India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இன்று (அக். 14) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
ஜம்மு-காஷ்மீரில் அமலில் இருந்த குடியரசுத் தலைவர் ஆட்சி வாபஸ் பெறப்பட்டுள்ளது. 2019இல் ஜம்மு-காஷ்மீரின் மாநில அந்தஸ்து எடுக்கப்பட்டது. மேலும், சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. அங்கு அண்மையில் தேர்தல் நடத்தப்பட்டு புதிய அரசு விரைவில் பதவியேற்கவுள்ளது. இதற்கு ஏதுவாக குடியரசுத் தலைவர் ஆட்சி வாபஸ் பெறப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மகளிர் T20 WCயில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி போராடி தோல்வியடைந்துள்ளது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த AUS 151/8 ரன்கள் எடுத்து. பின்னர் களமிறங்கிய இந்திய அணி 142/9 ரன்கள் மட்டுமே எடுத்து 9 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்திய அணி தரப்பில் சிறப்பாக ஆடிய கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் (54*) தவிர மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர்.
*Idea பயன்படுத்துவோர் – *1#
*BSNL பயன்படுத்துவோர் – *888#
*Aircel பயன்படுத்துவோர் – *131#
*Videocon பயன்படுத்துவோர் – *1#
*Airtel பயன்படுத்துவோர் – *121*9#
*Reliance (JIO) பயன்படுத்துவோர் – *1#
*Virgin Mobile பயன்படுத்துவோர் -*1#
*Vodafone பயன்படுத்துவோர் – *131*0#
◙மேஷம் – ஆர்வம்
◙ரிஷபம் – உதவி
◙மிதுனம் – அலைச்சல்
◙கடகம் – ஆக்கம்
◙சிம்மம் – குழப்பம்
◙கன்னி – ஜெயம்
◙துலாம் – பாசம்
◙விருச்சிகம் – புகழ்
◙தனுசு – நம்பிக்கை ◙மகரம் – பரிவு
◙கும்பம் – வெற்றி ◙மீனம் – சினம்
ஹிந்துஸ்தான் உர்வரக் மற்றும் ரசாயனில் (HURL) 2024 ஆம் ஆண்டிற்கான பட்டதாரி பொறியாளர் மற்றும் டிப்ளமோ பொறியாளர் பயிற்சியாளர்கள் ஆகிய 212 பணிகளுக்கு அக்.21 வரை விண்ணப்பிக்கலாம். கெமிக்கல், எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல் மற்றும் இன்ஸ்ட்ரூமென்டேஷன் ஆகிய துறைகளில் பணியிடங்கள் உள்ளன. இதற்கு டிப்ளமோ, BE, BTech. முடித்த 18-30 வயதுடையவர்கள் <
உலகம் முழுவதும் எல்லா துறைகளிலும் தமிழர்களின் ஆதிக்கம் உள்ளது. விவசாயம் முதல் விண்வெளித் துறை வரை தமிழனின் பங்களிப்பு ஏராளம். அந்த வகையில், FIFA உலகக்கோப்பை தகுதிச்சுற்றில் உலகையே திரும்பிப் பார்க்க செய்துள்ளார் ஒரு தமிழர். சீனாவுக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலிய அணியில் Substitute-ஆக களமிறங்கிய நிஷான் வேலுப்பிள்ளை, முதல் கோல் அடித்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார். இவர் ஈழத்தமிழர் ஆவார்.
‘வேட்டையன்’ படத்தையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துவரும் படம் ‘கூலி’. இப்படத்தில் நாகார்ஜுனா, உபேந்திரா, சத்யராஜ், ஸ்ருதி ஹாசன் உள்பட பலர் நடித்து வருகின்றனர். இந்நிலையில், லோகேஷின் வேண்டுகோளுக்கிணங்க பாலிவுட் நடிகர் அமீர்கான் இப்படத்தில் நடிக்க சம்மதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் அவர் படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என்றும் கூறப்படுகிறது.
ஜார்க்கண்டைச் சேர்ந்தவர் கிஷோர் குமார் (38). இவருக்கு செண்டா தேவி (26) என்ற மனைவியும், 2 பெண் பிள்ளைகளும் உள்ளனர். டிராக்டர் டிரைவரான கிஷோர் குமார், தனது சக்தியை மீறி பிள்ளைகளை தனியார் பள்ளியில் படிக்க வைத்தார். இந்நிலையில், பணம் இல்லாததால் இந்த தசராவுக்கு தனது மனைவிக்கு புதிய சேலையை கிஷோரால் வாங்கித் தர முடியவில்லை. இதனால் மனமுடைந்த செண்டா தேவி, ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
தவெக மாநாட்டிற்கு வருபவர்கள் குடும்பத்துடன் வரவேண்டும் என பொதுச்செயலாளர் ஆனந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து தர்மபுரியில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அவர், வாகனங்களில் வரும் தொண்டர்கள் அமைதியாகவும், ஒழுக்கத்துடனும் நடந்துகொள்ள வேண்டும் என்றும், பைக்கில் வருபவர்கள் தலைக்கவசம் அணிய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். தவெக முதல் மாநாடு விக்கிரவாண்டியில் அக்.27ல் நடைபெறுகிறது.
Sorry, no posts matched your criteria.