India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ரஞ்சி கோப்பை போட்டியில் சவுராஷ்டிரா அணிக்கு எதிரான ஆட்டத்தில் தமிழ்நாடு அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. சவுராஷ்டிரா அணி முதல் இன்னிங்சில் 203/10 ரன்களும், தமிழ்நாடு அணி 367/10 ரன்களும் எடுத்திருந்தது. பின்னர் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய சவுராஷ்டிரா அணி 94 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. TN அணியில் சிறப்பாக ஆடிய சாய் சுதர்சன் 82, ஜெகதீசன் 100 ரன்கள் எடுத்தனர்.
மின் சேவைகள் மற்றும் தடை குறித்து, 24 மணி நேரமும் செயல்படும் 94987 94987 மொபைல் எண்ணில் மக்கள் தகவல் தெரிவிக்கலாம் என்று மின்சார வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு மிக கனமழை, அதிகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அப்போது மின்சேவைகள் தடைபட்டாலோ, மின்தடைகள் ஏற்பட்டாலோ இந்த எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு மின்வாரியம் கேட்டுள்ளது.
சென்னையில் மழை பாதிப்புகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இரவில் நேரில் ஆய்வு செய்து வருகிறார். சென்னையின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதுவரை சுமார் 5 சென்டி மீட்டர் மழை பெய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், பள்ளிக்கரணை பகுதியில் மழை பாதிப்புகளை உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்து வருகிறார். அதேபோல், மாநகராட்சி அதிகாரிகளும் நேரில் ஆய்வு செய்கின்றனர்.
இன்று (அக். 15) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
அஸ்வின், ஜடேஜாவை சமாளிப்பது கஷ்டம் என நியூசி. வீரர் ரச்சின் ரவீந்திரா கூறியுள்ளார். இந்தியாவில் IND அணியை வீழ்த்துவதும், அவர்களை எதிர்த்துப் போராடுவது சவாலாக இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், எதிரணியை பற்றி நியூசிலாந்து அணி அதிகம் சிந்திக்காது என்பதால், இந்தியாவை வீழ்த்துவோம் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இரு அணிகளுக்குமான டெஸ்ட் தொடர் அக்.16இல் பெங்களுரூவில் நடைபெறுகிறது.
தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடையும் என்று RMC தெரிவித்துள்ளது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் நிலவக்கூடும் என்றும், அடுத்த 2 தினங்களில், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வடதமிழகம், புதுச்சேரியை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளை நோக்கி நகரக்கூடும் எனக் கூறியுள்ளது.
பிரபல இந்தி காமெடி நடிகர் அதுல் பார்சுரே (57) காலமானார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சில ஆண்டுகளாக சிகிச்சை எடுத்து வந்த நிலையில் அவர் நேற்று உயிரிழந்தார். இந்தத் தகவலை எக்ஸ் பக்க பதிவில் வெளியிட்டுள்ள மகாராஷ்டிர சி.எம். ஏக்நாத் ஷிண்டே, பார்சுரே மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். ஷாருக்கான், சல்மான் கான், அக்சய் கன்னா உள்ளிட்ட பல்வேறு பிரபலங்களுடன் பார்சுரே நடித்துள்ளார்.
கன்னட தூதரக அதிகாரிகள் 6 பேரை இந்தியா வெளியேற்றியுள்ளது. 19ஆம் தேதிக்குள் இந்தியாவை விட்டு 6 பேரும் வெளியேற வேண்டுமென்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. முன்னதாக, இந்தியா தொடர்பான கன்னட அரசின் குற்றச்சாட்டுகளுக்கு கண்டனம் தெரிவித்து, அந்நாட்டில் உள்ள தனது தூதர், அதிகாரிகளை திரும்ப பெறுவதாக இந்தியா அறிவித்தது. அதேபோல், கன்னட தூதரை நேரில் அழைத்து கண்டனத்தை பதிவு செய்தது.
பருவ மழையை எதிர்கொள்ள அனைத்து வகையிலும் அரசு தயாராக இருப்பதாக அமைச்சர் KKSSR ராமசந்திரன் தெரிவித்துள்ளார். அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து முன்னெச்சரிக்கை பணிகள் நடைபெற்று வருவதாகவும், பொதுமக்களுக்கு பெரிய பாதிப்பு இல்லாமல் மழை பாதிப்பு சரிசெய்யப்படும் எனவும் உறுதியளித்துள்ளார். மக்கள் மளிகை உள்ளிட்ட பொருள்கள் கிடைக்காது என அச்சமடைய வேண்டாம் என தெரிவித்துள்ளார்.
சென்னையின் பல்வேறு பகுதிகளில் தற்போது இடி மின்னலுடன் மழை பெய்கிறது. சென்னை தேனாம்பேட்டை, அடையாறு, கிண்டி, ஆலந்தூர், வேளச்சேரி, மடிப்பாக்கம், சைதாப்பேட்டை, குரோம்பேட்டை, பள்ளிக்கரணை, ஈக்காட்டுத்தாங்கல், அண்ணாசாலை பகுதிகள், கோயம்பேடு, ஆவடி உள்ளிட்ட இடங்களில் கனமழை கொட்டுகிறது. இதனால், சென்னையின் பல இடங்களில் முன்னெச்சரிக்கையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.