India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கலைஞர் பூங்கா ஜிப்லைன் பழுது என தவறான தகவல் பரப்புவதா? என EPSக்கு அமைச்சர் M.R.K. பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார். தனக்கு வேண்டப்பட்டவர் ஆக்கிரமித்து வைத்திருந்த அரசு நிலத்தை மீட்டு பூங்காவாக மாற்றியதால் ஈபிஎஸ்க்கு கோபம் என விமர்சித்த அவர், ஜிப்லைன் என்பது பூங்காவில் புவி ஈர்ப்பு சக்தியை அடிப்படையாக கொண்டு செயல்படுகிறது, பழுதடைவதற்கு இதில் ஒன்றுமில்லை என்று தெரிவித்துள்ளார்.
விஜய், ரஜினி ரசிகர்கள் இடையேயான சண்டை இணையத்தில் வலுத்துள்ளது. சமீபத்தில் வெளியான ‘வேட்டையன்’ திரைப்படத்தை கடுமையாக ட்ரோல் செய்து, விஜய் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர். இதற்கு பதிலடியாக களம் இறங்கியுள்ள ரஜினி ரசிகர்கள், விஜய்யின் முந்தைய படங்களையும், அவரது அரசியல் கட்சியையும் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில், தனிமனித தாக்குதலுடன் கூடிய சில மீம்கள் முகச்சுழிப்பை ஏற்படுத்தியுள்ளன.
சிக்கனை நன்கு கழுவி தனியாக வைக்கவும். பின், வாணலியை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி வெங்காயம், தக்காளி, இஞ்சி பூண்டைச் சேர்த்து, பச்சை வாசனை நீங்கும் வரை வதக்கவும். பின் சிக்கனை சேர்த்து கிளறி, 2 நிமிடம் வேக வைக்கவும். பின், மஞ்சள், மிளகாய், கறி மசாலா தூள், உப்பு சேர்த்து கிளறிவிட்டு, 1/4 டம்ளர் நீரை தெளித்து மூடி வைத்து, மிதமான தீயில் 7-8 நிமிடம் வேக வைத்தால், சுவையான சிக்கன் கிரேவி ரெடி.
உலக பட்டினி குறியீட்டில் இந்தியா 105ஆவது இடத்தில் இருப்பதாக சர்வதேச ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதீத பட்டினி நிலவும் 42 நாடுகளில் இந்தியா, பாக்., ஆப்கன், வங்கதேசம், நேபாள், இலங்கை ஆகிய நாடுகள் இடம்பிடித்துள்ளன. இந்தியாவில் 5 வயதுக்கு முன் 2.9% குழந்தைகள் உயிரிழப்பதாக அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ளது. மேலும், 13.7% பேர் ஊட்டச்சத்து குறைபாடுடன் இருப்பதாகவும் தரவுகள் காட்டுகின்றன.
*நீருக்குப் பதிலாக பால் கலந்து செய்தால், கேசரி நல்ல மணத்துடன் இருக்கும். *நெய் கெட்டியாகிவிட்டால் ஸ்பூனை சூடாக்கி வைத்து எடுத்தல் சுலபமாக வரும். *கட்லெட் செய்யும்போது பிரட் தூள் இல்லையெனில் ரவையை மிக்ஸியில் அரைத்து பயன்படுத்தலாம். *சப்பாத்தி மாவுடன் சோயா மாவைச் சேர்த்து பிசைந்து செய்தால் சப்பாத்தி சாஃப்ட்டாக வரும். *பாலை லேசாக சூடுபடுத்தி சர்க்கரை கரைத்து உறை ஊற்றினால் தயிர் கெட்டியாக கிடைக்கும்.
‘முகமூடி’ திரைப்படம் தனக்கு லாபம் அளித்ததாக தயாரிப்பாளர் தனஞ்செழியன் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், இப்படத்தை விருப்பமே இல்லாமல் வெளியிட்டதாகக் கூறினார். படம் பிடிக்கவில்லை எனக் கூறியதால், மிஷ்கின் ப்ரொமோஷனுக்கே வராத சூழலில், தானும், ஜீவாவும் மட்டுமே ப்ரொமோஷன் செய்ததாகவும் தெரிவித்தார். தனக்கு இப்படம் லாபம் தந்தாலும், தியேட்டர் ஓனர்களுக்கும், விநியோகிஸ்தர்களுக்கும் நஷ்டம்தான் என்றார்.
➤முத்தரப்பு கால்பந்து தொடர்: இந்தியா, வியட்நாம் அணிகள் மோதிய நட்பு கால்பந்து போட்டி 1-1 என ‘டிரா’ ஆனது. ➤ஏசியான் டேபிள் டென்னிஸ்: மகளிர் இரட்டையர் பிரிவின் அரையிறுதிக்கு இந்தியாவின் ஆயிஹா – சுதிர்தா ஜோடி முன்னேறியது. ➤குளோபல் செஸ் லீக்: அலாஸ்கன் நைட்ஸ் (24 புள்ளி), திரிவேணி (18) அணிகள் பைனலுக்கு முன்னேறின. ➤ஹாங்காங் சிக்சஸ் தொடருக்கான இந்திய அணி ராபின் உத்தப்பா தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
➤இஸ்ரேலுடனான தூதரக உறவை முறித்துக் கொள்வதாக நிகரகுவாவின் துணை ஜனாதிபதி முரில்லோ அறிவித்துள்ளார் ➤இஸ்ரேலுக்கு ஆயுதம் உள்ளிட்ட உதவி செய்ய வேண்டாம் என அரபு நாடுகளுக்கு ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. ➤வங்கதேசத்தில் துர்க்கை பூஜை மண்டபம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ➤இஸ்ரேலுக்கு ஆதரவாக ஈரானைச் சேர்ந்த 6 எரிவாயு நிறுவனங்களுக்கு அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது.
‘கூலி’ படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு வரும் 16ஆம் தேதி சென்னையில் தொடங்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், ரஜினி நடிக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. பெரும் எதிர்பார்ப்புடன் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பை பல்வேறு கட்டங்களாக படக்குழு நடத்தி வருகிறது. முன்னதாக, இப்படம் LCUஇல் இல்லாமல், தனி ஜானரில் உருவாக்கவுள்ளதாக லோகேஷ் தெரிவித்திருந்தார்.
22 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், திருப்பத்தூர், தி.மலை, மதுரை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி, ஈரோடு, கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.