18 மணி நேரமாக அதிகரிப்பதென முடிவு செய்யப்பட்டிருப்பதாக தேவஸ்தான தலைவர் பிரசாந்த் தெரிவித்தார்.

News October 13, 2024

சைனஸ் தொல்லையை விரட்டி அடிக்கும் நொச்சி தேநீர்

image

மழைக்காலத்தில் ஏற்படும் சைனஸ், இருமல், மூக்கடைப்பு, ஜலதோஷம், தலைவலி, உடல்வலி போன்ற பிரச்னைகள் உள்ளவர்கள் நொச்சி தேநீரைப் பருகலாம் என சித்த மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். கைப்பிடி நொச்சி இலை, சுக்கு, மிளகு, துளசி, மஞ்சள், கிராம்பு, ஏலக்காய் பொடி சேர்த்து நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி, பனங்கற்கண்டு சேர்த்தால் மணமிக்க சுவையான நொச்சி தேநீர் ரெடி. இந்த டீயை எப்போது வேண்டுமானாலும் பருகலாம்.

News October 13, 2024

திருமணம் வரம் அருளும் ஒப்பிலியப்பர்

image

காவிரி பாயும் பெருமை வாய்ந்த சோழ மண்டலத்தின் திருநாகேஸ்வரத்தில் அமைந்துள்ளது ஒப்பிலியப்பன் திருக்கோயில். 108 திவ்ய தேசங்களில் மார்க்கண்டேயத் தலமென்ற பெருமை பெற்ற இந்த திருத்தலத்தில் மார்க்கண்டேய முனிவருக்கு திருமால் காட்சி தந்து, மோட்ஷம் அளித்ததாக புராணம் கூறுகிறது. இங்கு சென்று பூமாதேவி – ஒப்பிலியப்பன்னுக்கு துளசி மாலை சாற்றி, நெய் தீபமேற்றி வழிபட்டால், திருமணம் வரம் கிட்டும் என்பது ஐதீகம்.

News October 13, 2024

இந்திய அணிக்கு யார் நிரந்தர விக்கெட் கீப்பர்?

image

இந்திய கிரிக்கெட் அணியில் விக்கெட் கீப்பர் இடத்துக்கு கடும் போட்டி நிலவுகிறது. குறிப்பாக, டி20 வடிவ கிரிக்கெட்டில் ரிஷப் பண்ட், கே.எல். ராகுல், சஞ்சு சாம்சன், இசான் கிஷன் ஆகிய 4 பேர் இடையே போட்டி காணப்படுகிறது. இவர்களில், வங்கதேசத்துக்கு எதிரான நேற்றைய டி20 போட்டியில் சாம்சன் அதிரடியாக சதமடித்து கலக்கினார். இந்த 4 பேரில் யாருக்கு உங்கள் ஓட்டு? கமெண்ட்டை கீழே பதிவு பண்ணுங்க.

News October 13, 2024

மனித உரிமை போராளி G.N.சாய்பாபா மறைந்தார்

image

மனித உரிமை போராளி பேராசிரியர் G.N.சாய்பாபா காலமானார். தண்டுவட பாதிப்பால் உடலின் பல பாகங்கள் செயல் இழந்தபோதும் மனித உரிமை, ஜனநாயக செயல்பாடுகளில் அவர் தொடர்ச்சியாக ஈடுபட்டார். 2014ல் தன் மீது சுமத்தப்பட்ட UAPA வழக்கை பொய் என நிரூபித்து 2024இல் விடுதலையானார். தீவிர உடலியல் பிரச்னைகளால் ஹைதராபாத் NIMS மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவர், நேற்றிரவு பூவுலகை விட்டு மறைந்தார்.

News October 13, 2024

சேகுவாரா பொன்மொழிகள்

image

* மண்டியிட்டு வாழ்வதை விட நிமிர்ந்து நின்று சாவதே மேல்.
* விதைத்துக்கொண்டே இரு. முளைத்தால் மரம். இல்லையேல் உரம்.
* புரட்சி, மரத்திலிருந்து தானாக விழும் ஆப்பிள் அல்ல, நாம்தான் விழச் செய்ய வேண்டும்.
* உலகின் எங்கோ நடக்கும் முறையின்மைக்காக உன் மனம் கொதித்தால், நீயும் எனது தோழனே.
* எங்கெல்லாம் அடக்கப்பட்டோரின் இதயத் துடிப்பு கேட்கிறதோ அங்கெல்லாம் என் கால்கள் பயணிக்கும்.

News October 13, 2024

டி20 கிரிக்கெட்: வரலாறு படைத்தது இந்திய அணி

image

டி20 கிரிக்கெட்டில் அதிகமுறை எதிரணியினரை ஒயிட் வாஷ் செய்த அணி என்ற வரலாற்று சாதனையை இந்திய அணி புரிந்துள்ளது. இதுவரை இந்திய அணி 34 தொடர்களில் விளையாடியுள்ளது. இதில் எதிர் அணிகளை இந்திய அணி 10 முறை ஒயிட் வாஷ் செய்துள்ளது. அவற்றில் நேற்றுடன் முடிந்த வங்கதேச தொடரும் அடங்கும். இந்தியாவுக்கு அடுத்து பாக். (8), ஆப்கன் (6), ஆஸி (5), இங்கி. (4) அதிகமுறை எதிர் அணிகளை ஒயிட் வாஷ் செய்துள்ளன.

News October 13, 2024

ஆறுபோல மாறிய சஹாரா பாலைவனம்

image

50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு முதல்முறையாக சஹாரா பாலைவனத்தில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மொரோக்காவின் தென்கிழக்கு பகுதியில் வழக்கத்திற்கு மாறாக 2 நாள்களாக திடீர் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் அங்குள்ள சஹாரா பாலைவனத்தில் வெள்ளம் ஏற்பட்டது. குறிப்பாக, அங்குள்ள இரிகி ஏரி நிரம்பியது. இந்த திடீர் மழைக்கு 20 பேர் பலியாகி இருப்பதாக கூறப்படுகிறது.

News October 13, 2024

டீயுடன் புகைப்பிடிப்பது சரியா?

image

டீ குடிக்கையில் சிகரெட்டையும் சேர்த்து புகைப்பதை பலர் வழக்கமாக வைத்துள்ளனர். ஆனால் மருத்துவர்கள், இது தீவிர உடல்பிரச்னையை ஏற்படுத்தும் என எச்சரிக்கின்றனர். இதனால்,
புற்றுநோய், ஆண்மை யின்மை, பக்கவாதம், மாரடைப்பு, அஜீரணம், மலச்சிக்கல், அல்சர் ஆகியவை ஏற்படக்கூடும் என அவர்கள் தெரிவிக்கின்றனர். இந்த பழக்கத்தை கைவிட முடியவில்லையேல், மருத்துவரை உடனடியாக அணுகவும் அவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

News October 13, 2024

கோலியின் சாதனையை தவறவிட்ட சூரியகுமார் யாதவ்

image

டி20 கிரிக்கெட்டில் கோலியின் சாதனையை 3 இன்னிங்ஸ்களில் சூரியகுமார் யாதவ் தவறவிட்டுள்ளார். வங்கதேசத்துக்கு எதிரான 3ஆவது டி20 போட்டியில் அவர் 75 ரன் குவித்தார். இதன்மூலம் டி20இல் அதிவேகமாக 2,500 ரன்களை கடந்த 2ஆவது இந்திய வீரர் ஆனார். இதில் முதல் நபராக கோலி உள்ளார். கோலி 68 இன்னிங்ஸ்களில் 2,500 ரன்களை கடந்துள்ளார். ஆனால், சூரியகுமார் யாதவ் 71 இன்னிங்ஸ்களை எடுத்துள்ளார்.

error: Content is protected !!